பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, February 1, 2011

அமீர்-விஜய்-சீமான்... -முறுக்கிக் கொண்டு நிற்கும் முக்கிய கேள்வி

ஷங்கரின் த்ரி இடியட்சுக்கு 'நண்பன்' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தAmir-Seemanதலைப்பையும் படத்தில் நடிக்கும் இன்னபிற நடிகர், நடிகைகளின் லிஸ்ட்டையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டு ஊர் வாய்க்கு பூட்டு போட்டிருக்கிறார் ஷங்கர். சூர்யாவா? விஜய்யா? சர்ச்சை இந்த அறிவிப்போடு முடிவுக்கு வந்ததே பெருத்த சந்தோஷம்தான்.
கடந்த சில தினங்களுக்கு முன்பே நமது இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தது போல, இப்படத்தில் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். பிப்ரவரி இறுதி வாரத்தில் விஜய் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்றாலும், முக்கியமான ஒரு காட்சிக்காக ஒரு நாள் மட்டும் ஊட்டிக்கு செல்கிறாராம். அதே நாளில் இலியானாவும் அங்கு வரப்போகிறாராம். (அட, இவருக்கும் அங்கே சீன் இருக்குங்க)
இது ஒருபுறம் இருக்க இப்படத்தை முடித்துவிட்டு விஜய் அடுத்ததாக நடிக்கப் போகும் படம் யாருக்கு என்ற கேள்வியும் சர்ச்சையும் இறக்கை கட்ட ஆரம்பித்துவிட்டது. அமீரிடம் கதை கேட்டுவிட்டு ஓ.கே சொல்லியிருக்கிறார் விஜய். சீமானிடமும் கதை கேட்டு சம்மதம் சொல்லிவிட்டார். ஆனால் யார் படத்தை முதலில் துவங்குவது என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் அவர்.
சிறையில் ஒன்றாக இருந்தாலும் விஜய் தரப்போகும் கால்ஷீட் விஷயத்தில் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்களாம் இருவரும்!

Anything For Vijay SS Music TV Show Gallery





ஷங்கர் – விஜய் இணையும் 3 இடியட்ஸின் பெயர் நண்பன்!

விஜய் நடிக்கும் 3 இடியட்ஸ் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, ‘நண்பன்’ என்று தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.
இதனை படத்தின் செய்தித் தொடர்பாளர் நிகில் அதிகாரப்பூர்வமாக நேற்று மாலை வெளியிட்டுள்ளார்.
படத்துக்கு இசை: ஹாரிஸ் ஜெயராஜ். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. பாடல்கள்: நா முத்துக்குமார், தயாரிப்பு வடிவமைப்பு: விமல்ஜி. வசனம்: ஷங்கர் மற்றும் மதன் கார்க்கி. திரைக்கதை-இயக்கம்: ஷங்கர்.
ஹீரோ விஜய், ஹீரோயின் இலியானா. மற்ற நடிகர்கள்: ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் மற்றும் பலர்.
இயக்குநர் எஸ் ஜே சூர்யா இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் தோன்றுகிறார். சிவா மனசுல சக்தி நாயகி அனுயாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!
இந்த தலைப்பு ஏற்கெனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாண்டியன் படத்துக்காக வைக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்!

யுகே - முதலிடத்தில் காவலன்!

யுகே பாக்ஸ் ஆஃபிஸில் ஆடுகளம், சிறுத்தை இரண்டையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது விஜய்யின் காவலன். முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 55வது இடத்தைப் பிடித்த ஆடுகளம் சென்ற வாரம் 81வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் மொத்த யுகே வசூல் 4.663 பவுண்ட்கள்.

நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 3.39 லட்சங்கள். முதல் வாரத்தில் 27வது இடத்தைப் பிடித்த சிறுத்தை சென்ற வாரம் 43வது இடத்தை கைப்பற்றியுள்ளது.

இதுவரை இப்படம் 40,256 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் சுமார் 29.31 லட்சங்கள். சென்ற வாரம்தான் காவலன் யுகே-யில் வெளியானது. வெளியான முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் 23வது இடத்தை பிடித்துள்ளது. இதன் வசூல் 43,345 பவுண்ட்கள். 

ரூபாய் மதிப்பில் சுமார் 31.55 லட்சங்கள். முதல் வாரத்திலேயே முப்பது லட்சத்துக்கு மேல் வசூல் செய்ததால் காவலன் யுகே-யில் 75 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யும் என நம்பப்படுகிறது.

01.02.2011 Paper Add