பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, December 3, 2011

நண்பனுக்காக வரும் அமீர்கான்

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் ' நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின் ரீமேக்  ' நண்பன்' .

ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள். 

3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.

டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.

துப்பாக்கி படப்பிடிப்பு ஆரம்பம்


விஜய் நடிப்பில் அடுத்து வர உள்ள படம் துப்பாக்கி. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வருகிற வாரம் தொடங்க உள்ளது. திங்கள் கிழமை பத்திரிகைகளில் இப்படத்தின் விளம்பரத்தை வெளியிட உள்ளனர்.
தயாரிப்பாளர் தாணு இது பற்றி அளித்த பெட்டியில் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கம் படத்தை எனது நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு துப்பாக்கி என்ற தலைப்பை வைத்துள்ளோம். இத்தலைப்பை பதிவு செய்து விட்டோம். அடுத்த வாரம் இப்படத்தின் ஏனைய விபரங்களை வெளியிட உள்ளோம்.
முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி  மும்பைக்கு நகர உள்ளது. இசை ஹரிஸ் ஜெயராஜ் . சந்தோசிவன் கமராமேன்.
தற்பொழுது இப்படத்தின் விளம்பர போட்டோவை தயாரித்து வருகின்றனர். இப்படத்தை 5 ம் திகதி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த உள்ளோம் என சந்தோசிவன் கூறினார்.
இப்படம் வெற்றியடைய எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் வாழ்த்துக்களை இங்கு பதியுங்கள்.

Wallpapers








































மிகப்பெரிய வெற்றியடைந்த நண்பன் முன்னோட்டம் (வீடியோ)


விஜயின் நண்பன் படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளது. இப்படத்தை சங்கர் இயக்குகிறார். இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை ஜெமின பிலிம்ஸ் வெளியிட்டது. ஜெமினி பிலிம்ஸ் வெளியிட்ட மயக்கம் என்ன படம் வெளியிட்ட திரையரங்குகளில் எல்லாம் நண்பன் பட முன்னோட்ட வீடியோ ஒளிபரப்பபட்டு வருகிறது. ரசிகர்களுக்கு பட முன்னோட்டம் படம் பார்க்கும் ஆவலை மேலும் மேலும் தூண்டியுள்ளது.
இப்பொழுது ஒரு படத்தின் வீடியோ வெளிவந்தால் அது யூ.டியுபில் பெரும் ஹிட்ஸ் கணக்கிடப்படுகின்றன. அதில் நண்பன் முன்னோட்ட வீடியோ முன்னிலையில் உள்ளது. அதிகளவான ரசிகர்கள் பார்வை இட்டுள்ளனர்.
இப்படத்தில் வரும் அனைவரும் மிகவும் வித்தியாசமாக கலக்கியுள்ளனர். சங்கர் கிந்தி 3  இடியட்சை விட சிறப்பாக இயக்கியுள்ளார் என அவ் முன்னோட்டமே காட்டுகிறது.




உறுதிப்படுத்தபட்ட நண்பன் பாடல் வெளியீட்டு திகதியும் இடமும்


நண்பன் பாடல் வெளியீடு திகதியை ஜெமினி பிலிம் நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 ம் திகதி நேரு ஸ்டேடியம் சென்னையில் இடம்பெற உள்ளது.
விஜய் மற்றும் சங்கர் இணையும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பாடல் 14 ம் திகதியும் படம் பொங்கல் வெளியீடாகவும் வெளிவர உள்ளது.
இப்படம் 3  இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். இதில் விஜய் ஜீவா சிறீகாந்த் இலியானா சத்தியராஜ் சத்தியன் லோரன்ஸ் ஜே. சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஹரிஸ் ஜெயராஜ் சிறந்த இசையை வழங்கியுள்ளார். பின்னணி இசை பெரிதும் பேசப்படும் எனவும் கூறியுள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக வந்ததுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.பாடல்களை 14ம் திகதி முதல் கேட்கலாம்.