Sunday, May 13, 2012
Saturday, May 12, 2012
விஜய்யின் 3 புதிய படங்கள்
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். '7ஆம் அறிவு' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு 'மதராசபட்டினம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.
யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அடுத்த படம் ஜுலையில் ஆரம்பம்
விஜய் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கம் படம் யோகன். இப்படம் பற்றிய தகவல்களை கெளதம் மேனன் சென்ற வருடம் வெளியிட்டார். இதன் முதல் போட்டோக்களும் வெளியிடப்படன. இப்படம் ஜுலை மாதம் தொடங்கும் என கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கெளதம் நீ தானே பொன்வசந்தம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளிலும் விஜய் துப்பாக்கி பட வேலைகளிலும் உள்ளனர். இருபடங்களும் யூனில் முடிவடைந்து விடும். அடுத்த மாதம் யோகன் படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது.
விஜய் மட்டும் தான் தமிழ் பட உலகை சேர்ந்தவர் எனவும் ஏனைய நடிகர்கள் வெளிநாட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இசை ரகுமான். தயாரிப்பு போட்டன் கதாஸ் மற்றும் ஈரோஸ் நிறுவனம்.
விஜயின் அதிரடி முடிவு
துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.
சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..
முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.

Monday, May 7, 2012
விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்