பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, February 19, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்


துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் ரசிகர்கள் கேட்டதற்கு, துப்பாக்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று வெளிவரும் தகவல்களை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்-பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறினார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.
இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.
தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.
இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 15, 2012

காதல் கதாநாயகர்கள்


ரஜினி-லதா
பேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான்.

அஜித்-ஷாலினி
அஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கணக்கை எடுத்தால் அதற்கு பத்து விரல்கள் பத்தாது. உடனே மனதை ‘பறிகொடுக்கிற' சுபாவம் அவருடையது. அவருடன் இணைத்து கூறப்பட்ட நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால் அஜீத் மனம் விரும்பி கலயாணம் செய்து கொள்ள விரும்பியது ஷாலினிதான். இன்றைக்கு வரைக்கும் டார்லிங் என அழைத்து காதலை உறுதி செய்து கொண்டே இருப்பார் அஜித். அவரின் மோசமான தோல்விகளிலும் பாசத்துடன் உடன் இருந்து பேலன்ஸ் செய்தவர் ஷாலினி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தது குட்டி தேவதை - அவரது மகள் அனோஷ்கா.

விஜய் - சங்கீதா
தமிழ் சினிமாவில் பரபரவென முன்னேறி வந்த விஜய்க்கு காதல் வாய்ப்புகளும் களை கட்டிவந்தன. ஒட்டியும் ஒட்டாமலும் பழகும் விஜய்க்கு காதல் வந்தது லண்டனில் வாழ்ந்த சங்கீதாவிடம். விடுமுறைக்காக சென்ற விஜய் கண்ணில் பட்டதும் வந்தது காதல். சத்தம் போடாமலும், வெளியே தெரியாமலும் காதலை வைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழரான சங்கீதா மணமொத்து விஜய்யோடு வாழ்ந்து வருகிறார்.

தன் ஆண், பெண் குழந்தையோடு நீலாங்கரையில் வசிக்கும் விஜய் சந்கீதாவை காதல் செய்த வருடங்கள் நான்கு. இன்னும் அவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்கும் அன்பு, பிரியம் ஆச்சரியமானது.

சூர்யா - ஜோதிகா
சூர்யா-ஜோ திருமண நடந்தது சூர்யா போராடிப்பெற்ற விஷயம். அப்பாவின் சம்மதத்திற்காக வருடக் கணக்கில் காத்திருந்தார். ஒருவருக்கொருவர் அக்கரை செலுத்தி, பின்பு காதலாக உருவெடுத்த வரலாறு சூர்யாவுடையது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள். இருந்து மணம் முடித்த இப்போது சூர்யா வாழ்வது பூர்ணவாழ்வு. தன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஜோவின் பங்களிப்பைக் காண்கிறார் சூர்யா.

சூர்யாவின் திருப்பம் எடுத்த ‘காக்க காக்க' கூட ஜோவின் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் வந்த வாய்ப்புத்தான். இதை அவரே நேர்பட பேட்டியில் சொல்லியிருக்கிறா. காதல் கனிந்து இவ்வளவு நாட்களாகியும், அன்று பார்த்த அதே அன்னியோன்யத்தை நான் பார்ப்பது இவர்களிடமே.

மாதத்திற்கு ஒருமுறை வெளியே குழந்தைகளோடு புறப்பட்டுப்போய் வருவது, இரண்டாவது சனிக்கிழமை வீட்டுக்குள்ளேயே குழந்தைகளோடு கொண்டாட்டம், வருஷத்திற்கு 20 நாட்களாவது பாரின் ட்ரிப் என கண்டிப்பாக பேமிலியோடு செலவழிக்கிற காதல் மனிதர் சூர்யா.

இன்றுவரைக்கும் காதல் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியாக நெருக்கம் காட்டி நடிக்கக் கூட சங்கப்படுவார் சூர்யா. ஜோவிற்கு சங்கடம் அளிக்கும் எதிலும் ஆர்வம் காட்டாத மனது அவருடையது. முழுமையான சமர்ப்பணம், முழுமையான தன்னிறைவு கொண்ட காதல் குடும்பம் இது.

கிரிஷ்-சங்கீதா
இன்றைக்கு வரைக்கும் கிரிஷ்ஷின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் இவர்களுடையது. Made for each other ஜோடி. பார்க்கவே நன்றாக இருக்கும். நவீனமான ஜோடியாக இவர்களைச் சொல்லலாம். ரொம்பவும் ஜோவியல், நாட்டி, பொருத்தமான ஜோடி என்று கூட சொல்லலாம்.

ஜெயம்ரவி-ஆர்த்தி
ரொம்ப நாட்களாக காதல் ‘சீக்ரெட்' காத்தவர் ஜெயம்ரவி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் காதலுக்கு கிரின் சிக்னல் கிடைத்தது இவர்களுக்கு. அவ்விதமே என்றாலும் குழந்தையோடு இன்றைக்கு சந்தோஷமாக வலம் வருவது இந்த தம்பதியினரின் வழக்கம். நண்பர்களின் திருமணம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். காதலை உணர்ந்து, பிடிவாதமாக வீட்டில் அனைவருக்கும் உணர்த்தி வெற்றிபெற்று  காதல் ஜோதியை இன்னமும் தொடர்ந்த் அணையாமல் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் ஜோடி!

ஸ்ரீகாந்த்-வந்தனா
இவர்கள் மாதிரி காதலித்ததும் கிடையாது. திட்டிக்கொண்டதும் கிடையாது. அநாகரீகத்தின் உச்சிக்கு சென்ற சண்டை, அமைதியாக முடிந்து, இப்போது மிக அழகான வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள். மனம் இருந்தால், வழியும் இருந்தால் எப்பவும் மனது ஒன்றிப்போகலாம் என்பதற்கு ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடியை விட்டால் உதாரணம் சொல்ல ஆளில்லை. அன்றைய உறவுச் சிக்கல் மட்டும்தான், இப்போது எல்லோருக்கும் உதாரணமாக காட்டுகிற ஜோடி ஸ்ரீ-வந்தனா.

உதயநிதி-கிருத்திகா
கல்லூரியிலிருந்து, மணமேடை வரைக்கும் வந்த அருமையான காதல் உதயநிதியுடையது. மகனின் வேண்டுகோளில் இருந்த அன்பையும், ஈரத்தையும், காதலையும் பார்த்த ஸ்டாலின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, உதயநிதி வெற்றிக்கொடி கட்டினார். இன்றுவரைக்கும் காதலில் கண்ணியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருத்திகாவிற்கு காதலோடு முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி. சொந்தமான பத்திரிகை ஆரம்பித்தது முதல், குறும்படம் டைரக்ட் செய்தது வரை கிருத்திகா செயல்பட பார்த்துக் கொண்டு இருப்பது உதயநிதியின் இயல்பு.

விஜய்க்கு வில்லனா?

'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்


ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.