பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, May 31, 2011

அரசியலுக்கு ஆயத்தமாகிறாரா விஜய்?

'காவலன்' பட பிரச்னைகள் ஆரம்பித்த உடனே தனது ஆதரவு அ.தி.மு.கவுக்கு தான் என்று வெளிப்படையாக அறிவித்தவர் விஜய்.  ஆனால் யாரால் பிரச்னை என்பதை அவர் இன்று வரை தெளிவு படுத்தவே இல்லை.

பிரச்சார சமயத்தில் 'வேலாயுதம்' படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவருக்கு பதிலாக அ.தி.மு.கவிற்கு ஆதரவாக தீவிரமாக  இவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பிரச்சாரம் செய்தார்.

அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றவுடன் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் விஜய். இதனால் விஜய் அ.தி.மு.கவில் சேர்வார் என்ற தகவல்கள் வலம் வர ஆரம்பித்தன.

தனது மன்ற நிர்வாகிகளுக்கு ஒரு அறிக்கை மூலம் நன்றி தெரிவித்த விஜய் அதன்பின் தனது படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இந்நிலையில் 29ம் தேதி தனது சங்கீதா திருமண மண்டபத்தில் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்தார் விஜய்.  அவர்களிடையே "ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு, உங்களது கடுமையான உழைப்பை பாராட்டியபோது எனக்கு பெருமையாக இருந்தது " என்று கூறினார்.

அரசியலில் ஈடுபட இது சரியான தருணம் இல்லை என்று கூறி வந்த விஜய் இப்போது தங்களை அழைத்து இவ்வாறு பேசியதால் கூடிய விரைவில் விஜய் நேரடியாக அரசியலில் ஈடுபடுவார் என்று கூறி வருகிறார்கள்.

விஜய் - பாவனா- ஹன்சிகா இணையும் பகலவன்


வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து நடிக்க இருக்கும் "பகலவன்" படத்தில் அவருக்கு ஜோடியாக பாவனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, தம்பி, வாழ்த்துகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய சீமான் அடுத்து, விஜய்‌யை வைத்து "பகலவன்" என்ற படத்தை இயக்குகிறார்.

இப்படம் கடந்த ஆண்டே துவங்க இருந்தது. ஆனால் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக அவதூறாக பேசியதற்காக சிறை சென்றார் சீமான். இதனால் இப்படம் தள்ளிபோனது. இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த சீமான், விஜய்யை சந்தித்து "பகலவன்" படம் தொடர்பாக பேசினார். அவரும் படத்தை துவங்கலாம் என்று சொன்னார்.
ஆனால் இடையில் தமிழ சட்டசபை தேர்தல் வந்ததால், காங்கிரஸ்க்கு எதிராக பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டார் சீமான். இதனால் மீண்டும் தள்ளிபோனது பகலவன். இப்போது எல்லா வேலைகளையும் ஒத்திவைத்துவிட்டு, பகலவன் படத்திற்கான வேலையை துவங்கி இருக்கிறார் சீமான்.
முதற்கட்டமாக படத்திற்கான நாயகி மற்றும் தொழில் நுட்ப வல்லுனர் தேர்வில் இறங்கியுள்ளார் சீமான். பகலவனில் இரண்டு நாயகிகள். இதில் ஒருவராக பாவனாவை தேர்வு செய்திருக்கிறார் சீமான்.
பாவனா ஏற்கனவே சீமானின் வாழ்த்துகள் படத்தில் நடித்திருப்பதால் மீண்டும் அவரையே தேர்வு செய்திருக்கிறார். மற்றொரு நாயகியாக ஹன்சிகா மொத்வானி நடிப்பார் எனத் தெரிகிறது. தற்போது விஜய் "வேலாயுதம்" படத்தின் இறுதிகட்ட சூட்டிங்கிலும், நண்பன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
விஜய்யுடன், பாவனா நடிப்பது இதுவே முதல்முறை, அதேசமயம் சீமான்  இயக்கத்தில் விஜய் நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் பயணம் ஆரம்பம்


விஜய் டிவியின் விஜய் விருதுகள் விழா விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னோட்டமாக விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வண்டி தமிழ் நாடு முழுவதும் வலம்வந்து மக்களில் வாக்குகளை சேகரித்து அதன் அடிப்படையிலும் பல விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக திரை நட்சத்திரங்கள் திரளாக வந்து ரசித்த விருது வழங்கும் விழாவாக இருந்து வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த போகிறார்களாம்.
அதன் தொடக்கமாகவே விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், வரும் ஜூன் 1ம் தேதி சென்னையில் AVM ஸ்டுடியோவில் இருந்து காலை 10.30 மணியளவில் கொடியசைத்து அனுப்பப்படுகிறதாம்.
இந்த விழாவிற்கு தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர் திரைப்படத் தயாரிப்பாளர் AVM சரவணன், மேலும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டு கொடியசைத்து ரசிகன் எக்ஸ்பிரச் வாகனத்தை வழியனுப்பி வைக்கின்றனராம்.

ஐந்தாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. இந்த ரசிகன் எக்ஸ்ப்ரெஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைட்து விஷயங்களும் அடங்கியிருக்குமாம்.

சென்னையிலிருந்து புறப்படும் இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, சேலம், கரூர், வேலூர், காஞ்சிபுறம் ஆகிய மாவட்டங்களுக்கு மக்களின் வாக்குகளை சேகரிக்க சென்றுவரவுள்ளது.

மக்களின் ஃபேவரெட் திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.

மேலும் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாளியர் சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது. விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஜூன் மாதம் இறுதியில் விஜய் விருதுகள் பிரம்மாண்ட விழா சென்னையில் நடிபெறவிருக்கிறது.

விஜய் அவார்ட்ஸ் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம் புறப்படுவது, விஜய் அவார்ட்ஸ் ஒரு முன்னோட்டம் மே 30 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடிய விஜய்

விஜயின் அடுத்த படமான வேலாயுதம் படக்குழுவினர் இன்று ஒரு சிறப்பான விழாவை கொண்டாடினர்.விஜயின் வேலாயுதம் பட இறுதிக்கட்டப்படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.இதன் இயக்குனர் ஜெயம் ராஜா ஆவார்.மீனம்பாக்கத்தில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பிண்ணி மில்லில் இன்று வேலாயுதம் படப்பிடிப்பு இடம்பெற்றது.ஜெயம் ராஜாவுக்கு இன்று இன்ப அதிர்ச்சியை கொடுத்தது வேலாயுதம் படக்குழு.விஜய் கேக் வாங்கி வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்.சேட்டைச் சாதுவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என அந்தக்கேக்கில் வாசகம் போடப்பட்டிருந்தது.கமராமென் ப்ரியன் இளையதளபதி விஜய் ஆகியோருடன் பிறந்த நாளைக்கொண்டாடினார் ராஜா.நட்சத்திரப்பட்டாளமே பிறந்த நாளில் கலந்து கொண்டதை போல் விஜய் விழாவை மிக இரகசியமாக ஜெயம் ராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கொண்டாடினார்.தமிழில் முண்ணனி கீரோக்களில் ஒருவரான விஜயால் விழா கொண்டாடப்பட்டதை ராஜா சந்தோசமாக கொண்டாடினார்.ராஜாவின் குடும்பத்தினரும் பங்குகொண்டனர்.எங்களது வாழ்த்துக்களையும் ராஜாவுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். 







Monday, May 30, 2011

நண்பனில் கதாபாத்திரங்கள் சிறப்பு பார்வை


நண்பன் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இடம்பெற்றது.சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.இப்படத்தில் நடிகர்கள் நடிக்கும் கதாபாத்திரங்கள் பற்றிப்பார்க்கும் போது விஜய் ஜீவா இலியானா சிறீகாந்த் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
சென்ற வருடம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் இப்படமாகும்.அமீர்கான் ரன்கோ என்ற பெயரில் நடித்த வேடத்தில் தமிழில் விஜய் நடிக்கிறார்.இவ்வேடம் மிகவும் துடுக்குத்தனம் கொண்ட பாத்திரமாகும்.இது விஜய்க்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.எப்பொழுதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என்ற தன்மை கொண்ட கல்லூரி மாணவனாவான்.
அடுத்து இப்படத்தின் முக்கியமான வேடம் ஜீவா நடிக்கும் கதாபாத்திரமாகும்.5 விரல்களிலும் மோதிரம் அணிந்து சர்மான் ஜோசி நடித்த கதாபாத்திரமாகும்.மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வசிப்பவராகவும் குடும்ப சுமை கொண்டவராகவும் தங்கைக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும் தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற தன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.மிகவும் கடவுள் நம்பிக்கை கொண்டவாராக வருகிறார்.
சிறீகாந் மாதவன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் புதுமைபடைக்கும் இளைஞனாக வந்து கலக்குகிறார்.விஜயின் துடுக்குத்தன காதலியாக வருகிறார் இலியானா.

விஜய் எனக்கு பிடித்த நடிகர் - தினேஸ் பேட்டி


ஆடுகளம் படத்தில் சிறந்த நடனத்தை அமைத்ததற்காக இந்த வருட தேசியவிருதுப்பட்டியலில் இடம்பெற்றார் நடன அமைப்பாளர் தினேஸ்.இவர் கூறிய போது விஜய் எனக்கு பிடித்த நடிகர் மற்றும் டான்சர் என்றார்.விஜயுடன் இணைந்து பணியாற்றுவதற்காக மிகவும் ஆவலாக இருக்கிறார் தினேஸ் சித்திரம் பேசுதடி அஞ்சாதே போன்ற படங்களுக்கு நடனம் அமைத்திருந்தார் எனினும் இவருக்கு ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
இவருடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக ஆரம்பித்துள்ளது.தனது கனவு வீட்டினை சென்னையில் கட்டிக்கொண்டிருக்கிறார் .இவ்வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.மிகவிரைவில் புது வீட்டில் குடிபுக உள்ளார் தினேஸ்.விஜயை இவ்விழாவிற்கு அழைக்கவுள்ளாராம் தினேஸ்.

ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த தீடீர் விருந்து


சென்னை வடபழனியில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 7 மணி ஆளவில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை திடீரென சந்தித்தார்.
தமிழகமெங்குமிருந்து ஊராட்சி, ஓன்றிய, நகர, மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஐ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் “ தவறு செய்த குடும்ப ஆட்சி ஆகற்றப்பட்டு புரட்சித் தலைவி ஆம்மா ஆவர்களின் நல்லாட்சி ஆமையவேண்டும் என்பதற்காக, நமது இயக்கம்.ஆ.தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன்.
நீங்கள் பல்வேறு ஆரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளையெல்லாம் தூக்கி ஏறிந்துவிட்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆம்மாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த ஊங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா ஆவர்களின் பொற்கால ஆட்சி ஆமைய, நாமும் ஒரு அணியாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி ஆடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கடுமையான உழைப்பைப் பாராட்டியபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது.

இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ மாணவிகளுக்குகம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.
இனி மேலும் சமூக நலப்பணியைத் தொடர்ந்து செய்து, மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆவர்களின் கரத்தை வலுப்படுத்தி, அவர்களின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஓளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றுங்கள்.

நாளைய உலகம் உங்கள் கையில்” இவ்வாறு விஜய் பேசினார். ஏஸ்.ஐ.சந்திரசேகரன் பேசும்போது இந்த நிழ்ச்சியில், நமது இயக்கத்த்தின் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை அறித்தார்.
அ.இ.ஆ.தி.மு.க.கூட்டணி ஆமோக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார் விஜய். 

Sunday, May 29, 2011

சங்கருக்கு சிக்கல்

shankar-endhiran-28-05-11



2006 ஆம் ஆண்டு வெளியான ஜூகிபா என்ற தன்னுடைய கதையைதான் எந்திரன் என்ற பெயரில் சங்கர் காப்பியடித்து படமாக எடுத்துவிட்டதாக எழுத்தாளர் தமிழ்நாடன் என்பவர் இயக்குனர் சங்கர்மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார்,அடுத்த மாதம் 24ம் தேதி எந்திரன் படத்தின் இயக்குனர் சங்கர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளார்.

தமிழ்தலைப்பு வரிச்சலுகைக்கு வேட்டு


இந்த துறைதான் என்றில்லாமல் எல்லாதுறைகளிலும் ஏகபோகம் காட்டிவந்தது கலைஞர் குடும்பம். சினிமாவையோ மொத்தமாக பிடித்துக் கொண்டார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்தச்சூழ்நிலையில்தான் ஜெயலலிதா முதல்வராக வர வேண்டும். அப்போதுதான் தமிழ்சினிமா காப்பாற்றப்படும் என்று ஆசைப்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில்.
இப்படி ஆசைப்பட்ட அத்தனை பேரும் தேர்தல் முடிவுக்கு பின் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று விசாரித்தால் அப்படி சொல்லவும் முடியாது. சொல்லாமல் இருக்கவும் முடியாது என்று புலம்புகிறார்கள். காரணம் அவன், இவன், தெய்வத்திருமகள் மாதிரி பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்கி வெளியிட
யாருமில்லையாம்.
அடுத்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் விக்ரம் படத்தின் ஐந்து ஏரியாக்கள் விற்பனையாக வில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்து இன்னும் சில தினங்களில் ஒரு அறிவிப்பு வரப்போகிறதாம் அரசு தரப்பில் இருந்து. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழில் தலைப்பு வைப்பதற்கு கொடுக்கப்பட்டு வந்த பதினைந்து சதவீத கேளிக்கை வரிச்சலுகையை ரத்து செய்து அறிவிப்பு விடப்போகிறதாம் அரசாங்கம்.
இன்னொரு பக்கம் தியேட்டரில் இதுவரை விதிக்கப்பட்டிருக்கும் நூறு, இருநூறு ரூபாய் டிக்கெட் கட்டணங்களை அதிரடியாக 40, 25 என அதிரடியாக குறைக்கப் போகிறாராம். இதனால் தியேட்டருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிற நிலை ஏற்படுமா என்று இபோதைக்கு சொல்லமுடியாது என்றாலும், டிக்கெட் கட்டணம் குறைப்பதால் நடிகர்களின் சம்பளமும் குறையும் என்று நம்பலாம்.
அடுத்து திருட்டு விசிடி விஷயத்திலும் கடுமையான நடிவடிக்கை எடுக்கப் போகிறாராம் புதிய முதல்வர். பார்ப்பவர்களுக்கும் சரி, விற்பவர்களுக்கும் சரி. குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். 

ஐபிஎல் இறுதிப்போட்டி வெற்றி கொண்டாட்டபடங்கள்


2011 இன் ஐபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி, டோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.வெற்றிக்கொண்டாட்ட படங்கள் இதோ

''யுவன், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன்'' வாழ்த்துகள் நண்பர்களே!


'இசை ஹாரிஸ் ஜெயராஜ்’ என்று ஒப்பந்தம் செய்துவிட்டு, ஹீரோ தேடிப் புறப்படும் சீஸன் இப்போது!
'' 'ஹாரிஸ் இசை’க்காகப் படத்துக்கு ஓப்பனிங் கிடைக்குது. ஆனா, நீங்க நல்ல கதைகளைக் கவனிப்பது இல்லையோ?''
''எந்தக் கதையில் நம்ம வேலை நல்லபடியா நிக்கும்னு மட்டும்தான் பார்ப்பேன். நல்லபாடல் களுக்கு நல்ல தளம் அமைச்சுக் கொடுக்கிறது மட்டும்தான் என் வேலை. முழு சினிமாவா திருப்தியா வெளிவரணுங்கிறது என் கையில் இல்லை. அதற்கு நான் எதுவும் செய்யவும் முடியாது. என்கிட்ட கதை சொல்றப்ப, ஒவ் வொண்ணும் அருமையாதான் இருக்கு. ஆனால், படமா எடுக்கும்போது அப்படியே வருதான்னு என்னால் வெளிப்படையா சொல்ல முடியாது!''
''இதுவரைக்கும் கிராமத்து இசை பக்கம் நீங்கள் கவனம் பதிச்சதே இல்லையே?''
''எனக்கும் ஆசைதான். ஆனா, அப்படியான ஸ்கிரிப்ட்டுடன் யாராவது வரணுமே! எனக்கு நல்ல கிராமிய இசையிலும் கிளாஸிக் மியூஸிக் கிலும் ஒரு படமாவது பண்ண ஆசை. 'தில்லானா மோகனாம்பாள்’ மாதிரி ஒரு படத்துக்கு இசை அமைக்கணும்னு ஆசை. 'சீவலப்பேரி பாண்டி’ யில் ஆதித்யனுக்குத் துணையா 'ஒயிலா பாடும் பாட்டில்...’ பாட்டுக்கு கீ-போர்டு வாசிச்சது இன்னமும் பசுமையா ஞாபகத்தில் இருக்கு!''
''தமிழ் சினிமா ஹீரோக்கள்கூட இப்போ ஒற்றுமையா, ஃப்ரெண்ட்லியா இருக்காங்க. ஆனால், இசையமைப்பாளர் களிடம் அப்படி ஒரு ஒட்டுதல் இருக்கா?''
''நான் மனசார மற்ற இசையமைப்பாளர் களைப் பாராட்டுவேன். அவங்களோட சிறந்த பாடல்களை 'நல்லா இருக்கு’ன்னு நான் எப்ப வும் பாராட்டிக்கிட்டேதான் இருக்கேன். இப்போ ஜி.வி.பிரகாஷின் 'யாத்தே யாத்தே...’ இசை என் மனசைத் தொட்டது. 'ஈரம்’ படத் தில் தமன் பண்ணினது எல்லாமே சூப்பர். யுவன்ஷங்கரை எப்பவும் குறைச்சு மதிப்பிடவே முடியாது. விஜய் ஆண்டனி 'அங்காடித் தெரு’ வுக்காகப் பண்ண 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ பாட்டை என்னை அறியாமல் பாடிட்டே இருப்பேன். ஏ.ஆர்.ரஹ்மான் நம்ம கமென்ட்லாம் தாண்டி எங்கேயோ போயிட்டார். மத்த இசையமைப்பாளர்களை நேரில் பார்த்து நல்லாயிருக்குனு பாராட்டினால், அது நாலு சுவத்துக்குள்ளே அடங்கிரும். இப்படி உங்ககிட்டே பதிவு பண்ணினா, அது பல கோடி பேர்கிட்ட போகும். மத்தவங்களைப் பாராட்டப் பழகினால்தான் நாம வளருவோம். எனக்கு வளர்ந்துட்டே இருக்க ஆசை!''
''ஜி.வி.பிரகாஷ் இந்திக்குப் போயிட்டார். உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லையா?''
''இந்தியில் 'FORCE’னு ஒரு படம் பண்றேன். ஏ.ஆர்.முருகதாஸின் இந்திப் படத்துக்கும் நான்தான் இசை. ஆனால், பெர்சனலா எனக்குப் பிற மொழி மீது ஆர்வம் இல்லை. தமிழ் மொழியின் வசீகரம், அழகியல் இந்தியா வின் பிற மொழிகளில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இப்படிச் சொல்றதால, பிற மொழிகளைக் குறை சொல்றதா அர்த்தம் இல்லை. மனசுல பட்டதைச் சொல்றேன். அது போக, பிற மொழிகளில் செய்ய எனக்கு நேரமும் இல்லை. ஏ.ஆர்.முருகதாஸ் மாதிரி இயக்குநர்களின் உறவு காரணமாகச் செய்கிற முயற்சிகள்தான் சில படங்கள். எனக்கு இசைன்னா... அது தமிழ் இசைதான்!''
''உங்க காதல் கதையையே தனி சினிமாவா எடுக்கலாம்னு கேள்விப்பட்டோம்..?''
''அட... ஆமாங்க! காதல் மனைவி சுமா. பெங்களூர்லதான் அவங்களை முதல்ல பார்த்தேன். என்கிட்ட முதல் ஆட்டோஃகிராப் வாங்கிய ரசிகை. கல்யாணத்துக்கு ஆரம்பத்தில் தடை இருந்தது. நான் கிறிஸ்டியன். அவங்க இந்து பிராமின். என் அன்புக்காக அவங்க எல்லா விதத்திலும் தன்னை மாத்திக்கிட்டாங்க. காதலின் அர்த்தம் விட்டுக்கொடுப் பது. அது எங்க விஷயத்தில் நடந்து இருக்கு. பையன் நிக்கோலஸ், இப்பவே பியானோவில் வெளுத்து வாங்குறான். பொண்ணு நிகிதா, படிப்பில் கெட்டி. அவங்களுக்கு இப்போ 'நங்காய்’ பாட்டுதான் ஃபேவரைட்.
என் காதல் பாடல்களில் ஏதோ விசேஷம் இருக்குன்னு சொல்வாங்களே... நம்ம காதல் அதில் கொஞ்சம் கலந்திருக்கும்... அதான் விசேஷம்!''

Saturday, May 28, 2011

வித்தியாசமான பாடல் நண்பனில்


சங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக வளர்ந்துவரும் படம் நண்பன்.இப்படத்தில் விஜய் ஜீவா இலியானா ஆகியோர் நடிக்கின்றனர்.விஜய் நண்பன் படப்பிடிப்பில் முந்தைய படங்களை போல் அல்லாமல் வித்தியாசமான முறையில் காட்சியளிக்கிறார் எனக்கூறுகின்றனர் படப்பிடிப்புக்குழுவினர்.இப்படத்தில் ஒரு பாடலில் 16 மொழிகளை உள்ளடக்கியவாறு பாடல் வரிகளை எழுதியுள்ளார் மதன்கார்க்கி.இப்பாடலுக்குரிய இசையை புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி ஹரிஸ்ஜெயராஜ் அமைத்துள்ளார்.இப்பாடலை மிக சிறப்பாகப்பாடியுள்ளார் விஜய் பிரசாத்.
இப்பாடலின் படப்பிடிப்பை இதுவரை யாரும் படம்பிடிக்காத இடங்களில் படம்பிடிக்க உள்ளார் சங்கர்.இப்பாடல் வித்தியாசமான இடங்களில் படம் பிடிக்கப்படுகிறது.இப்பாடலை சங்கர் தனக்கு விரும்பிய இடங்களில் படம்பிடித்து ரசிகர்களுக்கு விருந்தாக கொடுக்க உள்ளார்.சங்கரின் படங்களில் பாடல்கள் வித்தியாசமான இடங்களிலும் புதிய புதிய அரங்குகளிலும் இடம்பெறும் இதனை போல் இப்பட பாடல்களும் இடம்பெற உள்ளது.இப்படத்தை தீபாவளிக்கு வெளியிடும் நோக்கில் படப்பிடிப்பு நகர்வடைகிறது.பாடல் செப்டெம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளன.

Friday, May 27, 2011

எஸ்ஏ சந்திரசேகரனுக்கு இடைக்காலத்தடை


சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்-இயக்குநர் பாபு கணேஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை சிட்டி கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பாபு கணேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தும் வரை எஸ்.ஏ.சி. நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாபுகணேஷ் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவில கோர்ட், எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி தொடர தடைவிதித்து, அது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

விஜயின் பிரமாண்ட வேலாயுத கிளைமக்ஸ் - திருமூர்த்திமலையில்


விஜய் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள வேலாயுதம் படத்தின் கிளைமக்ஸ் காட்சியை மிகப்பிரமாண்டமாக யாரும் எதிர்பாராத விதமான முறையில் படமாக்க உள்ளனர்.இதற்கு என அதிகளவான தொகையை ஒதுக்கியுள்ளார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
விஜய் ரவியை கேட்டதற்கு இணங்க இத்தொகையை ஒதுக்கி உள்ளார் ரவிச்சந்திரன் .படம் மிகப்பிரமாண்டமாக வர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு விஜய் ரவி ராஜாவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.அதிகளவான் விஜய் ரசிகர்கள் இப்படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்படத்தின் இக்கிளைமக்ஸ் காட்சி திருமூர்த்தி மலையில் எடுக்கின்றனர்.இறுதிக்கட்டப்படப்பிடிப்பு மிக வேகமாக நகர்வடைகிறது.விஜய் பால்காரனாக நடிக்கிறார்.விஜய் பால்காரனாக நடிக்கும் முதலாவது படம் இதுவாகும்.அவரது காதலியாக வைதேகி பாத்திரத்தில் கலக்குகிறார் ஹன்சிகா மோத்வாணி. ஜெனிலியா ஒரு தொலைக்காட்சி நிருபராக வந்து விஜய்க்கு உதவிகளை வழங்குகிறார்.
பிரமாண்டப்படமான வேலாயுதம் வெள்ளித்திரையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையவுள்ளது.

நண்பன் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பம்


விஜய் ஜீவா இலியானா சிறீகாந்த் ஆகியோர் ஏனைய படப்பிடிப்புகளில் இருந்ததால் சிறிது காலம் கழித்து சங்கர் நண்பன் படத்தை மீண்டும் தொடங்கினார்.விஜய் தற்பொழுது வேலாயுதம் படத்தை முடிப்பதற்காக விரைவாக படத்தில் நடித்து வருகிறார்.இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் கோயம்புத்தூரில் நண்பன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.வந்தான் வென்றான் ரெளத்திரம் ஆகிய படப்பிடிப்புக்களை பிரான்ஸ் சுவிஸர்லாந்தில் முடித்து கொண்டு நேற்று மாலை ஜீவா கோயம்புத்தூர்படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.அடுத்த இரு கிழமைகளுக்கு நண்பன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.இலியானாவும் இப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.சங்கரின் இயக்கத்தில் நண்பன் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக தீபாவளிக்கு வர உள்ளது.

Thursday, May 26, 2011

நான் தீவிரமான் விஜய் ரசிகை - ஸ்ரேயா

சிறுத்தை' படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் 'சகுனி'. இப்படத்தை சங்கர் தயாள் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் நாயகிகள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று கார்த்திக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் "எனக்கு கார்த்தியுடன் நடிக்க ஆசை தான். ஆனால் 'சகுனி' படத்திற்காக என்னையும் இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார் ஸ்ரேயா.

அதுமட்டுமல்லாது தனது டிவிட்டர் இணையத்தில் "  அஜீத், சிம்பு ஆகியோரை சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவர்களுடன் இன்னும் இணைந்து நடிக்கவில்லை. தனுஷ் எனக்கு நெருங்கிய நண்பர். நான் தீவிரமான் விஜய் ரசிகை " என்று தெரிவித்துள்ளார்.

தற்போது ஸ்ரேயா ஜீவாவிற்கு ஜோடியாக 'ரெளத்திரம்' படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

விஜய் ஹீரோயின் பாவனா


விஜய்யின் 'வேலாயுதம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. சங்கரின் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்டின் ரீமேக்கான 'நண்பன்' படத்தின் படப்பிடிப்பும் முழு வேகத்தில் நடந்து வருகிறது.  இதையடுத்து சீமானின் இயக்கத்தில் பகலவன் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

பகலவன் படத்தின் திரைக்கதையை ஏறக்குறய சீமான் முடித்துவிட்டதாகவும், படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிகிறது. இப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக பாவனா நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு பாவனா பொருத்தமாக இருப்பார் என்று சீமான் தேர்வு செய்ததாக தெரிகிறது.

கோயம்புத்தூரில் நண்பன்


சங்கர் தமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் மட்டும் அல்ல தயாரிப்பாளரும் ஆவார்.சங்கரின் ஜென்டிமேன் தொடக்கம் எந்திரன் வரை இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்.தமிழ் சினிமாவின் 18 வருடங்களை பூர்த்தி செய்து விட்டார்.இவருடைய அடுத்த படம் நண்பன்.இப்படம் ஹிந்தி பிளாக்புஸ்டர் மூவி 3 இடியட்ஸின் ரீமேக்காகும்.சங்கரின் முதலாவது ரீமேக் படம் இதுவாகும்.நேற்று நண்பன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இடம்பெற்றது.ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வந்த சங்கர்.நேற்று கோயம்புத்தூரில் படப்பிடிப்பை நடத்தினார்.சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டன.ஜீவா தனது அடுத்த படமான  ரெளத்திரம் படப்பிடிப்பை சுவிஸர்லாந்தில் முடித்துக்கொண்டு விரைவாக வந்து நண்பன் படத்தில் தனது காட்சியில் நடித்தார்.இலியானாவும் தனக்கு ஏற்பட்ட காய்சலை மாற்றிக்கொண்டு கோயம்புத்தூரில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

Wednesday, May 25, 2011

வேலாயுதம் நாயகனை மயக்க ஹன்சிகா ஆட்டம்


இயக்குனர் பிரபு தேவா இயக்கிய "எங்கேயும் காதல்" படத்தில் நாயகன் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா இணைந்து நடித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் கமெராமேன் நீரவ் ஷா, பிரபுதேவா இருவரும் ஹன்சிகாவின் அழகை புகழ்ந்து தாலாட்டியுள்ளார்கள். மேக்கப் இல்லாத, "கொழு கொழு" திம்சுக்கட்டை இயற்கை அழகை சிலாகிக்கும் விதத்தில் "தெர்மாகூல் அழகி" என்று செல்லப்பெயர் வைத்து அழைத்துள்ளார்களாம்.

இயக்குனர் ராஜேஷ் இயக்கும் "ஒரு கல் ஒரு கண்ணாடி" படத்தில் நாயகனாக நடிக்கும் உதயநிதியை நாயகி ஹன்சிகா மொத்வானி உற்சாகமாக "ஜில்னு ஒரு நண்பன்" என்றே கூப்பிடுவாராம். படப்பிடிப்பு தளத்தில் சந்தானம் வாய்க்கு வந்தபடி அனைவரையும் நக்கல் பண்ணுவதையும் ஹன்சிகா ரசித்துள்ளாராம்.
ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் படத்தில் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் விஜய் உடன் "வேலாயுதம்" படத்தில் நடித்துள்ளேன். செழிப்பான கிராமத்து பெண்ணாக இதில் வருகிறேன். வைதேகி என்ற பெயரில் ஆட்டம் ஆடி, விஜய்யின் மனதை கொள்ளையடிக்கிற கதாபாத்திரம்.
என் ஆட்டம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். விஜய்யுடன் சேர்ந்து ஆடுவது எனக்கு கனவாக இருந்தது. இப்போது நிறைவேறியுள்ளது என்றும் ஹன்சிகா மொத்வானி கூறியுள்ளாராம்.

வீடியோ

Tuesday, May 24, 2011

இயக்குனர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் ஏதோ...?


கனவுத் தொழிற்சாலையின் கட்டளைத் தளபதிகள் என்று சொல்லக் கூடியவர்கள் இயக்குனர்கள். தங்கள் படைப்புக்களை உருவாக்குவதற்காகச் சிரமங்கங்கள் பலவற்றைச் சந்திக்க வேண்டியிருப்பது என்பது உண்மையாக இருந்தாலும் கூட,  படப்பிடிப்பு என்று ஆரம்பித்துவிட்டால் இயக்குநர் உத்தரவுக்ககாகவே
எல்லோரும் காத்துக்கிடப்பார்கள் என்பதுவும் நடைமுறை உண்மை. இவ்வாறான கட்டளைத் தளபதிகளின் வீட்டுக்குள் சத்தமில்லாத யுத்தம் ஒன்று நடைபெறத் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது.
பாரதிராஜா தலைவராகவும், ஆர்.கே. செல்வமணி செயலாளராகவும் பொறுப்பு வகித்து வரும், தமிழ்நாடு திரைபட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்கு பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து நேற்று முந்தினம், சென்னை கமலா திரையரங்கில், சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பாரதிராஜா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில திரு. பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி தவிர, சங்கத்தின் பொருளாளராக இருந்து திடீரென்று ராஜினாமா செய்த ஆர்.சுந்தராஜன், தற்போதைய பொருளாளர் இயக்குனர் எழில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர, இயக்குனர்கள் பாலுமகேந்திரா, எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், வசந்த், சேரன், எஸ்.பி.ஜனநாதன், பேரரசு, அகத்தியன், ஆர்.வி.உதயகுமார், ஈ.ராமதாஸ், சீனு ராமசாமி, வெற்றி மாறன், ஏ. ஜெகந்நாதன், டி.கே.சண்முக சுந்தரம், சசிமோகன், உள்ளிட்ட மேலும் பல இயக்குநர்களும், 2000 உதவி இயக்குநர்களும் கலந்து கொண்டு அரங்கை நிரப்பினார்கள். ஆனால் இந்தக் கூட்டத்திற்கு மீடியா அனுமதிக்கப் படவில்லை(அதற்காக நாம் போகாமல் இருக்கமுடியுமா?).
கூட்டம் ஆரம்பம் ஆகி, தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும், இயக்குநர்கள், சங்க பொது செயலாளர் ஆர்.கே.செல்வமணி,. "நமது கலைகுடும்பத்தின் மூத்த சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் உடல் நலம் பெற்று உடன் வீடு திரும்ப நாம் அனைவரும் எழுந்து நின்று கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்" என்று அறிவித்தார். உடன் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் கூட்டுப் பிரார்த்தனை செய்தார்கள்.
பிராத்தனை முடிந்து சங்கத்தின் கணக்கு வழக்குகளை படிக்க சங்கத்தின் நியமிக்கப் பட்ட பொருளாளர் எழில் மைக் முன்பு வந்தார். அப்போது எழுந்து ஆவேசப்பட்டார் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்த இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். “ சங்கத்தின் கணக்கு வழக்குகளை அச்சிட்டு உறுப்பினர்களுக்கு கொடுக்காமல்… எதற்கு வரவு செலவு கணக்கு படிக்கிறீர்கள்.” என்றார்.
அதன் பிறகு சுருக்கமாக அச்சடிக்கப்பட்ட பாலண்ஸ் சீட் உறுப்பினர்களுக்கு ஜெராக்ஸ் மூலம் வழங்கப்பட்டது. சுந்தரராஜனுக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டதும் மைக்கைப் பிடித்தார் “ எனக்கு சங்க நிர்வாகிகள் நன்றாக தண்ணீர் காட்டி விட்டார்கள். சங்கப்பணம் அநியாமாக பலநிலைகளில் விரயம் செய்யபட்டிருகிறது. இதை தட்டிக்கேட்டி கணக்குகளில் கையெழுத்துப் போடமுடியாது என்று சொன்னேன். ஆனால் என அனுமதி இல்லாமலேயே சங்கப்பணம் கையாளப்படுகிறது. அதனால்தான் ராஜினாமா செய்தேன்” என்றார்.
இதற்கு பதிலளித்த செல்வமணி சங்கக் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்ய அனுப்பப்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் சங்கத்துக்கு வந்து கணக்குகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். உடன் தேர்தல் தேதியையும் அறிவித்தார். தங்கள் தலைமையிலான செயற்குழு சங்க செயல்பாட்டை கணனி மயமாகியதாகவும், சுந்தர்ராஜன் இருந்திருந்தால் டி-40 இயக்குனர் சங்க விழாவை நடத்தியிருக்க முடியாது என்று குற்றம் சாட்டினார்.
டி-40 விழாவை சன் டிவிக்கு விற்ற வகையில் 2.60 கோடி இயக்குனர் சங்கத்துக்கு கிடைத்தது. ஆனால் அந்தப் பணத்தில் அந்த விழாவை நடத்தவே 1.5 கோடி செலவானதாக கணக்கு காட்டுகிறார்களாம் இயக்குனர் சங்கத்தில். ஒரு விழாவை நடத்த இவ்வளவு பணம் எப்படி செலவாகும் என்று உதவி இயக்குனர்கள் அதிர்ச்சியுடன் பேசியபடி கலைந்து சென்றனர். ஜூன் இறுதியில் நடைபெற இருக்கும் இயக்குனர் சங்கத்தேர்தலில் ஆர்.சுந்தராஜான் தலைமையில் புதிய ஆணி முளைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

தமிழ் திரையுலகம் சங்கமிக்கப்போகும் விழா!


radha-ravi-hari-radha-ravi-24-05-11
வில்லன் நடிகர் ராதாரவியின் மனக் ஹரி ராதாரவியின் திருமணம் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி, சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடக்கிறது. மணமகன் ஹரி பி.காம் படித்திருக்கிறார். விரைவில் வெளிவரவிருக்கும் 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மணப்பெண் பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை ஆவார்.


ஜுன் 4ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.


ராதா ரவி நடிகர் சங்க பொதுச்செயலாலராக இருப்பதால், தமிழ் திரையுலகைச் சார்ந்த அனைத்து வி.ஐ.பி களுக் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது சிறப்புபார்வை


யாருமே எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் படத்திற்குப் போய் இத்தனை விருதுகள் குவியும் என்று. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என கையில் கிடைத்த விருகளையெல்லாம் எடுத்துக் கொடுத்து தேசிய விருதுகளையே பெரும் கேலிக்கூத்தாக்கியுள்ளது 58வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான தேர்வுக் கமிட்டி.

சத்தியமாக இந்த விருதுகளை ஆடுகளம் குழுவினரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திரைக்கு வந்த வேகத்திலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய படம் ஆடுகளம். மக்களால் சுத்தமாக ரசிக்கப்படாத ஒரு படம். வெறும் விளம்பரத்தை மட்டுமே வைத்து ஓட்டிப் பார்க்க முயன்ற சன் பிக்சர்கஸ் தயாரித்த படம் இது.

படம் தரக்குறைவானது என்று கூற முடியாவிட்டாலும் கூட விருதுகளுக்குரிய தகுதிகள், அதுவும் இத்தனை விருதுகளை அள்ளும் அளவுக்கு இந்த படம் உள்ளதா என்பதுதான் அத்தனை பேரின் மனதிலும் ஓடும் கேள்விகள்.

காரணம், இந்த ஆண்டு பல நல்ல படங்களைக் கண்டது தமிழ்த் திரையுலகம். நந்தலாலா, அங்காடித் தெரு, மைனா, விண்ணைத் தாண்டி வருவாயா, மதசாரப்பட்டனம், களவாணி என இந்த வரிசை நீண்டது.

களவாணி படத்தில் நடித்த விமலின் நடிப்பை இயக்குநர் கே.பாலச்சந்தர் இப்படி விமர்சித்திருந்தார் - இயல்பான, எதார்த்தமான நடிப்பு, அருமையான நடிகர் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்துள்ளார்.

அங்காடித் தெரு படத்தைப் பார்த்து கலங்காத, பதறாத மனங்களே கிடையாது. பிரகாசமான வெளிச்சத்திற்கு மத்தியில் இருட்டு வாழ்க்கை வாழ்ந்து வரும் அப்பாவி இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து போட்டு, மனங்களை உலுக்கியெடுத்த அருமையான படம்.

இப்படி ஒரு கதையை தமிழ் சினிமாக்காரர்கள் ஏன் இத்தனை காலமாக மக்களுக்குக் கொடுக்கவே இல்லை என்று அத்தனை பேரும் அதிசயித்துப் போன படம் அங்காடித் தெரு. அபாரமான நடிப்பு, அருமையான திரைக்கதை, இயல்பான இசை, இயற்கையான நடிப்பு என படம் முழுக்க சிறப்புகள்தான் அதிகம்.

அதேபோல இசைக்காக பேசப்பட்ட படம் நந்தலாலா. அதன் கதை, வேறு ஒரு இடத்திலிருந்து உருவி எடுக்கப்பட்டது என்றாலும் கூட படத்தின் பி்ன்னணி இசை மிகப் பிரமாதமாக இருந்ததாக அத்தனை பேராலும் பேசப்பட்ட படம் நந்தலாலா. இசைஞானி இளையராஜா என்ற ஒரே ஒரு மனிதரின் அபாரமான இசைதான் இந்தப் படத்தை தூக்கிப் பிடித்து நிறுத்தியது என்று கூறலாம். இந்த இசைக்கு விருது தரப்படவில்லை.

பிறகு மைனா. இந்தப் படத்தைப் பாராட்டாத வாய்களே இல்லை. கமல்ஹாசன் படத்தின் ரிலீஸுக்கு முன்பே கூறி விட்டார். தமிழ் சினிமா இனி நன்றாக இருக்கும், நான் நிம்மதியாக தூங்குவேன் என்று கூறி விட்டார். படம் வெளியான பின்னர் அதைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தோ, இந்தப் படத்தில் நான் நடிக்காமல் விட்டு விட்டேனே என்று ஆதங்கப்பட்டார். படத்தைப் பார்த்த அத்தனை பேரும் பாராட்டிய விஷயம், இயல்பான கதை, அருமையான திரைக்கதை, அபாரமான நடிப்பு, அழகான இசை ஆகியவற்றைத்தான்.

இதேபோல ஒரு சாதாரண கதையை மிக மிக அழகாக, கவிதை போல வடித்திருந்தார் இளம் இயக்குநர் விஜய் தனது மதராசபட்டணம் படத்தில். இப்படத்தின் கதையும் சரி, அதில் நடித்த எமி ஜாக்சனும் சரி, இசையும் சரி எல்லாமே பிரமாதம். இந்தப் படத்தைப் பற்றி பல பக்கங்கள் கொண்ட மிக நீண்ட விமர்சனத்தை எழுதி சிலாகித்திருந்தார் கே.பாலச்சந்தர். உலகின் மிகச் சிறந்த இயக்குநர் வரிசையில் விஜய் அமருவார் என்றும் புகழாரம் சூட்டியிருந்தார். விஜய்யின் இயக்கம் அவ்வளவு அபாரமானதாக இருந்தது.

இப்படி எத்தனையோ படங்கள், சிறப்பான படங்கள், அபாரமான படங்கள், சிறந்த நடிப்பு, இசை, இயக்கம், திரைக்கதை என வந்திருந்தும் இந்தப் படங்களுக்கு ஒரு விருது கூட தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பது பெரும் வியப்பாக உள்ளது. சிறப்புக் குறிப்பில் கூட இந்தப் படங்களில் ஒன்று கூட இடம் பெறவில்லை. அதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உட்கார்ந்து யோசித்தாலும், படுத்தபடி யோசித்தாலும் கூட ஆடுகளத்திற்கு இத்தனை விருதுகள் எப்படி கிடைத்தன என்பதற்கு சத்தியமாக விடை தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுதா?