பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, September 10, 2011

ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத்துக்கு அழைப்பு: நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது: உறுப்பினராகாத நடிகைகளுக்கு தடை


நடிகர் சங்க பொதுக்குழு நாளை காலை 10.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கிறது. தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதால் முதல் தடவையாக சங்க வளாகத்துக்கு வெளியே இப்பொதுக்குழு கூடுகிறது.
 
நடிகர் சங்கத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
 
ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத், விஷால், பரத், ஜீவா, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
 
இப்பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் புதுப்படங்களுக்கு பூஜை போட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுப்படங்களில் நடிக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
 
நடிகர், நடிகைகள் அனைவரும் நடிகர் சங்கத்தில் கண்டிப்பாக உறுப்பினராக வேண்டும் என்று நடிகர் சங்கம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. ஆனாலும் வடக்கில் இருந்து வந்த புது நடிகைகள் இன்னும் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. உறுப்பினராகாதவர்களுக்கு நடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
 
நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போன்றோர் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Murugadoss gets ready for Vijay film

With two big tasks before AR Murugadoss getting completed by this month, the director is expected to start his next film soon, for which he would join hands with Ilayathalapathy Vijay for the first time.

"Murugadoss's maiden production venture Engeyum Eppodhum is seeing the light of the day on September 16. Six days after that, the much awaited audio launch of his 7aam Arivu will take place on September 22," sources say.

Though the Suriya-starrer is scheduled to release in the last week of October for Deepavali, the director will be technically free from September last week itself. So he would start the Vijay-starrer in October for sure, they add.

Meanwhile, Murugadoss has started aggressive promotion campaigns for 'Engeyum Eppodhum', which is produced by him by joining hands with Hollywood giant Fox Star. Directed by his former associate Saravanan, the film has Jai, Anjali, Sharvanand and Ananya in lead roles.


Rumours on Ileana?

Kollywood grapevine was abuzz that during the shoot of 'Nanban', Ileana fractured her leg while practicing a dance step under choreographer Farah Khan's guidance. However, all that has been rubbished as baseless rumours by the team.

While Ileana was shooting for 'Nanban', it was rumoured that the lead lady fractured her leg and she will not able to shoot for a couple of weeks!

When the team came to know of this, they expressed that 'Nanban' shoot took place recently at AVM Studios with Vijay and Ileana and that Ileana is perfectly fine. They also added that the shoot is going as per their schedule.

'Nanban' is the Tamil remake of Bollywood blockbuster '3 Idiots' and has Vijay, Srikanth, Jiiva, Ileana and Sathyaraj in the lead roles. The movie is directed by Shankar with music by Harris Jayaraj, it is slated for a Diwali release.

மீண்டும் பொதுக்குழு கூடும் எஸ்.ஏ.சந்திரசேகர் பிடிவாதம்


கடந்த 4 -ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டS.A.Chandrasekarமுடிவு செய்திருந்தார் தற்போதைய பொறுப்பு தலைவரான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால் இந்த பொதுக்குழுவை கூட்டக் கூடாது என்று சங்கத்தில் பலத்த எதிர்ப்பு. நேரடியாக தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். இந்த பொதுக்குழு கூட்டும் முடிவுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்றார்கள். இதற்கிடையில் தனது சொந்த வேலை காரணமாக வெளிநாடு சென்றுவிட்டார் எஸ்.ஏ.சி.
3-ந் தேதி இரவுதான் அவர் சென்னை திரும்புவார் என்ற நிலையில் தயாரிப்பாளர் பாபு கணேஷ் என்பவர் சென்னை நகர காவல் துறை ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் 300 பேர் மட்டுமே அமரக்கூடிய இடத்தில் 1900 பேரை கூட்டுவது மோதலுக்கு வழிவகுக்கும். எனவே பெரிய இடம் ஒன்றில் இந்த பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட வேண்டும் என்றார். உடனே அந்த இடத்தில் பொதுக்குழுவை நடத்த அனுமதி மறுத்தது காவல்துறை.
இந்த இடைபட்ட நேரத்தில் நேரடியாக தேர்தல் தேதியை அறிவித்தார்கள் போட்டி குழுவை சேர்ந்தவர்கள். இவ்வளவு களேபரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இன்னொரு அதிரடியாக வந்திருக்கும் தகவல் இதுதான். வருகிற 11- ந் தேதி சிறப்பு பொதுக்குழுவை கூட்ட முயல்கிறாராம் எஸ்.ஏ.சி. இந்த கூட்டத்தில் முக்கியமான சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போல தகவல் வெளியாகிறது.
கட்டி உருள்வது, மண்டை உடைபடுவது போன்ற அடிஷனல் அவஸ்தைகள் அன்று அரங்கேறும் போல் தெரிகிறது. கண் விழித்துக் கொள்ள வேண்டும் காவல்துறை

Friday, September 9, 2011

நண்பன் படப்பிடிப்பில் ஏற்பட்டது பிரச்சினை


பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் சின் தமிழ் ரீமேக் ஆகும்.

ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இலியானா பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப் பயிற்சியை அளித்தார். அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்தார். டாக்டர்களை வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும் எனவே சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் ஐதராபாத் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.