பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Friday, February 10, 2012

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்

கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.
தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.
இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்

Wednesday, February 8, 2012

துப்பாக்கி பிந்துமா?


துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.
இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார்.
தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட முருகதாஸ், காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அந்த குறும்படத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன்-மாணவியை முருகதாஸ் தேடி வருகிறார்.
குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Monday, February 6, 2012

துப்பாக்கி'யில் சத்யன்


விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும்  'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை  'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு  தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

Saturday, February 4, 2012

வேலாயுதம் நூறாவது நாள் வசூல் (Official)

விஜயின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம் . திபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனம் மற்றும் மக்களின் வரவேற்புடன் நூறாவது நாளை கொண்டாடியது. இப்பொழுதும் சென்னையில் இப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தின் வசூல் குறித்து  ஐங்கரன்  இனையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படம் 120 கோடியை சம்பாதித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. விஜய் ஹன்சிகா ஜெனிலியா சந்தானம் சாயா சிண்டே பாண்டியராஜன் சரண்யா மற்றும் பலர் நடிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் அன்டனி இசையில் ப்ரியனின் படப்பிடிப்பில் இப்படம் வெளிவந்தது. 

Friday, February 3, 2012

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்


கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று (2.2.2012) கோவை வந்தார்.
நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அங்கு படிக்கும் மாணவர்கள் சுந்தரம், ரகு ஆகியோருக்கு 2 மடிக்கணினி வழங்கினார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சிறப்பாக நடத்தி வரும் யுனைடெட் நிர்வாகி ராதாகிருஷ்ணனின் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.
அப்போது விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, எனது ரசிகர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர். நண்பன் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
நண்பன் படத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என்னுடன் நடித்த ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நண்பன் படத்தில் சத்யராஜுடன் நடிக்க அழைப்பு வந்தது. அவர் புதுவிதமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவிக்க, கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை சென்ட்ரல், கனகதாரா திரையரங்கிற்கு சென்று ரசிகர் முன் தோன்றி நண்பன் பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.