Saturday, December 24, 2011

'நண்பன்' இசை வெளியீடு


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'நண்பன்'.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஜெமினி நிறுவனம் தயாரித்திருக்கிறது. '3 இடியட்ஸ்' இந்தி படத்தின் தமிழ் ரீமேக் இந்த 'நண்பன்'.

இப்படத்தின் இசை வெளியீடு நேற்று ( டிச.23) கோவையில் நடைபெற்றது.

விழாவில் இருந்து சில தகவல் துளிகள் :

* விழாவை மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்.

* விழாவிற்கு ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், அனுயா, விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

* Belly Dance உடன் நிகழ்ச்சி துவங்கியது. அதன் பின்னர் நடன இயக்குனர் ஷோபி நடன அமைப்பில் 'அஸ்கு லஸ்கு' பாடலுக்கு நடனக் குழுவினர் நடனமாடினார்கள்.

* ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன் அனைவரும் ஷங்கரைப் பற்றியும் விஜய்யைப் பற்றியும் பேசினார்கள். விஜய்யின் பெயரைச் சொல்லும்போதெல்லாம் கூட்டம் ஆரவாரம் செய்தது.

* ஜீவா பேசும்போது  " இவ்ளோ வெற்றிக்கப்பறமும் ரொம்ப சிம்பிளான நபர் விஜய். அவர்கிட்டேந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்., ஷூட்டிங்ல ஷங்கர் சார் எந்த விதமான டென்ஷனும் இல்லாம கூலா எல்லா விஷங்களையும் ஹாண்டில் பண்ணுவாரு.. ரொம்ப நல்லா இருந்தது 'நண்பன்' ஷூட்டிங் " என்றார்.

* படத்தின் First Cut, டிரெய்லர் திரையிடப்பட்டது.
* விஜய் : " நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருது. ண்ணா..! ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்! இந்த படத்துல ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்..! எல்லாரும் டயலாக் எல்லாம் பாத்துகிட்டு சீன் எடுக்க தயாரா இருக்கும்போது, எதையாவது சொல்லி சிரிக்க வெச்சிடுவார்.. செய்யறதை செஞ்சிட்டு அவர் பாட்டுக்கு நடிப்புல கவனமா இருப்பார்.. எனக்கு நடிக்கும்போது சிரிப்பு வந்துடும்..  சௌத்ரி சார் தயாரிச்ச சில படங்கள்ல நான் நடிச்சிருக்கேன்.  'நண்பன்' பட ஷூட்டிங்ல ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார்.. இந்த படத்தின் மூலமா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.. படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு !"

*  விஜய்யை மிர்ச்சி சிவா பாடச் சொல்ல,  " ஏதோ உன்னாலே.. " பாடலை விஜய் பாடினார்.  விஜய்க்கு ஆளுயரய மாலையும் கிரீடமும் அணிவித்தார்கள்.

* ஷங்கர் : " எந்திரன் ஷுட்டிங்ல  எதிர்பாராத விதமா ஒரு நாள் தாமதம் ஆக, நான் 3 இடியட்ஸ் படம் பார்க்கப் போனேன். அது நல்லா இருந்துச்சு.. அதுக்கப்பறம் அதை நான் தமிழ்ல டைரக்ட் பண்ண வாய்ப்பு வந்தப்ப, ஒத்துகிட்டேன்.

ரஜினிக்கு அப்பறம் கரெக்ட் டயத்துக்கு ஷுட்டிங்குக்கு வருவது விஜய் தான் ! மொதல் நாளே மறுநாள் சீன் என்னன்னு கேட்டுகிட்டு போயிருவாரு.. மறுநாள் ஹோம் வொர்க் பண்ணிகிட்டு ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாரு.. ரொம்ப சின்சியரான நடிகர் விஜய்.  விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் !"
* எஸ்.ஜே சூர்யாவை எந்திரன் படத்துல நடிக்க கேட்டபோது கூட மறுத்துட்டாரு.. ஆனா இந்த படத்துல நடிக்க ஒத்துகிட்டதுக்கு காரணம் அந்த ரோல் ! அதே மாதிரி, சத்யன் இந்த படத்துல அசத்தியிருக்காரு.. "

* SAC : " இன்று உலகமே திரும்பிப் பார்க்கிற என் மாணவன் ஷங்கரைப் பாராட்டுவது பெருமையா இருக்கு ! "

* விஜய் ஷங்கருக்கு பொன்னாடை, மாலை போட, ஷங்கர் மாலையை SAC-க்கு போடுகிறார்.

* இசையை SAC வெளியிட நடிகர் பிரபு பெற்றுக் கொள்கிறார்.

* திரையில் ஓடும் இசை வெளியீட்டைக் காண கொடுக்கப்பட்ட 3D கண்ணாடியை அணிந்து கொண்டு ரசிகர்கள் பார்த்தார்கள்.

0 comments:

Post a Comment