விஜயின் வேலாயுதம் வெளியாகிய நாள் தொடக்கம் விஜய் ரசிகன் என்பதால் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டேன் ஆனால் சில காரணங்களினால் பார்க்க முடியாமல் போனது அனால் இன்று படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தியேட்டருக்கு போனால் ஒரே கூட்டம் இன்று படம் பார்க்க முடியாத என்று நினைத்து ஒரு மாதிரி படத்திற்கு டிக்கெட் எடுத்து கொண்டு படம் பார்க்க போனால் படம் ஹவுஸ்புல் .ஒரு மாதிரி படம் பார்த்து முடிந்துது படம் பற்றி பார்ப்போம்.
மிகவும் நல்ல கதை அதற்கு ஏற்றா போல நல்ல திரைக்கதை அமைத்துள்ளார் ராஜா. கிராமத்து பால்காரன் விஜய் சரண்யா மோகன் தங்கையுடன் வாழ்ந்தது வருகிறார் .அவருக்கு முறை பொண்ணு ஹன்சிகா . தங்கையின் திருமணத்திற்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுக்க சென்னை செல்லும் விஜய் ஜெனிலியாவின் கற்பனை பாத்திரமான வேலாயுதம் செய்யும் வேலைகளை தவறுதலாக செய்து மக்களை காப்பாற்றுகிறார். மக்களும் வேலாயுதத்தை நம்புகின்றனர். விஜய்க்கு பிறகு தான் தெரிய வருகிறது வேலாயுதம் என நம்புவது தன்னை தான் என்று அதன் பின் விஜய் வேலாயுதமாக மாறினாரா மக்களை காப்பாற்றினரா? தங்கையின் திருமணம் நடந்தததா? தீவிரவாதிகளை அழித்தாரா? விஜய் யாரை திருமணம் செய்தார் என்ற பல கேள்விகளுடன் படம் சுவாரசியமாக நகர்கிறது. எந்த இடத்திலும் தொய்வு இல்லாத திரைக்கதை படத்திற்கு பக்க பலம். தேவையற்ற பில்டப் இல்லை . மாஸ் ஒபெனிங் இல்லை. பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கிட் என்பதால் படம் பார்க்கும் போது சபாஸ் சொல்ல வைத்தது பாடல் காட்சி. சண்டை காட்சியில் பிரமாண்டம் .படத்தொகுப்பு பிரமாதம். அதிகளவான பொருட் செலவில் தயாரித்த ரவி சந்திரனை ஏமாற்றாத படம் வேலாயுதம். மொத்தத்தில் வேலாயுதம் காமெடி சென்டிமென்ட் காதல் சண்டை பாடல் என அனைத்தும் நிறைந்தத தீபாவளி விருந்து.
விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்ஜா ராஜா ரவி விஜய் அன்டனி சுபா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பெரிய பாராட்டுகள்.
புள்ளி :8.5/10
அன்புடன் கிஷோர்
அன்புடன் கிஷோர்
0 comments:
Post a Comment