பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Wednesday, June 1, 2011

"விஜய்க்கு ஒரு பெரிய இடத்தைக்கொடுக்கும் "- ஜெயம் ராஜா


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதையானது கண்டிப்பாக விஜய்க்கு ஒரு பெரிய இடத்தைக்கொடுக்கும் என்றார் ஜெயம் ராஜா.விஜயினுடைய ரசிகர்கள் விஜயை எவ்வாறு எதிர்பார்க்கிறார்களோ அது போலவே இப்படத்தை நான் உருவாக்கினேன்.விஜய்க்காக விஜய் ரசிகனாக இருந்து உருவாக்கிய படம் வேலாயுதம் எனவே கண்டிப்பாக இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் இதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார் ராஜா.
நேற்று தனது பிறந்தநாளை விஜய் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடினார்.விஜய் ஒழுங்கமைப்பில் விழா சிறப்பாக நடந்தது.எவ்வாறு வேலாயுதம் படத்தை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பில் படத்தை தொடங்கினாரோ அதை விட பிரமாண்டமாக படத்தை எடுத்துவிட்டாராம் ராஜா.எவ்வாறு சாதரண மனிதன் ஹீரோவாகி தனது இலக்கை அடைகிறான் என்பதே கதை அதை பிரமாண்டமாக அமைத்துள்ளாராம் ராஜா.
விஜய் படங்களில் மிகப்பிரமாண்டமாக அதிக செலவில் உருவாகும் ப்டம் இதுவாகும்.இதற்காக விஜய் மேலும் பல சாகசங்களை படத்தில் நிகழ்த்தியுள்ளாராம் விஜய்.இவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்க உதவிய ரவிசந்திரனுக்கு நன்றியை கூறியுள்ளார் ராஜா.

நான் விஜய்யின் ரசிகை நடிகை சோனா

கவர்ச்சி பெருங்கடல் நடிகை சோனா, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர முடிவு செய்துள்ளாராம்.
வரலாறு காணாத கவர்ச்சி காட்டி நடித்தவர் சோனா. இப்போது உடம்பு தாறுமாறாக பெருத்துப் போய் விட்டதால் முன்பு போல அதிகப் படங்களில் சோனாவைக் காண முடியவில்லை.

கடந்த திமுக ஆட்சியின் போது கனிமொழி என்ற பெயரில் படத்தைத் தயாரித்தார். இந்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அதிமுக ஆட்சிக்கு நெருக்கமானவரான விஜய்யுடன் தன்னை இணைத்து செயல்பட அவர் முடிவு செய்துள்ளார். அதாவது விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறாராம்.

இன்று சோனாவுக்குப் பிறந்த நாள். இதை வித்தியாசமான முறையில் அவர் ஸ்டார் ஓட்டலில் கொண்டாடினார். அதாவது நடிகர் விஜய்யின் ரசிகர்களின் குழந்தைகளை வரவழைத்து அவர்கள் மத்தியில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் சோனா. பிறகு செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு விஜய்யைப் பிடிக்கும். நான் விஜய்யின் ரசிகை. எனவே தான் விஜய் ரசிகர்களின் குழந்தைகளுக்கு மத்தியில் நான் பிறந்த நாள் கொண்டாடினேன். விரைவில் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேரப் போகிறேன்.

அவரது அரசியல் நடவடிக்கைகளை ஆதரிப்பேன். பிறகு எனது வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கப் போகிறேன். அதற்கான முன்னேற்பாடுகள் ஜரூராக நடக்கிறது. தமிழ் தவிர இந்தி, தெலுங்கிலும் இதை வெளியிடுவேன். எனது கதாபாத்திரத்தில் நடிக்க நடிகையைத் தேர்வு செய்து வருகிறேன் என்றார் சோனா.

எந்திரன் இடத்தில் நண்பன்


சன் ஸ்ரூடியோவில் விஜயின் நண்பன் பட படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.தமிழில் அதிகளவான வசூலைக்குவித்த எந்திரன் படத்தின் காட்சிகளை படமாக்கிய இடத்திலே இப்படப்பிடிப்பும் இடம்பெற உள்ளது.சங்கருக்கு அவ்விடம் பிடித்ததாலும் ஏற்கனவே பாக்ஸ் ஒபிஸை கலக்கியதாலும் சென்டிமென்டாய் அவ்விடத்தை தெரிவுசெய்துள்ளார் சங்கர்.சன் ஸ்ரூடியோவில் சில கலை வேலைகளை நடைபெறுகிறது.அது முடிந்தவுடன் சங்கர் அங்கு படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்.விஜய் இலியானா ஜீவா சத்தியராஜ் சிறீகாந்த் ஆகியோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.விஜயின் நண்பன் படத்துக்காகவே அங்கு கலை வேலைகள் இடம்பெறுகின்றன.விஜய் இப்படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார்.இங்கு படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் வெளிநாடு செல்ல உள்ளனர் நண்பன் குழுவினர்.

விஜய்க்கு பதில் சிம்புவா?


simbu-vijay-01-06-11


அமீர் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் கண்ணபிரான். நீண்ட நாட்களாக விஜய்க்காகவே இக்கதையை பட்டைதீட்டி வைத்திருக்கிறார் இயக்குனர் அமீர். சமீபத்தில் விஜய்யிடம் இப்படத்தின் முழு ஸ்கிர்ப்படியும் சொல்லிவிட்டார். விஜய்க்கு தற்போது இருக்கும் கமிட்மென்ட் அனைத்தையும் முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் சிம்புவுக்கு அமீர் ஒரு கதை சொன்னதாகவும் அது விஜய் நடிக்கவிருந்த கண்ணபிரான் கதைதான் என்று கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதை அமீர் தரப்பு மறுத்திருக்கிறது. கண்ணபிரான் கதை விஜய்க்காகவே உருவாக்கப்பட்டது அதில் விஜய்தான் நடிக்கபோகிறார் இதில் மாற்று கருத்தே இல்லை என்று அமீர் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

உறுதியானது பகலவன் - பாவனா இல்லை


விஜய் நடிப்பில் சீமான் இயக்க இருந்த படத்துக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் ‘கோபம்’ என்று தலைப்பு வைத்தார்
என்ற தகவல் 2009 ஆண்டிலேயே அமளிப்பட்டது கோடம்ப்பாக்கத்தில்.
உண்மையில் சீமான் சொன்ன கதைக்கு, பிரபாகரன் பரிந்துரைத்த தலைப்பு ‘பகலவன்’ என்கிறார் சீமானின் முதுநிலை உதவியாளர். தற்போது விஜய் வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்பை சென்னையில் முடித்துக்கொடுத்து விட்டு,நண்பன் படத்தின் மூன்றாம் கட்ட பாடல்காட்சி படப்பிடிப்புக்காக நெதர்லாந்து செல்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு விஜய் அடுத்து நடிக்க இருப்பது பகலவன்தான். அதற்கான முந்தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டோம் என்கிறார்கள் சீமான் அலுவலகத்தில்.
பகலவன் படம் முடிகிறவரை, சீமான் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று விஜய்க்கும், இந்தப்படத்தை தயாரிக்க இருக்கும் தாணுவுக்கும் உறுதி மொழி கொடுத்திருக்கிறாராம் சீமான்.
இதையே தொழி ஒப்பந்தமாக்கி அதில் கையெழுத்து போடும்படியும் ஏற்பாடு செய்து வருகிறார் தாணு. இதற்கிடையில் பகலவன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாவனா நடிக்க இருப்பதாக வெளியான தகவலை சிரித்துக்கொண்டே மறுக்கிறார்கள் சீமான் அலுவலகத்தில்.
பாவனாவை வாழ்த்துக்கள் படத்தில் நாயகியாக்கி அண்ணன் சீமான் பட்டபாடு போதாதா என்று கேட்கிறார்கள். ஆனால் பாவனா சீமானிடம் மீண்டும் வாய்ப்புக் கேட்டது உண்மை. ஆனால் நாயகி விஷயத்தில் விஜய், தாணு ஆகிய இருவரது கருத்தை கேட்ட பிறகே தேர்வு செய்வார் என்கிறார்கள்.