பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Thursday, September 8, 2011

சக்‌ஷேனாவுடன் கூட்டு சேர்ந்த திமுக புள்ளிகள் :சக்தி சிதம்பரம் புகாரில் வெளிவரும் தகவல்கள்!

தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சக்‌ஷேனா, அதிமுக ஆட்சி முடிகிற வரை வெளியே வரமுடியுமா என்பது சந்தேகம்தான். காரணம் கோலிவுட்டின் முக்கியகமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவரான ஷக்தி சிதம்பரம், கதறித்துடித்தபடி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்திருகிறார். விஜய் நடித்த காவலன் படத்தின் ஒட்டு மொத்த உரிமையையும் வாங்கி சந்தோஷமாக விநியோகிக்க கோடி கோடியாக கடன் வாங்கி மாட்டிக்கொண்ட வகையிலும், எந்திரன் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையை வாங்கி விநியோகித்த வகையிலும் சக்‌ஷேனாவால் மொத்தமாக போண்டி ஆகி விட்டாராம் ஷக்தி சிதம்பரம். இவர் தற்போது வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருகிறாராம்.

எப்போதுமே மீடியாவிடம் வெளிபடையாக நடந்து கொள்ளும் ஷக்தி சிதம்பரம், தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில்…. “ நான், தமிழ் திரையுலகில் 20 வருடங்களாக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தொழில் செய்து வருகிறேன். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனாவிடம் இருந்து ரூ.4 கோடிக்கு விலைபேசி வாங்கினேன்.
ரூ.4 கோடி பணத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால் 8 சினிமா தியேட்டர்களில் அந்த படத்தை திரையிட வேண்டும். ஆனால் அதிகம் வசூலாகும் ஒரு தியேட்டரை எனக்கு கொடுக்காமல், 7 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தனர். இதனால் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டபோது, சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் என்னை மிரட்டினார்கள். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.1 கோடியே 60 லட்சத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன்.
அதே எந்திரன் படம் விநியோக உரிமையை செங்கல்பட்டு ஏரியாவில் நான் எடுத்துள்ளதை அறிந்து, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரன் என்பவரும் அந்த படத்தை வெளியிடுவதில் என்னோடு கூட்டணி சேர்ந்துகொள்வதாக கூறினார்கள். அதற்காக ரூ.2 கோடி தருவதாகவும் சொன்னார்கள்.அதற்கான ஒப்பந்தம் போடுவதாக வெற்றுத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். செங்கல்பட்டு ஏரியாவில் எந்திரன் படம் விநியோகத்தையும், அதன் கணக்கு வழக்குகளையும் தினகரனே கவனித்துக்கொண்டார். பின்னர் திருவள்ளூரில் எனது மாப்பிள்ளைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தினகரன் வாங்கிக்கொண்டார். ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.55 லட்சம் மதிப்புள்ள நிலம் என்று குறைவாக மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்துகொண்டார்கள்.
எந்திரன் படத்தில் வசூலான பணத்தையும் எனக்கு தரவில்லை. நிலம் வாங்கியதற்கான பணத்தையும் எனக்கு தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரனும் ஒரு அறையில் அடைத்துவைத்து மிரட்டினார்கள். அடியாட்களை ஏவிவிட்டு என்னை அடித்து உதைத்தனர். இதுதொடர்பாகவும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சக்‌ஷேனா ஒரு மாபியா போலவே செயல்பட்டவர் என ஏற்கனவே சினிமா வட்டாரத்தில்  கிசுகிசுக்கப்பட்டது, ஷக்தி சிதம்பரத்தின் இந்த புகார் மூலம் தெரிய வருகிறது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர்.

விஜய் அழைப்பு


சீமான், விஜய், இணைந்து படம் பண்ணும் தகவல்கள் பல மாதங்கள் முன்பே கசிந்தது. படத்தின் பெயர் பகலவன் என்றனர். ஆனால் கவுதம் மேனன் திடீரென குறுக்கிட்டு விஜய் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு செய்தார். 
சீமான் படம் அப்படியே நின்றது. நீண்ட இடைவெளிக்கு பின் சீமானை விஜய் திடீரென அழைத்து மூன்று மணி நேரம் பேசி உள்ளார். இதன் மூலம் அவர்கள் இணைவது உறுதி படுத்தப்பட்டு உள்ளது.

Wednesday, September 7, 2011

Velayutham First Look















சினிமாவில் எனக்கு வாழ்க்கை கொடுத்தது நடிகர் விஜய்: டைரக்டர் பேரரசு பேட்டி


ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் பிரப்ரோடு ஸ்ரீயாளி ஓட்டலில் அரசு பள்ளிகளில் படிக்கும் 250 ஏழை மாணவ-மாணவிகளுக்கு 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீ அவதார் ஜூவல்லர்ஸ்-சா£?ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
 
ஸ்ரீவாசவி வெங்கடேசன், தாய் எண்டர்பிரைசஸ் குருநாதன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். முன்னதாக டைரக்டர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது:-  
 
நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை.
 
தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. விரைவில் சிவகங்கை என்ற படத்தை இயக்கவுள்ளேன். அது நிச்சயம் விருதை பெற்று தரும்.
 
நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாகவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். அவருக்கான கதை தயாராக உள்ளது.
 
ராணா படத்துக்கு பின்னர் ரஜினியை சந்திப்பேன்.தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் திருட்டு சி.டி.யில் பாடம் பார்ப்போரின் எண்ணிக்கை குறையும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கவிதாலயம் விழாவில் பரத நாட்டிய ஆசிரியைகள் யெசுதா கேசவன், தாரணி சண்முகம், சித்ரா சிவகுமார், ரேணுகா ஸ்ரீ ஆகிய ஆசிரியைகளின் 100 மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதாலயம் ராமலிங்கம் செய்திருந்தார். முன்னதாக பேரரசு ஈரோடு வடக்கு ரோட்டரி  கிளப் சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ரோட்டரி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் தலைவர் சக்திநல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, September 6, 2011

மீண்டும் தொடங்கியது பகலவன்

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பகலவன்' படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என்று தமிழ் திரையுலகில் பரபர பட்டிமன்றமாக அடிபட்டது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு.  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு விவகாரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் வேலைகளில் தீவிரமாக இருந்த சீமான்,  உடனடியாக விஜய்யை சந்தித்தார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க,  மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.

"பகவலன் படத்தின் கதையை ஏற்கனவே விஜய் கேட்டு விட்டார். அதன் க்ளைமாக்ஸ் 'வேலாயுதம்' படத்தின் காட்சியை போலவே இருந்ததால் அதை மாற்றக் கோரினார். அதன் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விளம்பரம் வெளியாக,  சீமான் அப்செட்.

இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு சீமானை சமாதானப்படுத்தி கதையை மாற்றி எழுதுங்கள். தம்பி விஜய் உங்கள் இயக்கத்தில் நடிப்பது உறுதி என நம்பகம் வார்த்தார். இதையடுத்து,  அடுத்த ஒரு சில நாட்களிலேயே க்ளைமாக்ஸை அட்டகாசமாக மாற்றி எழுதினார் சீமான்.

இது தாணுவிற்கு மிகவும் பிடித்துவிட, அது குறித்து விஜய்யிடம் சிலாகித்து பேசி இருக்கிறார். அதன் பிறகே சீமான் - விஜய் சந்திப்பு நடந்து இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த  உடனேயே 'பகலவன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் " என்கிறார்கள் சீமானின் நெருங்கிய புள்ளிகள்.