ரஜினி-லதா பேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான்.
அஜித்-ஷாலினி அஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கணக்கை எடுத்தால் அதற்கு பத்து விரல்கள் பத்தாது. உடனே மனதை ‘பறிகொடுக்கிற' சுபாவம் அவருடையது. அவருடன் இணைத்து கூறப்பட்ட நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால் அஜீத் மனம் விரும்பி கலயாணம் செய்து கொள்ள விரும்பியது ஷாலினிதான். இன்றைக்கு வரைக்கும் டார்லிங் என அழைத்து காதலை உறுதி செய்து கொண்டே இருப்பார் அஜித். அவரின் மோசமான தோல்விகளிலும் பாசத்துடன் உடன் இருந்து பேலன்ஸ் செய்தவர் ஷாலினி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தது குட்டி தேவதை - அவரது மகள் அனோஷ்கா.
விஜய் - சங்கீதா தமிழ் சினிமாவில் பரபரவென முன்னேறி வந்த விஜய்க்கு காதல் வாய்ப்புகளும் களை கட்டிவந்தன. ஒட்டியும் ஒட்டாமலும் பழகும் விஜய்க்கு காதல் வந்தது லண்டனில் வாழ்ந்த சங்கீதாவிடம். விடுமுறைக்காக சென்ற விஜய் கண்ணில் பட்டதும் வந்தது காதல். சத்தம் போடாமலும், வெளியே தெரியாமலும் காதலை வைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழரான சங்கீதா மணமொத்து விஜய்யோடு வாழ்ந்து வருகிறார்.
தன் ஆண், பெண் குழந்தையோடு நீலாங்கரையில் வசிக்கும் விஜய் சந்கீதாவை காதல் செய்த வருடங்கள் நான்கு. இன்னும் அவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்கும் அன்பு, பிரியம் ஆச்சரியமானது.
சூர்யா - ஜோதிகா சூர்யா-ஜோ திருமண நடந்தது சூர்யா போராடிப்பெற்ற விஷயம். அப்பாவின் சம்மதத்திற்காக வருடக் கணக்கில் காத்திருந்தார். ஒருவருக்கொருவர் அக்கரை செலுத்தி, பின்பு காதலாக உருவெடுத்த வரலாறு சூர்யாவுடையது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள். இருந்து மணம் முடித்த இப்போது சூர்யா வாழ்வது பூர்ணவாழ்வு. தன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஜோவின் பங்களிப்பைக் காண்கிறார் சூர்யா.
சூர்யாவின் திருப்பம் எடுத்த ‘காக்க காக்க' கூட ஜோவின் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் வந்த வாய்ப்புத்தான். இதை அவரே நேர்பட பேட்டியில் சொல்லியிருக்கிறா. காதல் கனிந்து இவ்வளவு நாட்களாகியும், அன்று பார்த்த அதே அன்னியோன்யத்தை நான் பார்ப்பது இவர்களிடமே.
மாதத்திற்கு ஒருமுறை வெளியே குழந்தைகளோடு புறப்பட்டுப்போய் வருவது, இரண்டாவது சனிக்கிழமை வீட்டுக்குள்ளேயே குழந்தைகளோடு கொண்டாட்டம், வருஷத்திற்கு 20 நாட்களாவது பாரின் ட்ரிப் என கண்டிப்பாக பேமிலியோடு செலவழிக்கிற காதல் மனிதர் சூர்யா.
இன்றுவரைக்கும் காதல் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியாக நெருக்கம் காட்டி நடிக்கக் கூட சங்கப்படுவார் சூர்யா. ஜோவிற்கு சங்கடம் அளிக்கும் எதிலும் ஆர்வம் காட்டாத மனது அவருடையது. முழுமையான சமர்ப்பணம், முழுமையான தன்னிறைவு கொண்ட காதல் குடும்பம் இது.
கிரிஷ்-சங்கீதா இன்றைக்கு வரைக்கும் கிரிஷ்ஷின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் இவர்களுடையது. Made for each other ஜோடி. பார்க்கவே நன்றாக இருக்கும். நவீனமான ஜோடியாக இவர்களைச் சொல்லலாம். ரொம்பவும் ஜோவியல், நாட்டி, பொருத்தமான ஜோடி என்று கூட சொல்லலாம்.
ஜெயம்ரவி-ஆர்த்தி ரொம்ப நாட்களாக காதல் ‘சீக்ரெட்' காத்தவர் ஜெயம்ரவி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் காதலுக்கு கிரின் சிக்னல் கிடைத்தது இவர்களுக்கு. அவ்விதமே என்றாலும் குழந்தையோடு இன்றைக்கு சந்தோஷமாக வலம் வருவது இந்த தம்பதியினரின் வழக்கம். நண்பர்களின் திருமணம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். காதலை உணர்ந்து, பிடிவாதமாக வீட்டில் அனைவருக்கும் உணர்த்தி வெற்றிபெற்று காதல் ஜோதியை இன்னமும் தொடர்ந்த் அணையாமல் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் ஜோடி!
ஸ்ரீகாந்த்-வந்தனா இவர்கள் மாதிரி காதலித்ததும் கிடையாது. திட்டிக்கொண்டதும் கிடையாது. அநாகரீகத்தின் உச்சிக்கு சென்ற சண்டை, அமைதியாக முடிந்து, இப்போது மிக அழகான வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள். மனம் இருந்தால், வழியும் இருந்தால் எப்பவும் மனது ஒன்றிப்போகலாம் என்பதற்கு ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடியை விட்டால் உதாரணம் சொல்ல ஆளில்லை. அன்றைய உறவுச் சிக்கல் மட்டும்தான், இப்போது எல்லோருக்கும் உதாரணமாக காட்டுகிற ஜோடி ஸ்ரீ-வந்தனா.
உதயநிதி-கிருத்திகா கல்லூரியிலிருந்து, மணமேடை வரைக்கும் வந்த அருமையான காதல் உதயநிதியுடையது. மகனின் வேண்டுகோளில் இருந்த அன்பையும், ஈரத்தையும், காதலையும் பார்த்த ஸ்டாலின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, உதயநிதி வெற்றிக்கொடி கட்டினார். இன்றுவரைக்கும் காதலில் கண்ணியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருத்திகாவிற்கு காதலோடு முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி. சொந்தமான பத்திரிகை ஆரம்பித்தது முதல், குறும்படம் டைரக்ட் செய்தது வரை கிருத்திகா செயல்பட பார்த்துக் கொண்டு இருப்பது உதயநிதியின் இயல்பு. |