பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, January 30, 2011

Ilaiya Thalapathy Vijay in Super Hit movie movie Kaavalan. Now Showing at Cinemas Near you! Don't forgot to watch it with your family......


Ilaiya Thalapathy Vijay in Super Hit movie movie Kaavalan. Now Showing at Cinemas Near you!
Don't forgot to watch it with your family......

குழப்பம் தீர்ந்தது `3 இடியட்ஸ்’ படத்தில், மீண்டும் விஜய்! சூர்யா நடிக்கவில்லை

வட மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படம், `3 இடியட்ஸ்.’ இந்த படத்தில் அமீர்கான், மாதவன், சர்மான்ஜோஷி ஆகிய மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.
இந்த படத்தை ஜெமினி நிறுவனம் தமிழில் தயாரிக்கிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். படத்துக்கு, `மூவர்’ என்று பெயர் சூட்டலாமா? என்று யோசித்து வருகிறார்கள். அமீர்கான் நடித்த வேடத்துக்கு முதலில் விஜய் பேசப்பட்டார். பின்னர், விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. அவருக்கு பதில், சூர்யா நடிப்பார் என்று பேசப்பட்டது. இப்போது, மீண்டும் விஜய்யே அந்த படத்தில் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் மூலம் `3 இடியட்ஸ்’ படத்தின் கதாநாயகன் யார்? என்ற குழப்பம் தீர்ந்தது. இந்த படத்தில் சூர்யா நடிக்கவில்லை. விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய வேடத்தில், சத்யராஜ் நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பதே `3 இடியட்ஸ்’ படத்தின் கதை!

3 idiots

விஜயின் 52 வது 53 வது 54 வது படங்கள் எவ்வாறு அமையவுள்ளன ஒரு சிறப்பு பார்வை

விஜயின் 51 வது படம் காவலன் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.அத்துடன் திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது..52 வது படம் வேலாயுதம் ஆகும்.இதனை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.இப்படம் சூப்பர்மேன் கதையாகும்.விஜய் கதைப்படி சாதாரண மனிதராகவும் சூப்பர் மேனாகவும் இரு வேடத்தில் வருகிறார்.இது விஜய் ரசிகர்களுக்கு வித்தியாசமான படமாக அமையவுள்ளது.அதனை அடுத்து விஜய் நடிக்கும் படம் பகலவன் ஆகும்.இதில் விஜய் இலங்கைதமிழ் வைத்தியராக வேடம் ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.இதனை சீமான் இயக்குகிறார்.ஏனைய விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.இது விஜயின் 53 வது படமா இல்லை 54 வது படமா என தெரியவில்லை.ஏனெனில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் ஆரம்பத்திலுருந்தே விஜய் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது பின் பல காரணங்களால் இப்படத்திலிருந்து விஜய் விலகினார்.ஆனால் மீண்டும் இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இச்செய்தி இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.எனினும் விரைவில் உண்மை செய்தியை எதிர் பார்க்கலாம்.விஜய் நடிப்பது உறுதி  செய்யப்பட்டால் வேலாயுதம் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளி வைக்கப்பட்டு விஜய் 3 இடியட்ஸில் நடிக்க கூடும்.

30/11/2011 paper add