இயக்குனர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவை செம ரகளையாக நடத்தி முடித்திருக்கிறார்கள். இதில் கலந்து கொள்வார்கள் என்று பெரிதும் நம்பப்பட்ட சிலர் வராமல் போனதுதான் அவர்களுக்கு ஏமாற்றம். |
என்றாலும் விஜய், விக்ரம் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் வந்தது சங்கத்திற்கு சந்தோஷம் அருளியிருக்கிறது. காலையில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத இசைஞானி இளையராஜா மாலை நேரத்தில் வந்திருந்தார். அவர் பேசுகிற போதுதான் உள்ளே வந்தார் விஜய். அதற்குப்பின் இளையராஜா பேச்சை யார் கேட்கப் போகிறார்கள்? கூட்டம் ஒரேயடியாக ஆரவாரிக்க, சற்று நேரம் பேசாமல் அமைதிகாக்கும்படி ஆனது ராஜாவின் நிலைமை.
பொதுவாகவே நடிகர்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. விழா துவங்குவதற்கு முன் வருவதே இல்லை இவர்கள். வந்தாலும் யாராவது முக்கியமானவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது திடுதிப்பென்று உள்ளே நுழைந்து சூழ்நிலையை ரசாபசமாக்குவார்கள். இதுவே அரசியல் மேடைகளில் முக்கிய தலைவர்கள் பேசும்போது நடந்திருந்தால் என்னாகியிருக்கும் என்பதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு இங்கே.
அதுபோகட்டும்... விழாவில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்வேன் என்று சொல்லியிருந்தாராம் முதல்வர். ஆனால் அவர் கடைசிவரைக்கும் வரவில்லை. அவரை வற்புறுத்தி அழைக்கவும் இல்லையாம் சங்கத்தின் மூத்த இயக்குனர்கள். காரணம், தேர்தல் நெருங்கப் போகிற இந்த நேரத்தில் கட்சி சாயம் எதற்கு என்று நினைத்ததுதான் காரணமாம்!
பசுமையை விரும்புகிற நமது ஊரில்தான் பச்சோந்தியையும் இகழ்வார்கள்! |
|
0 comments:
Post a Comment