தற்போது சென்னை ஓபன் டென்னிஸ் ஆரம்பித்துள்ளது. இந்த டோர்னமெண்டில் பிரபலங்களுக்கான போட்டி நேற்று நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்தது. நடிகர் சூர்யாவும் ரோஹன் போபன்னாவும் ஒரு அணியாகவும், நடிகர் விவேக் ஓபராய் - பாகிஸ்தானின் ஆசியம் குரைஷி இன்னொரு அணியாகவும் களமிறங்கினர். இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே விவேக் ஓபராயின் அணி சிறப்பாக விளையாடி, சூர்யா அணியைத் தோற்கடித்தது. இதுகுறித்து பின்னர் சூர்யா கூறுகையில், "விவேக்கும் நானும் நீண்ட நாள் நண்பர்கள். என்னை அண்ணா அண்ணா என்றுதான் விவேக் அழைப்பார். அப்படிப்பட்ட நண்பனுக்காக இந்த மேட்சில் நான் தோற்றேன்..." என்றாரே பார்க்கலாம்! |




0 comments:
Post a Comment