பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Monday, May 23, 2011

இலியானாவிற்கு தொழில் தடை விதிக்கும்படி கேட்ட தயாரிப்பாளர்


இலியானாவை வைத்து இப்போது ஐந்து படங்களின் சூட்டிங் போய் கொண்டிருக்கிறது.
இது ஆந்திரா நிலவரம். தமிழ்நாட்டிலும் "நண்பன்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர். இப்படி பிசியாக இருக்கிற நடிகைக்கு தொழில் தடை விதிக்கும் படி கேட்டாராம் தமிழ் பட தயாரிப்பாளர், கரித்துக் கொட்டுகிறார்களாம் ஆந்திரா தயாரிப்பாளர்கள்.

மோகன் நடராஜன் தயாரிக்கும் படத்தில் விக்ரமுடன் ஜோடி சேர முப்பத்தைந்து லட்சம் முன் பணமாக கொடுத்தார் அவர். ஆனால் கால்ஷீட்டும் தரவில்லை, முன்பணத்தையும் திருப்பி தரவில்லையாம் இலியானா. அதை கேட்டு அலைந்த மோகன் நடராஜன் தான் அத்தனை மொழிகளிலும் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினாராம்.
உங்க ஒரு படத்துக்காக நாங்க நஷ்டப்படணுமா, வேணும்னா புதுப்படத்தில் நடிக்க தடை விதிச்சுக்கங்க. எடுக்கிற படத்தில் இடையூறு செய்யாதீங்க என்றார்களாம் ஆந்திராவில்.

வேலாயுதத்தில் பிரமாண்ட கிளைமைக்ஸ்


வேலாயுதம் படத்தின் விஜயின் ஆரம்பப்பாடலுக்காக 2 கோடி ரூபாவை செலவளித்தார் என ரவிச்சந்திரன் பேட்டியில் கூறியிருந்தார்.இப்படத்தின் கிளைமக்ஸ் காட்சியினை படமாக்கவும் அதிகளவான பணத்தை செலவளித்துள்ளாராம்.படம் மிகப்பிரமாண்டமாக வர வேண்டும் என்பதற்காகவும் ரசிகர்களை திருப்திப்படுத்தவுமே இவ்வாறு பணத்தை செலவளித்து படத்தை எடுக்கிறாராம் ரவி.
மிகப்பிரமாண்டமாக படத்தை எடுத்து வருகிறார் ராஜா .படத்தின் கிளைமக்ஸ் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என வேலாயுதம் படத்தின் நாயகிகளில் ஒருவரான ஜெனிலியா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இப்படத்தின்  பிரமாண்டம் தமிழ் சினிமாவை இன்னொரு பாதைக்கு கொண்டு செல்லும் என்கிறார் இப்படத்தின் சண்டைப்பாபயிற்சியாளர் டெல்மர்.
விஜய் இப்பொழுது கடுமையாக வேலாயுதம் படத்தில் இறுதிக்கட்டப்படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருக்கிறார்.இப்படத்தின் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு இன்றுடன் மூன்றாவது நாளாக சென்னையில் இடம்பெறுகிறது.இப்படத்தின் படப்பிடிப்பை பார்ப்பதற்கு அதிகளவான விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு இடம்பெறும் இடத்திற்கு தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.இந்த ப்படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட்புரடெக்ஸன் வேலைகள் ஆரம்பமாகிவிடும்.வேலாயுதம் படத்தின் பாடல்களை விஜயின் பிறந்த நாளில் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்பாடல் வெளியீடு பிரமாண்டமாக இடம்பெற உள்ளது.

"நண்பன் படத்திலிருந்து என்னை நீக்கக் காராணம்"



shankar-bharath-23-05-11நண்பன் படத்தின் ஆரம்ப கட்டத்தில், பரத்தையும் மூன்று ஹீரோக்களில் ஒருவராக ஃபிக்ஸ் செய்திருந்தாராம் ஷங்கர். திரக்கதை முழுதும் முடிந்த பின் பரத்தை லிஸ்டிலிந்ருது நீக்கிவிட்டார்.


இது பற்றி சொல்லும் பரத் "முதலில் நண்பன் படத்தில் நீ இருக்கலாம், அதனால் டேட்ஸ் ஃப்ரீ செய்து வைத்துக்கொள் என்று ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டது, அதன் பின் ஷங்கர் சாரே எனக்கு போன் செய்து, அந்த கதாபாத்திரத்திற்கு நீ பொருந்து வரமாட்டாய். மறுபடியும் வாய்பு வரும் போது உன்ன கண்டிப்பாக அழைப்பேன் என்று கூறினார்" என்று சொல்லியுள்ளார்.

Sunday, May 22, 2011

விஜய் இலியானாவின் முத்தக்காட்சி


மிகப்பெரிய பிளஸாக த்ரிரி இடியஸ் படத்தில் பேசப்பட்டது அமீர்கான் கரீனா கபூரின் கெமிஸ்ரி .இறுதிக்காட்சியில் இருவரினதும் முத்தக்காட்சி இதில் சிறப்பு ஆகும்.இப்படத்தின் ரீமேக் விஜய் நடிக்கும் நண்பன் படமாகும்.நண்பன் படத்திலும் இது போன்ற முத்தக்காட்சி இடம்பெறுமா என்பது தற்பொழுது ரசிகர் மத்தியில் எழுந்த கேள்வியாகும்.
இப்படத்தில் இந்த முத்தக்காட்சி எடுக்கப்படவில்லையாம் அதற்கு பதிலாக வித்தியாசமான முறையில் ரொமன்ரிக் காட்சியை எடுத்துள்ளாராம் இயக்குனர் சங்கர்.இந்த காட்சி வித்தியாசமாக அமைந்ததை எண்ணி பேசுகிறார்கள் நண்பன் படக்குழுவினர்.
இப்படத்தின் சில காட்சிகளை தமிழ் நாட்டு ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியுள்ளார் சங்கர்.தமிழ் நாட்டு மாக்களுக்குரிய பாணியில் உருவாக்கப்படுகிறது நண்பன்.விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சண்டைக்காட்சி ஒன்றையும் உருவாக்கியுள்ளார் சங்கர்.
இப்படத்தில் விஜய் சிறீகாந் ஜீவா பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.விஜயின் காதலியாக இலியானா நடிக்கிறார். விஜய் இலியானா இடம்பெறும் ஒரு பாடல் படமாக்கப்பட்டுவிட்டது.இலியானாவின் தந்தையாக சத்தியராஜ் நடிக்கிறார்.இப்படத்தின் இசையை ஹரிஸ் ஜெயராஜ் அமைக்கிறார்.

ஷங்கரின் நண்பன் ஒர்க் அவுட் ஆகுமா?



shankar-nanban-06-05-11
ஷங்கரை பொருத்தவரை மக்கள் அறிந்து வைத்துக்கொண்டிருப்பது பிரம்மாண்டமான இயக்குனர் என்பதுதான் முதல் பிறகுதான் புதுமை, டெக்னிக்கல் போன்ற‌ மற்றதெல்லாம். பாடல்களில் பிரம்மாண்டம் காட்ட முடியும் என்பதை உணர்த்தியவர் என்றும் இவரை சொல்லலாம், பழைய படங்களில் பாடல்களில் பிரம்மாண்டத்தை காட்டியிருந்தாலும் தற்போதைய ட்ரெண்டிற்கு ஷங்கர் மட்டுமே பாடல்களில் கூட பிரம்மாண்டத்தை காட்டுவதற்காக மெனக்க்கெடும் இயக்குனர் என்று சொல்லலாம். இவரின் படங்களில் வரும் பாடல்களின் பட்ஜெட்டில் இவர் தயாரிக்கக்கூடிய ஒரு படத்தையே எடுத்துவிடலாம் (உதாரணம்: வெயில், காதல் போன்ற படங்கள்) இப்படிப்பட்ட இயக்குனர் 3இடியட்ஸ் படத்தை அப்படியே எடுப்பாரா அல்லது தன்னுடைய பாணிக்காக மாற்றம் செய்வாரா என்பதுதான் சினிமா ஆர்வலர்களின் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.


ஒரு பாட்டில் ஒரு தெருவையே கலர் ஃபுல்லாக மாற்றுவது, ஐந்து கிமீ தார் சாலைக்கு பெயின்ட் அடிப்பது, லாரிலை மனிதர்கள் போல் மாற்றுவது, மேஜிக் போல் க்ராஃபிக்ஸ் காட்சிகளை பாடல் காட்சிகளில் காட்டுவது என்று பல்வேறு விசயங்கள் தான் ஷங்கரின் முத்திரை ஆனால் அது போல் நண்பன் படத்தில் செய்தால் படத்தின் தீம் கெட்டுவிடும் அதற்காக ஒரிஜினல் 3 இடியட்ஸ் படத்தை அப்படியே எடுத்தால் ஷங்கர் என்ற மாபெரும் இயக்குனருக்கு வேலை இல்லாமல் செய்தது போல் ஆகிவிடும் இந்த இரண்டு விசயங்களையும் தாண்டி ஷங்கர் மிகச்சிறப்பாக நண்பண் படத்தை வெளிக்கொண்டு வருவார்.