Tuesday, January 4, 2011

புறக்கணிப்போம் என்று சொல்லறாங்களே அவங்ககிட்ட சில கேள்விகள்.



இன்று நான் இணைய தளங்களில் உள்ள செய்திகளை தேடி தேடி படிக்கும் போது ஒரு இணைய தள செய்தி தலைப்பு இவ்வாறு இருந்தது.


“இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்.எதிர்காலம் இதை சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டு கோள் “






அதில் காவலன் பட போஸ்டரை போட்டு போஸ்டருக்கு மேலே அங்குட்டு ஒன்டு இங்குட்டு ஒன்டா இரண்டு கோடு.ஹி..ஹி…அதுதாங்க காவலன் படத்தை புறக்கணிப்போம் என்ற போஸ்டர்.என்னடா திரும்பயும் வேதாளம் முருங்க மரம் ஏறிட்டு.உங்களுக்கு ஞாபகம் இருக்கோ தெரியாது விஜயின் வேட்டைகாரன் படம் வெளியாகுவதற்கு முன்பும் இவ்வாறான ஒரு புறக்கணிப்பு நடந்தது.அப்படத்தை புறக்கணிப்பதற்கான காரணமாக அவர்கள் (புலம்பெயர்...) கூறியது வேட்டைகாரனில் வரும் ஒரு சின்ன தாமரை பாடலில் ரப் பகுதியை இலங்கை பாடகர் இராஜ் பாடி இருந்தார்.அவர் பாடியதால் நாங்கள் அப்படத்தை புறக்கணிக்கின்றோம்.என்ன கொடுமை யோ..ஒரு கலைஞன் என்றால் கிணற்று தவளை போல இருக்காமல் இன்னும் இன்னும் தனது கலைதுறையையில் முன்னேறி செல்லதான் பார்ப்பான்.(இந்தியா சினிமா துறை)அவ்வாறு வந்த ஒரு வாய்ப்பை எவரும் தவறவிடமாட்டார்கள்.


சரி அது பழைய கதை அதன் பிறகு சுறாவிலும் ஏதோ யாழ்நகர் என்ற விடயம் எதிர்ப்பை கிளப்பியது.விஜய் படமென்றாலே ஏதாவது ஒரு பிரச்சனை பட வெளியாக முதலே வந்து கொண்டு இருக்கும்.எங்கடா இன்னும் புகையலயே என்று பார்த்துட்டு இருக்கையில சரவணா….வந்துடங்கயா… வந்துடங்கயா…
ஒன்ட தூக்கி பிடிச்சுடு.இப்போ பிரச்சனை காவலன் விஜய்க்கு இல்ல காவல்காரி அசினுக்கு.பழைய அசின் மட்டர்தான் இப்ப தூக்கி பிடிக்கிறாங்க அசின் இலங்கை சென்று மகிந்த அவரின் மனைவி கூட கொஞ்சி மிஞ்சினத இப்போ காவலன் படத்துடன் லிங்க் பண்ணறாங்க.


அது ஏன் விஜய் படத்துக்கு மட்டும் இவ்வளவு ஆர்ப்பரிப்பு ?


புறக்கணிப்போம் என்று சொல்லறாங்களே அவங்ககிட்ட சில கேள்விகள்.


பாடகி சின்மயி இராஜ்சின் இசையில் அவரின் வழிநடத்தலில் திருடா…என் திருடா… என்ற பாடலை பாடினார்.அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?அதே பாடகி எந்திரன் படத்தில் கிளிமஞ்சரோ பாடலை பாடினார்.ஏன் நீங்கள் எந்திரன் படத்தை புறக்கணிக்கவில்லை ?





விவேக் ஒப்ராய் இலங்கை சென்று மகிந்தரின் மகன் கூட சுற்றி திரிந்தார். தற்போழுது விவேக் ஒப்ராய் மற்றும் சூர்யா நடித்த ரத்த சரித்திரம் எல்லா திரையரங்கிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.அதை ஏன் புறக்கணிக்கவில்லை?



இதுபோன்று நிறைய விடயங்கள் உள்ளது.


அரசியலை சணாக்கியதனமாக அரசியல் மூலமாகவே வெற்றி கொள்ள வேண்டும்.இவ்வாறு கலைஞர்களை புறக்கணிப்பதாலும் விளையாட்டு அணியை புறக்கணிப்பதாலும் ஒரு மண்ணும் நடைபெற போவது இல்லை.


இலங்கை போருக்கு அதிகளவு இராணுவ தளபாடங்களை மறைமுகமாக வழங்கியது இந்திய மத்திய அரசு.புறக்கணிக்க வேண்டுமென்றால் இந்தியா புறக்கணியுங்கள்.இந்தியா செல்வதை தவிர்த்துகொள்ளுங்கள்.உதாரணத்துக்கு இலங்கை பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால் அதிகமான புலம்பெயர்ந்தவர்கள் இந்தியா வந்து திருமணத்தை செய்துவி;ட்டு பெண்ணையும் ஸ்போன்சரில் உங்கள் நாட்டுக்கு எடுத்துவிட்டு பிறகு இந்தியாவுக்கு எதிராகவே கோஷம்.(நான் இலங்கை தமிழன்)


ஒருவர் இருவரின் சுயநலத்துகாக அல்லது சுயலாபத்துக்காக ஒன்டுமொத்த புலம்பெயர் மக்களுக்கே அவப்பெயர்.
போர் என்ற அரக்கனால் நம்ஈழம் அழிந்தது போதும்.இனியாவது அது துளிர்விட்டு எழுச்சியடைய இடமளியுங்கள்.



தமிழனுக்குள் ஒற்றுமை இல்லாததால்தான் இவ்வளவு அழிவும்.
தமிழன் எப்போது ஒன்றாக சேருகின்றானோ அப்போதுதான் அவனுக்கு விடிவுகாலம்




நான் விஜய் ரசிகனாக இதை கூறவில்லை தமிழீழ தமிழனாக இதை கூறுகின்றேன்.

அரசியல் பற்றி எழுதவோ கதைக்கவோ எனக்கு பிடிக்காது 
ஆனாலும் அரசியல் பற்றி வாசிப்பேன்.
( இப்போ எழுத வச்சுட்டாங்களே…..)

0 comments:

Post a Comment