பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, September 6, 2011

Nanban Special


Anything that happens with director Shankar's ventures make headlines instantly and his latest offing 'Nanban' with the top young heroes of the Tamil film industry is no exception. The latest news flowing out of the 'Nanban' camp is that Shankar has come out with a creative icon for his 'Nanban.'
This symbol will be more or less like a logo for the film reveal sources close to the unit and they are also confident that it will be a hit with the movie goers. The symbol will be the three lead characters back-to-back with Vijay in the centre, and Jiiva and Srikanth on his either sides. The picture shows the stars adorning a crown and decked in jewellery all inclusive of the 'kundalas' (ear rings), necklaces and vanky (for their biceps)!
And for that modern appeal the lead men are clad in T-shirts!
Sources close to the 'Nanban' team revealed that Shankar was looking for a right image or an icon similar to that of Bollywood's '3 Idiots' which had the lead stars sitting in specially customized chairs. The image as well as the chairs became a huge fad after the posters were out.
Shankar might have wanted a similar USP for his 'Nanban' and that's when the idea to come out with a Tamil version of his 'Nanban' icon might have struck him!

Monday, September 5, 2011

Vijay to dance with 50 international dancers

Vijay, Jeeva, Srikanth starrer Nanban shoot will be completed in the next ten days. This has been confirmed by director Shankar itself in his blog. The team has wrapped up the shoot of the film and is left with only one song which will be completed in the next 10 days.

It is known that the song will be canned on Ilayathalapathy Vijay where more than 50 dancers from various countries will be flying to Chennai this Monday to shake their legs with dancing legend Ilayathalapathy Vijay. The final editing of the film is also under progress and Shankar has asked Harris Jayraj to complete the songs for the audio release. In all aspects the audio is expected to hit the stores mostly in the month of October.

The film is the remake of the 2009 Bollywood blockbuster film 3 Idiots, which was adapted from the novel Five Point Someone by Chetan Bhagat. Nanban is also getting dubbed in Telugu.

Sunday, September 4, 2011

தீர்ந்தது விஜயின் பிரச்சினை


தன்னை கடவுளுடன் ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீஸுகளோ வெளியிட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், 'வேலாயுதம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகுதியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டியிருந்தார்கள்.

அதைப்பார்த்த அடுத்த வினாடியே ரசிகர்களை அழைத்து, ``இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது. அதை அகற்றி விடுங்கள்'' என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர்.

இனி இப்படி செய்ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார்கள்.   முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷமாக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்கவோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது.

நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மனிதர்களாக பார்ப்பவன். ஆயிரம் பேர்களை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் என்ன சாதி- மதம் என்று எனக்கு தெரியாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் என்ன சாதி-மதம் என்று எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான்.   ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட்டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.''

இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியிருக்கிறார்.

Saturday, September 3, 2011

விஜய் முருகதாஸ் இணையும் படத்தின் கதாநாயகி யார்?

விஜய்யின் அடுத்தபடம் முருகதாஸிற்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது. அடுத்து அவர் நடிக்கப் போவது ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில்தான்.

இந்தப் படத்துக்கான ஹீரோயின் வேட்டையை இப்போதே தொடங்கிவிட்டனர் படக்குழுவினர்.

பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இப்போதைய நிலவரப்படி, இந்தாண்டு கிங்ஃபிஷர் காலண்டரை அலங்கரிக்கும் மாடல் அழகியான ஏஞ்சலா ஜான்சன் நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர். தாயார் ஐஸ்லாந்துக்காரர்.

ஏற்கெனவே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க பேசியுள்ளனர். ஆனால் படம் தொடங்கும் முன்ேப இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், இந்திப் படத்தில் அறிமுகமாகும் முன்பே இவர் தமிழில் அறிமுகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

விஜய்க்கு வந்த சோதனை விடைதான் என்ன?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழா (28.08.2011) மதுரையில் நடந்தது. இந்த விழாவையொட்டி ரசிகர்கள் மேற்கண்ட பேனர்களை மதுரையில் வைத்திருந்தனர்.


இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த கண்ணன் கூறியதாவது,
இவர் திட்டமிட்டே கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளார். கிறிஸ்தவ மதத்தைச் சேர்நதவரான நடிகர் விஜய், எப்படி இந்து கடவுள்களான சிவனையும், முருகனையும் படைக்க முடியும்? தமிழகத்தின் அன்னா ஹசாரே என்று தன்னைத் தானே வர்ணித்து பேனர்களை வைக்கச் சொல்லும் விஜய், தனக்கு சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாகச் சொல்வரா? அந்த சம்பளத்திற்கு கட்டிய வருமான வரி கணக்கை காட்டுவாரா? அவருடைய கல்யாண மண்டபம் உள்ளிட்டவற்றிற்காக கட்டப்பட்டுள்ள வணிக வரி கணக்கை காட்டுவாரா? வேலாயுதம் படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக விஜய்யும், அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்து மதத்தை புண்படுத்தும் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். உடனடியாக இந்த பேனர்களை திருப்ப பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்காவிட்டால், எங்கள் கட்சி போராட்ட களத்தில் இறங்கும் என்று இந்து மக்கள் கட்சி கண்ணன் தெரிவித்துள்ளார்.