Sunday, March 17, 2013
கிராமத்து வேடத்தில் கலக்கும் விஜய்
| ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். |
| நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா. படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். படத்தின் படப்பிடிப்பு மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும். படத்தின் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் ஜில்லா பொங்கல் விருந்தாக வெளிவரும் என தெரிவித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்சின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். |
Monday, January 14, 2013
விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான்: துளசி நாயர்
| பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர், கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். |
| மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் துளசி நாயர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது. இது குறித்து துளசி நாயர் கூறுகையில்: நான் விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. கடல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை பத்து தடவை பார்த்தேன். அந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் அம்மாவின்(ராதா) கெமிஸ்ட்ரியை கண்டு இன்றும் வியப்படைகிறேன் என்றார். |
ஒரு வழியாக தளபதி படத்திற்கு தலைப்பிட்ட விஜய்
| இயக்குனர் விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு 'தலைவா' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இப்படத்திற்கு ஏற்கனவே தலைவன் மற்றும் தங்கன் மகன் போன்ற தலைப்புக்களை வைத்த போது சர்ச்சைகள் ஏற்படவே அத்தலைப்புக்களை நிராகரித்தார் இளைய தளபதி. இந்நிலையில் சினிமா ஆய்வாளாரான ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டரில் கருத்து வெளிடுகையில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயர் மாஸாக இருப்பதை உணரமுடிகிறது என விஜயின் நாயகி அமலா பால் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அமலா பால் தனது ட்விட்டரில், விஜய்- விஜய் படத்திற்கு 'தலைவா' என பெயரிடப்பட்டுள்ளது. இது அதிகாரபூர்வமானது என தெரிவித்துள்ளார். விரைவில் இது தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. |
Wednesday, January 2, 2013
2012 Top 10 Tamil Movies
1st Place – Thuppakki
2nd Place – Nanban
3rd Place – Oru Kal Oru Kannadi
4th Place – Naan Ee
5th Place – Vazhakku Enn 18/9
6th Place – Naduvula Konjam Pakkatha Kaanom
7th Place – Kadhalil Sothapuvathu Eppadi
8th Place – Kumki
9th Place – Pizza
10th Place – Neethane En Ponvasantham
2012ம் ஆண்டின் Top 10 Celebrities
தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.
ரசிகர்களாக இருந்தாலும் வசூலாக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளைய தளபதி விஜய்க்கே அதிகமான வரவேற்பு இருக்கிறது.
அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், சிம்பு ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.
இந்த வருடம் அஜித் குமார் பில்லா 2, சூர்யா மாற்றான், விக்ரம் தாண்டவம், சிம்பு போடா போடி ஆகிய படங்களில் நடித்திருந்தனர்.
இதே போல் கதாநாயகிகளின் வரிசையில் காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் சினி உலகம் தெரிவு செய்துள்ள டாப் 10 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.
காஜல் மாற்றான், துப்பாக்கி, ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி, அமலா பால் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, சமந்தா நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சலி கலகலப்பு மசாலா கபே படங்களில் நடித்தனர்.
மும்பை, ஸ்பெயினில் தளபதியின் படப்பிடிப்பு
துப்பாக்கி வெற்றிக்குப் பின்னர் விஜய், ஏ.எல். விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 2013, 9ம் திகதி தொடங்குகிறது.
மும்பையில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.
முன்னதாக முதற்கட்டப் படப்பிடிப்பின் பெரும்பாலான காட்சிகளும் மும்பையில்தான் எடுக்கப்பட்டது.
இதனிடையே இயக்குனர் விஜய் ஸ்பெயின் சென்று படப்பிடிப்பிற்கான இடங்களை பார்த்து திரும்பியுள்ளார்.
எனவே படத்தின் பாடல் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்படலாம் என தெரிகிறது
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் 2013, 9ம் திகதி தொடங்குகிறது.
மும்பையில் தொடங்கும் இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற இருக்கிறது.
முன்னதாக முதற்கட்டப் படப்பிடிப்பின் பெரும்பாலான காட்சிகளும் மும்பையில்தான் எடுக்கப்பட்டது.
இதனிடையே இயக்குனர் விஜய் ஸ்பெயின் சென்று படப்பிடிப்பிற்கான இடங்களை பார்த்து திரும்பியுள்ளார்.
எனவே படத்தின் பாடல் காட்சிகள் ஸ்பெயினில் படமாக்கப்படலாம் என தெரிகிறது
Thursday, December 27, 2012
தங்க மகன் வேண்டாம்: விஜய்
பொதுவாக விஜய் படங்கள் முதலில் தலைப்பு அறிவிக்கப்படும் நிலையில் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை.
எனவே வெகு சீக்கிரமே தலைப்பை அறிவிக்கும் முயற்சியில், பல்வேறு தலைப்புகளை இயக்குனர் யோசித்து வந்தார்.
முதலில் தலைவன் என்ற தலைப்பை அறிவித்தனர். ஆனால் அதை ஜெ.ஜெ டிவி பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்து, துப்பாக்கியுடன் போஸெல்லாம் கொடுத்திருந்தார்.
இதனால் ரஜினியின் படத்தலைப்பான தங்கமகன் என்ற பெயரைச் சூட்ட முடிவு செய்தனர்.
இந்தத் தலைப்புக்கு சொந்தக்காரரான சத்யா மூவீஸ் முதலில் சம்மதித்து, பின் மறுத்துவிட்டது.
பின் ரஜினியின் வேறு படத் தலைப்புகளை வைக்கலாமா... தர்மத்தின் தலைவன் தலைப்பை எடுக்க அனுமதி கோரலாமா என்றெல்லாம் யோசித்தனராம்.
ஆனால், இது நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பைக் கிளப்பும் என்பதால், வேண்டாம் என விட்டுவிட்டார்களாம்.
எனவே தன் படங்களுக்கு பழைய படங்களின் தலைப்பு வேண்டாம், புதியதாக யோசிச்சு சொல்லுங்கள் என ஏ.எல். விஜய்யிடம் இளைய தளபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
2012ஆம் ஆண்டில் சாதனை படைத்த மதன் கார்க்கி
| 2012ஆம் ஆண்டில் அதிகளவில் ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கி தான். |
|
கவிஞர் வைரமுத்துவின் மகனாக இருந்தாலும், அவரின் சிபாரிசு ஏதும் இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 2012ஆம் ஆண்டில் 14 படங்களில் மொத்தம் 35 பாடல்களை எழுதியுள்ளார். இவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. இவற்றின் பட்டியல், அஸ்க் லஸ்கா - நண்பன். அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி. பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி. வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ. கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ. ஈடா ஈடா - நான் ஈ. வாய் மூடி - முகமூடி. மாயாவி - முகமூடி. கால் முளைத்த பூவே - மாற்றான். ரெக்கை முளைத்தேன் - சுந்தர பாண்டியன். கூகுள் கூகுள் - துப்பாக்கி. அண்டார்டிகா - துப்பாக்கி. ஏலே கீச்சான் - கடல். அடியே - கடல். அன்பின் வாசலிலே - கடல். |
Vijay in Top 3 Actors of Kollywood
Illayathalpathy Vijay is in the Top 3 Actors list of Kollywood, based on the rankings done by popular website behindwoods. The list is topped by Rajinikanth and Kamal Haasan is in 2nd spot. Vijay occupies the 3rd position and it show the mass of Vijay.
Thew website stated
Vijay started the year off with an almighty bang with Nanban. He has also ended the year with the explosive Thuppakki. Now all eyes are on the actor’s next which is to be directed by AL Vijay.
Vijay fans are confident that he will continue to deliver the goods in his inimitable style.
Future projects: AL Vijay Untitled Movie
Movies in 2012: Nanban, Thuppakki
Movies in 2011: Velayudham, Kaavalan
Top 3 Actors of the List are
- Rajinikanth
- Kamal Haasan
Sunday, December 23, 2012
தல, தளபதி படத்துக்கு சிக்கல்
| தல, தளபதி படங்களுக்கு தலைப்பு வைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. |
| தல அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் தளபதி விஜய் ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் நடிக்கின்றனர். தல படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் தளபதி படத்திற்கு தலைவன் என்று தலைப்பை வைத்தார்கள். இது வேறொரு நபருடையது என்பதால் தலைப்புக்கு சொந்தக்காரர் உரிமை கொண்டாட இந்த தலைப்பை ஒதுக்கி விட்டார்கள். பின்னர் தங்க மகன் என்று வைக்க, இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் என்பதால் இதுவும் தோல்வியில் முடிந்தது. படத்தின் இயக்குநர் திரைக்கதை, வசனம் கூட எழுதிவிடுவார் போல ஆனால் படத்தலைப்புதான் தலைவலியாக இருக்கிறது. ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நேர்ந்த அனுபவம் விஜய் கூட்டணியை வெகுவாக யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது. |
Sunday, May 27, 2012
ரஜனி படத்தில் விஜய்
கொஞ்ச நாட்களாக ரீமேக் ஜூரம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது ரசிகர்களை. அதுவும் ரஜினி படத்தை திரும்பி எடுக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அத்தனை முன்னணி நடிகர்களும், பில்லா ஒன்றாகி இரண்டாகி அதுவும் ஹிடானால் மூன்றாகும் போல் இருக்கிறது. இந்த வேளையில் ரஜனியின் பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களின் ரீமேக் இல் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர். அண்ணாமலை படம் தான் விஜயின் அடுத்த ரீமேக் படமாக இருக்கிறது. ரஜனியிடம் சென்று விஜய் இப்படம் தொடர்பாக ஆலோசனை கேட்க போகிறாராம். யார் இயக்கம் மற்றும் தயாரிப்பு என்பாத்து இன்னும் முடிவாகவில்லி. எனினும் இப்படத்தின் நாயகி ஹன்சிகா என்பது உறுதியாகிவிட்டது.
Sunday, May 13, 2012
Saturday, May 12, 2012
விஜய்யின் 3 புதிய படங்கள்
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கிறார். '7ஆம் அறிவு' படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கும் படம் இது என்பதால் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இப்படம் முடிந்ததும் கவுதம் மேனன் இயக்கும் 'யோகன் அத்தியாயம் ஒன்று' படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் முடிவடைந்த பிறகு 'மதராசபட்டினம்' விஜய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்துக்கு 'தலைவன்' என்று பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.
யோகன் அத்தியாயம் ஒன்று படம் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் அடுத்த படம் ஜுலையில் ஆரம்பம்
விஜய் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கம் படம் யோகன். இப்படம் பற்றிய தகவல்களை கெளதம் மேனன் சென்ற வருடம் வெளியிட்டார். இதன் முதல் போட்டோக்களும் வெளியிடப்படன. இப்படம் ஜுலை மாதம் தொடங்கும் என கெளதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கெளதம் நீ தானே பொன்வசந்தம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளிலும் விஜய் துப்பாக்கி பட வேலைகளிலும் உள்ளனர். இருபடங்களும் யூனில் முடிவடைந்து விடும். அடுத்த மாதம் யோகன் படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது.
விஜய் மட்டும் தான் தமிழ் பட உலகை சேர்ந்தவர் எனவும் ஏனைய நடிகர்கள் வெளிநாட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இசை ரகுமான். தயாரிப்பு போட்டன் கதாஸ் மற்றும் ஈரோஸ் நிறுவனம்.
விஜயின் அதிரடி முடிவு
துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.
சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..
முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.
இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.
சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..
முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.
Monday, May 7, 2012
விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்
Tuesday, March 20, 2012
துப்பாக்கியில் பெண் பார்க்க போகும் போதும் இராணுவ சீருடையுடன் செல்கிறாராம் விஜய்!
போக்கிரி திரைப்படத்தில் விஜய் பொலீசாக இருந்த போதும், அவர் சீருடையுடன் நடிக்கவில்லை. பொதுவாக விஜய் திரைப்படங்களில் சீருடை அணிவதை தவிர்த்து வருபவர் அதாவது அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
ஆனால் துப்பாக்கியில் சீருடையுடன் நடிக்கிறார் இளைய தளபதி. இப் படத்தில் சீருடைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படியென்றால்: ஒரு சீனில் காஜல் அகர்வாலை அவர் பெண் பார்க்க போகிற மாதிரி காட்சியிலும் கூட இராணுவ சீருடையுடன்தான் நடித்திருக்கிறாராம் விஜய்.
Monday, March 19, 2012
மாற்றான், துப்பாக்கி படங்களின் நாயகி காஜல் அகர்வால் பேட்டி
| கொலிவுட்டில் கே.வி.ஆனந்த் இயக்கும் மாற்றான், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி என இரு படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சூர்யா உடன் 'மாற்றான்' படத்தில் மொடல் பெண்ணாக நடித்துள்ளேன். மாற்றான் படப்பிடிப்பு ரஷ்யா, பிரான்ஸ் உட்பட பலநாடுகளில் நடந்த போது நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். இப்படத்திற்காக ரஷ்யா மொழி கற்றுள்ளேன். மேலும் முருகதாசின் இயக்கத்தில் இளையதளபதி விஜய்யுடன் நடித்துள்ளேன். இப்படத்தில் விஜய்யை காதலிக்கும் குறும்புக்காரப் பெண்ணாக என்னுடைய கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. ரசிகர்கள் மனதில் இந்த வேடம் பிரபலமாகும் என்ற நம்பிக்கையில் உள்ளதாக காஜல் அகர்வால் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார். |











































