பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Friday, February 3, 2012

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்


கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று (2.2.2012) கோவை வந்தார்.
நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அங்கு படிக்கும் மாணவர்கள் சுந்தரம், ரகு ஆகியோருக்கு 2 மடிக்கணினி வழங்கினார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சிறப்பாக நடத்தி வரும் யுனைடெட் நிர்வாகி ராதாகிருஷ்ணனின் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.
அப்போது விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, எனது ரசிகர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர். நண்பன் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
நண்பன் படத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என்னுடன் நடித்த ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நண்பன் படத்தில் சத்யராஜுடன் நடிக்க அழைப்பு வந்தது. அவர் புதுவிதமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவிக்க, கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை சென்ட்ரல், கனகதாரா திரையரங்கிற்கு சென்று ரசிகர் முன் தோன்றி நண்பன் பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி

அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.   

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம்.  ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும்.  இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம்.  இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன். 

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது  மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

'துப்பாக்கி' ஷூட்டிங் ! : ஏ.ஆர்.முருகதாஸ்

நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. 'நண்பன்' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் இருந்ததால் 'துப்பாக்கி' படப்பிடிப்பு சற்று தள்ளிவைக்கப்பட்டது. 

'நண்பன்' வெளியான சமயத்தில் பெப்சி - தயாரிப்பாளர் சங்கத்தின் பிரச்னையால், 'துப்பாக்கி' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 'நண்பன்' படத்தில் விஜய்யின் நடிப்பை பார்த்துவிட்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் இணையத்தில் " விஜய் 'நண்பன்' படத்தில் அருமையாக நடித்து இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக் முடிந்தவுடன் அவருடன் பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது " என்று கூறியுள்ளார்.

சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான 'மெளனகுரு' படத்திற்கும்  "மௌனகுரு படம் பார்த்தேன்.. அருமையான படம்.. பார்க்க வேண்டிய படம் ! " என்று வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். 

Thursday, February 2, 2012

சதம் அடித்த வேலாயுதம்


விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் வேலாயுதம் . இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரித்தார். இப்படம் தரமான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்ததால் நல்ல விமர்சனங்களுடன் மாபெரும் வசூலையும் பெற்றது. இப்படத்தினால் ஐம்பது கோடிக்கு மேல் லாபம் அடைந்துள்ளனர் தயாரிப்பாளர் மற்று விநியோகிஸ்தர்கள் .இப்படம் விஜய் படங்களில் அதிகளவு வசூலை ஈட்டிய படம் என விநியோகிஸ்தர்கள் கூறினார்.

ஒரு படம் அதிகளவு திரையரங்குகளில் வெளியாவது சவால் அதிலும் வசூல் ஈட்டுவது மாபெரும் சவாலாக உள்ள நிலையில் விஜயின் இப்படம் நல்ல வசூலுடன் தமிழ் நாட்டில் முப்பதற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று நூறாவது நாளை கொண்டாடுகிறது. 
விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்யா மோகன் பாஸ்கர் சந்தானம் பாண்டியராஜன் பாண்டி என பெரிய நட்சத்திரப்பட்டாலமே நடித்த இப்படம் நல்ல கதையையும் தரமான தகவலையும் கல கலப்பான விடயங்களையும் கொண்டு அமைந்ததால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்தின் இசை இப்படத்திற்கு பிளசாக அமைந்தது. ஆடியோ விற்பனையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. ப்ரியனின் படப்படிப்பு சுபாவின் வசனம் அழகிய சண்டை காட்சி என அனைத்திலும் தரமாக அமைந்த வேலாயுதம் படத்திற்கும் அதன் வெற்றிக்கு உதவியவர்களுக்கும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். 




Wednesday, February 1, 2012

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்


4. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 87,800 ரூபா‌ய்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதன் மொத்த சென்னை வசூல் 28 லட்சங்கள்.
3. மௌனகுரு
சென்ற வார இறுதியில் 1.6 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆறு வாரங்கள் முடிவில் 1.47 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது.
2. வேட்டை
லிங்குசாமியின் இந்த லா‌ஜிக் இல்லா படம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய மே‌ஜிக் எதையும் நிகழ்த்தவில்லை. சுமாரான வசூல்தான். சென்ற வார இறுதியில் 25.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.6 கோடியை தனதாக்கியுள்ளது.
1. நண்பன்
மீண்டும் அதே முதல் இடத்தில் நண்பன். மற்ற இடங்களில் எப்படியோ… சென்னையில் படம் பட்டையை கிளப்புகிறது. இதன் சென்ற வார வசூல் 51 லட்சங்கள். இதுவரை இப்படம் 6.22 கோடிகளை வசூலித்துள்ளது.