Monday, November 15, 2010

விஜய்ப்படம் – திரையரங்கு உரிமையாளர்கள் ஆவல்


விஜயிடம் நஷ்டஈடு கேட்ட திரையரங்கு உரிமையாளர்கள் பலர் தற்பொழுது ‘கப்சிப்’ என அமைதி காத்து வருகின்றனர். விஜய்க்கு பக்கபலமாக பெரும் புள்ளிகள் இருப்பதாலும், விஜயை பகைத்து கொள்வதில் எந்தவித லாபமும் இல்லை என்பதாலும் அவர்கள் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லாது போய்விட்டது.விஜய் எந்தவித நஷ்டஈடும் தரதேவையில்லை என்றும், தாங்கள் இவ்விகாரத்தை பார்த்துக்கொள்வதாகவும் அபிராமி ராமநாதனும், ராம நாராயணனும் தெம்பூட்ட, நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார் விஜய்க்கு துணை நின்றார்.இயக்குனரோ மற்ற கலைஞர்களோ நஷ்டத்தில் பங்கு கொள்ளாதபோது ஒரு நடிகன் மட்டும் ஏன் பங்கு கொள்ள வேண்டும்? என்பது சரத்குமாரின் வாதம்.
பல திரையரங்கு உரிமையாளர்கள் தங்கள் அரங்கை பொதுவாக மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிடுவதால், அவர்கள் நஷ்டமடைய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் ‘காவலன்’ வரும்போது மௌனம் காக்கவே திரையரங்கு உரிமையாளர்கள் விரும்புகின்றனர். ‘காவலன்’ படத்தை வைத்து தாங்கள் இழந்ததை மீட்க வேண்டும் என்பது அவர்களின் திட்டம். ஆனால் விஜய் எதைப்பற்றியும் கவலைப்படாது வழக்கம் போல புன்முறுவலுடன் அமைதி காக்கிறார்

0 comments:

Post a Comment