பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, December 31, 2011

Vijay’s Nanban Theatre list


 Shankar’s Nanban finally is ready to rock and roll this pongal 2012. Nanban has Ilayathalapathy Vijay, Jiiva, Srikanth, Ileana, Sathyaraj and S J Surya in the lead roles.

The huge theatre list of Vijay’s Nanban are as follows. This is only the list of Chennai (also many screens are to be added says sources), it seems like Nanban will have a very big opening with maximum number of screens around the world.

The Theatrical Trailer of Nanban can be seen in the following theatres in which the film is to be released.

Sathyam
Santham
Escape
Inox
Devi
Devi Bala
Albert
Woodlands
Woodlands Symphony
Abirami 7 Star
Sri Annai Abirami
Sangam
Roopam
PVR
Kamala
Udhayam
Chandran
Saidairaj
IDreams
Maharani
Bharath
Gopikrishna

Friday, December 30, 2011

2011 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

எல்லா படங்களுமே உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டே உருவாக்கப்படுகின்றன.  ஆனால், வெளியாகும் எல்லா படங்களுமே வெற்றி பெறுவதில்லை. 

2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில : 

யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும் கேமரா, தரையைப் பார்த்தே பேசும் ஹீரோக்கள், 15 பேராக இருந்தாலும் ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு போல வரிசையில் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் அடியாட்கள்... என 'மிஷ்கின் கிளிஷே’க்கள் இதிலும் அதிகம். பலவீனமான வியூகம் காரணமாக யுத்தச் சத்தம் மட்டுமே கேட்டது.

நடுநிசி நாய்கள் : சிம்பு - கெளதம் கூட்டணியில் வெளிவந்து தமிழக இளைஞர்கள் கொண்டாடிய 'விண்னைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இடையே வந்த படம். பின்னணி இசையே இல்லாமல் வெளிவந்தது மட்டும் தான் இந்த படத்தின் ஹைலைட். பெண்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்ததால்  தோல்வியுற்ற படம்.

சீடன் : திருடா திருடி படத்திற்கு பிறகு சுப்பிரமணிய சிவா - தனுஷ் இணைந்த படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இக்காலத்தில் தனுஷை சாமியாக வைத்து கதைக்களம் இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

மாப்பிள்ளை : ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய படம் என்றாலும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஒரு பெருங்கூட்டத்தை நாயகன் அசால்ட்டாக அடிப்பது என்பது போன்ற விஷயங்கள் அதிகமாக  இருந்ததால், படம் பார்க்கும் கூட்டத்தை கவரவில்லை.

எங்கேயும் காதல் : ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜெயம் ரவி நடிக்க பிரபுதேவா இயக்கி இருந்தார்.  தொய்வான திரைக்கதை அமைப்பு என்பதால் வரவேற்பு இல்லை. 

வேங்கை : 'சிங்கம்' பெற்ற வரவேற்பை அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் அடுத்த அடுத்த காட்சி என்ன, வசனம் என்ன, பாடல் எப்போது வரும் என படம் பார்த்தவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்ததால்.. இந்த முறை ஹரி.. ரொம்ப் ஸாரி !

ரெளத்திரம் : 'கோ' என்ற வரவேற்பு பெற்ற படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான படம்.  வில்லன் பில்டப் ஓவராக வைத்து இறுதியில் வில்லன் யார் என்பதை காட்டும் போது மக்களிடையே சிரிப்பை வரவழைத்த படம். திரைக்கதையில் கவனமின்மையால் மக்களிடையே கவனிக்கப்படாமல் போனது. 

வந்தான் வென்றான் : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். படம் பார்த்தவர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாக இருந்ததால், வசூலும் குறைவாகவே இருந்தது.

வெடி : தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்’ படத்தை சௌகர்யமாகக் தமிழில் கடத்திய படம்.  விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. 'அவன் இவன்' விஷாலைப் பார்த்துவிட்டு ஆசையாக வெடி பார்க்கப் போன மக்களுக்கு ஏமாற்றம். 

வித்தகன் : டான் அவதாரம் எடுத்து சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் 'வித்தகன்’!. போதைப் பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கம் விடுவிப்பது எப்படி மிலிந்த் சோமனுக்குத் தெரியாமல்போகிறது? அவர்கள் எப்படி பார்த்திபனின் கஸ்டடிக்கு வருகிறார்கள்? அந்தக் கடத்தல்காரர்களின் பாஸ் யார்? என்று எக்கச்சக்க கேள்விகளால்... விளையாட்டுத் துப்பாக்கி ஆகிவிட்டது வித்தகனின் கன்!

ஒஸ்தி :'நான் கண்ணாடி மாதிரிலே’ என நல்லவனுக்கு நல்லவனும் கெட்டவனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி’ போலீஸ் கதை! இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி’!. படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று? 

ராஜபாட்டை :சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கமர்ஷியல் படம். சரியான கூட்டணி.. ஆனால் தேர்ந்தெடுத்த கமர்ஷியல் கதை தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  விக்ரமிற்கும் சரி, சுசீந்திரனுக்கும் சரி இது நிஜமான 'ராஜபாட்டை' இல்லை.

தமிழ் சினிமா 2011 - ஒரு பார்வை

தமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சிறந்த வருடமாக கருதப்படுகிறது. 2011 ஆண்டு வெளியான படங்களில் எது எல்லாம் மக்களிடமும், திரைப்பட விமர்சகர்களிடமும் வரவேற்பை பெற்றன என்பது குறித்து ஒரு பார்வை :

ஆடுகளம் : தனுஷின் எதார்த்தமான நடிப்பு, வெற்றிமாறனின் சிறப்பான திரைக்கதை அமைப்பு என இரண்டும் ஒரு சேர கலந்ததால் மக்களிடமும், திரைப்பட விமர்சகர் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த எடிட்டர் (T.E.கிஷோர் ) என இப்படத்திற்கு மூன்று தேசியவிருதுகளைக் கொடுத்து கெளரவித்தது  மத்திய அரசு. 

சிறுத்தை : 'விக்ரமாக்குடு' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்.  போலீஸ் அதிகாரி, திருடன் என முதன் முறையாக கார்த்தி இருவேடங்களில் நடித்த படம். கார்த்தியின் நடிப்பு, சந்தானத்தின் காமெடி, வேகமான திரைக்கதை அமைப்பு ஒன்றிணைந்த படம். வரவேற்பு மற்றும் வசூல் என இரண்டிலும் தயாரிப்பாளருக்கு திருப்தி அளித்த படம்.

காவலன் : 'பாடிகார்ட்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக். கமர்ஷியல் படங்களிலேயே விஜய்யை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சின்ன மாற்றம். நீண்ட நாட்கள்.. இல்லை.. நீண்ட மாதங்கள் கழித்து, கமர்ஷியல் மசாலாக்கள் குறைத்து, காமெடி கலந்த வேடத்தில் விஜய் நடித்த படம்.  பட வெளியீட்டிற்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டாலும் தடைகளை தாண்டி வெளிவந்து வரவேற்பை பெற்ற படம்.

பயணம் : விமானத்தை கடத்தியவர்களிடம் இருந்து பயணிகள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யத்துடன் சொன்ன திரைக்கதை.  ஒரு ஹைஜாக் படத்தில் காமெடியை சரியான இடத்தில் கலந்தது ராதாமோகனின் டச். 'ரட்சகன்' படத்திற்குப் பிறகு  நாகர்ஜுனா நடித்த தமிழ் படம்.

குள்ளநரி கூட்டம் : நான்கு இளைஞர்கள் எப்படி போலீஸ் அதிகாரிகள் ஆகிறார்கள் என்ற கதையை நகைச்சுவையுடன் சொன்ன படம். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்த படம். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திற்குப் பிறகு விஷ்ணுவுக்கு அமைந்த வெற்றிப்படம். 

பொன்னர் சங்கர் : கலைஞரின் வசனம், தியாகராஜன் அருமையான இயக்கத்தில் வெளிவந்தது பொன்னர் சங்கர்.  கிராபிக்ஸ் காட்சிகளா  என்பது தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு என இரண்டுமே அமைந்தது இப்படத்தின் ப்ளஸ். பிரஷாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த படம்.

கோ : கே.வி.ஆனந்த இயக்கத்தில் வெளியான படம். பத்திரிக்கை புகைப்பட கலைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்த படம். கே.வி.ஆனந்த, சுபா என மூவரின் திரைக்கதை அமைப்பு, கே.வி.ஆனந்தின் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் என மூன்றுமே மக்களிடம் வரவேற்பை பெற காரணமாக அமைந்தது.

வானம் : ' வேதம்' தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக். ஐந்து தனித்தனி கதைகள் ஒருகட்டத்தில் எல்லாம் ஒன்றாக இணைய, க்ளைமாக்ஸ் என்ற திரைக்கதை அமைப்பில் வெளிவந்த படம். ஐந்து கதைகளில் ஒரு கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தது தான் இப்படத்தின் ஹைலைட். 

அழகர்சாமியின் குதிரை : பாஸ்கர் சக்தியின் சிறுகதையை படமாக வடிவமைத்து சுசீந்திரன் இயக்கிய படம். எதார்த்தமான பாத்திர படைப்புகள், திரைக்கதை அமைப்பு என திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற படம்.

ஆரண்ய காண்டம் : ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கிற சிலந்தி வலை சதிப் பின்னல்களே 'ஆரண்ய காண்டம்’. திரைக்கதை அமைப்பு, ஷார்ப்பான வசனங்கள் என திரைப்பட விமர்சகர்கள் பாராட்டிய படம். வெளிவரும் முன்னே பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை குவித்தது. யுவன் சங்கர் ராஜா அமைத்த பின்னணி இசை, வினோத் ஒளிப்பதிவு என அனைத்து தரப்பினரின் உழைப்பு தான் இப்படத்தின் விருதுகளுக்கு காரணம்.

தெய்வத்திருமகள் : அஞ்சு வயசுப் பெண்ணின் அப்பாவுக்கும் அஞ்சு வயசு என்றால் என்ன ஆகும் என்பதை அழகாக காட்டிய படம். விக்ரமின் நடிப்பு, குழந்தை நட்சத்திரம் சாராவின் மழலை கொஞ்சும் நடிப்பு என தமிழக மக்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம். ஜி.வி.பிரகாஷ் இசை, இயக்குனரின் விஜய்யின் நேர்த்தியான திரைக்கதை அமைப்பு இவ்விரண்டுமே இப்படத்திற்கு பலமாக அமைந்தது.

காஞ்சனா : தன் கனவைச் சிதைத்த வில்லன்களை லாரன்ஸின் உடலில் புகுந்து பழி தீர்க்கும் திருநங்கை ஆவி... 'காஞ்சனா’!. லாரன்ஸ் கதை, திரைக்கதை அமைப்பு, கோவை சரளா காமெடி என மக்களை ரசிக்க வைத்தப் படம். படம் பார்த்தவர்கள் ஒன்று, ஆவியைப் பார்த்துச் சிரிப்பார்கள். அல்லது திருநங்கைகளைப் பார்த்தால் மரியாதை கொடுப்பார்கள். இந்த இரண்டுமே 'காஞ்சனா’வுக்குக் கிடைத்த வெற்றிகள்!

வெங்காயம் : ஒரு கிராமத்தில் அருள்வாக்கு, ஜோசியம் சொல்லும் சாமியார்கள் வரிசையாகக் கடத்தப்படுகிறார்கள். சாமியார்களைக் கடத்தியவர்கள் யார், ஏன் கடத்தினார்கள், அவர்களை என்ன செய்தார்கள் என்னும் முடிச்சுகளை அடுத்தடுத்து உரிக்கிறது வெங்காயம். சமூக அக்கறையுடன் பகுத்தறிவுக் கதை சொன்ன விதத்தில் இந்த வெங்காயம்... காரம்தான்!

மங்காத்தா : கிரிக்கெட் மேட்ச் ஃபிக்ஸிங் பணம் 500 கோடியை, யார் அலேக் செய்வது என்ற தப்பாட்டமே 'மங்காத்தா’! 'தல ரசிகர்’களுக்காக 'தல ரசிகர்’களால் உருவாக்கப்பட்ட 'தல’ சினிமா!. அஜீத் 50வது படம், அஜீத்தின் வில்லத்தனமான நடிப்பு, வெங்கட்பிரபு திரைக்கதை அமைப்பு, யுவனின் இசை என தமிழக மக்களிடம் வரவேற்பையும் கல்லா நிறைய காசையும் அள்ளிக் கொடுத்த படம்.

எங்கேயும் எப்போதும் : எதிர்பாராத கணத்தில் நிகழும் ஒரு விபத்து, சிலரின் வாழ்க்கையை எப்படியெல்லாம் சிதைத்துக் குலைக்கிறது என்பதைச் சொல்லும் படம். இந்த இழப்பும் துயரமும் நம்மில் யாருக்கும் 'எங்கேயும் எப்போதும்’ நடக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதிரவைத்ததில், அறிமுக இயக்குநர் சரவணனுக்கு அடிக்கலாம் ஒரு வெல்கம் சல்யூட்! முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளாராகவும் ஆனார்.

வாகை சூட வா : மின்சாரம், போக்குவரத்து வசதிகள் இல்லாத 1960-கள் காலகட்டம். 'கண்டெடுத்தான்காடு’ என்கிற கிராமம். செங்கல் சூளைக் கூலிவேலைதான் அங்கு பிழைப்பு. படிப்பறிவு இல்லாக் கூட்டத்தைக் கொத்தடிமைகளாக நடத்துகிறார் முதலாளி. அங்கு வாத்தியாராக வரும் விமல், குழந்தைகளைக் கல்விப் பாதைக்கு இழுக்க முயற்சிக்கிறார். அது உண்டாக்கும் சலசலப்பு கிராமத்துக்கே ஒரு விடியலை உண்டாக்குகிற கதை! 'களவாணி' சற்குணம் இயக்கி இருந்தார்.

சதுரங்கம் : நேர்மையான நிருபர் ஸ்ரீகாந்த் எழுதும் புலனாய்வுக் கட்டுரைகளால் அமைச்சர்கள், அதிகாரிகள், தாதாக்கள் எனப் பலரும்  பாதிக்கப்படுகிறார்கள். ஸ்ரீகாந்த்தின் காதலி சோனியா அகர்வால் கடத்தப்படுகிறார்.  சோனியாவைக் கடத்தியது யார்? அவர் மீட்கப்பட்டாரா என்பதைப் பரபரப்பாக, விறுவிறுப்பாகச் சொல்கிறது 'சதுரங்கம்’. கரு.பழனியப்பன் இயக்கத்தில் படம் தயாராகி,  பல மாதங்கள் கழித்தே வெளியானது இப்படம்.

ஏழாம் அறிவு : சீனத்தின் சிறப்புகளாக இன்று உலகமே கொண்டாடும் அரிய மருத்துவத்தையும் அதிரடித் தற்காப்புக் கலையையும் சீனர் களுக்குக் கற்றுக் கொடுத்தவன் ஒரு தமிழன் என்ற சரித்திரமே '7ஆம் அறிவு’ சொல்லும் செய்தி! ஏ.ஆர்.முருகதாஸ் திரைக்கதை அமைப்பு, ரவி. கே.சந்திரனின் ஒளிப்பதிவு, சூர்யா மற்றும் JOHNNYயின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே கலந்து மக்களிடம் வரவேற்பை பெற்ற படம். ஸ்ருதி ஹாசன் இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகியாக அறிமுகமானார்.

வேலாயுதம் : நகரத்தில் நடக் கும் அநீதியை அழிக்க, ஒரு பாசக்காரக் கிராமத்து அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்! விஜய் நடிப்பு, ஜெயம் ராஜாவின் திரைக்கதை, விஜய் ஆண்டனி இசை, சந்தானத்தின் காமெடி, என அனைத்து கலந்து மக்களிடன் வரவேற்பை பெற்ற படம்.

மயக்கம் என்ன : காதல், லட்சியம் இரண்டிலும் மனசு சொல்கிற திசையில் செல்லும் ஒருவன் கரை சேர்ந்தானா என்று சொல்லும் 'மயக்கம் என்ன’! செல்வராகவனின் திரைக்கதை, ராம்ஜியின் ஒளிப்பதிவு, தனுஷின் நடிப்பு, ஜி,வி.பிரகாஷின் துள்ளல் மிகுந்த பாடல்கள் என அனைத்தும் ஒருங்கே அமைந்து இளைஞர்கள் கொண்டாடிய படம்.

பாலை : வடக்கில் இருந்து வந்த கூட்டம் ஆயக்குடியைக் கைப்பற்றி, தமிழர்களைத் தாய் நிலத்தில் இருந்து துரத்துகிறது. அருகில் இருக்கும் நிலப்பரப்புக்கு முல்லைக்குடி என்று பெயர் சூட்டி, அங்கு வாழத் தொடங்கும் தமிழர்கள் பாலையின் பஞ்சத்தையும் எதிரிகளையும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை!

போராளி : பகை தீர்க்கத் துரத்தும் மனித விலங்குகளிடம் இருந்து வாழ்க்கையைக் காப்பாற்றப் போராடும் 'போராளி’!. சமுத்திரக்கனியின் திரைக்கதை, சசிக்குமார் நடிப்பு மற்றும் தயாரிப்பு, கஞ்சாகருப்பு மற்றும் சூரியின் காமெடி என மக்களிடம் வரவேற்பை பெற்ற படம்.

மெளனகுரு : போலீஸ் நினைத்தால் சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைந்து, ஒரு சாதாரணனை என்ன பாடுபடுத்த முடியும் என்பதே மௌன குரு. ஒரு சாதாரணக் கதையை செம சஸ்பென்ஸ் த்ரில்லராக்கி கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சாந்தகுமார். காவல் துறையின் கறுப்பு ஆடுகளைப் பதிவு செய்த அதே பாதையில், சின்சியர் அதிகாரிகளின் சிரமத்தையும் கச்சிதமாகச் சொன்ன விதத்துக்காக சாந்தகுமாருக்கு... ஒரு புன்னகைப் பூங்கொத்து!

ஹி்ட்டாகும் ஹிந்தி மொழி மாற்றுத் திரைப்படங்கள்


தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் திரைப்படங்களை பொழிமாற்றம் செய்வது ஹிந்தி திரையுலகில் தற்போது அதிகரித்துள்ளது.
பிறமொழியில் வெளியாகும் படங்களை வேறு மொழியில் மொழிமாற்றம் செய்வது இயல்பான ஒன்றுதான். பொதுவாக 90 சதவிகித கன்னடப் படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிமாற்றப் படங்களாக இருக்கின்றன. இதே சூத்திரம் இந்தி சினிமாவிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் வெற்றியாகும் படங்களை மொழிமாற்றம் செய்வதற்கு இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட படங்கள் வெற்றியடைந்ததால், இந்த ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது.
தமிழில் நடிகர் சூர்யா, நடிகை அனுஷ்கா நடிப்பில் வெற்றியடைந்த சிங்கம் திரைப்படம் அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான வசூல் வழக்கமான படங்களை விட அதிகரித்துள்ளது. இதே போல காவலன் படம் சல்மான் நடிப்பில் பாடிகார்ட் என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இந்தப் படத்திற்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதே போல ஏழு படங்கள் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது. தெலுங்கிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட உத்தமபுத்திரன் இந்தியில் ரெடி என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளியுள்ளது. அடுத்து தெலுங்கில் கிக் என்றும் தமிழில் தில்லாலங்கடியாகவும் வெளியான படம், சல்மான் கான் நடிப்பில் விரைவில் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்படவுள்ளது.
இதே போல் ஜெயம் ரவி, ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்ற படம் ஹிந்தியில் ஜெனிலியா நடிப்பில் இட்ஸ் மை லைஃப் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. கார்த்தி நடித்த சிறுத்தை படம் இந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் உருவாகிறது. இதை பிரபுதேவா இயக்கவுள்ளார்.
இதே போல சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெற்றியான ‘காக்க காக்க’ படம் ஜான் ஆபிரகாம், ஜெனிலியா நடிப்பில் ஃபோர்ஸ் என்ற பெயரில் தயாராகிறது. தமிழில் வெற்றியான காதல் படத்தை இந்தி இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வான் இயக்க உள்ளார். இதுதவிர ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி மொழிமாற்ற திரைப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.
கமர்சியல் விஷயங்களை தென்னிந்திய படங்கள் சரியாக கலந்து கொடுப்பதால் படம் வெற்றியாகும் என்று ஹந்தி தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். கடந்த சில வருடங்களில் வெளியான கஜினி, வான்டட் ஆகிய மொழிமாற்றப்படங்கள் இந்தியில் வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தமிழ், தெலுங்கு பட மொழிமாற்றத்திற்கு இந்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்று விநியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 13… ஆனால் பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!


இந்த முறை பொங்கல் பண்டிகைக்கு இரண்டே படங்கள் வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன் நாளை மறுநாள் (டிசம்பர் 30-ம் தேதி) 13 படங்கள் வெளியாகின்றன.
இந்த 13 படங்களும் அரசு மான்யத்தை எதிர்பார்த்து, வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த 13 படங்கள்:
1. மதுவும் மைதிலியும்
2. பாவி
3. கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்
4. பதினெட்டான்குடி
5. வினாயகா
6. மகான் கணக்கு
7. வழிவிடு கண்ணே வழிவிடு
8. அபாயம்
9. வேட்டையாடு
10. மகாராஜா
இந்த பத்து படங்களும், நேரடி தமிழ் படங்கள்.
இவை தவிர, ‘வேட்டை நாயகன்,’ ‘ஸ்பீட்-2,’ ‘புயல் வீரன்’ ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் 30-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகின்றன.
ஆனால், பொங்கலுக்கு இரண்டே இரண்டு படங்கள் மட்டும் திரைக்கு வருகின்றன. அந்த படங்கள்:
நண்பன்
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் இணைந்து நடித்துள்ள படம். இந்தியில் வெளியான ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் இது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் இடம்பெற்றுள்ளது.
வேட்டை
ஆர்யா, மாதவன், சமீராரெட்டி, அமலாபால் ஆகியோர் நடித்த படம் இது. லிங்குசாமி இயக்கியுள்ளார். அவருடைய தம்பி சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்துள்ளார்.
தமிழகத்தில் மிகப் பெரிய விடுமுறை சீஸன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வார காலம் விடுமுறை. தினசரி 5 காட்சிகள் வரை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்கு பற்றாக்குறை மற்றும் போட்டிகளில் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பொங்கலுக்கு இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

'துப்பாக்கி' : சுடச்சுட ஷூட்டிங்

விஜய் எப்போதுமே ஒரு படத்திற்காக தனது கெட்டப்பை மாற்ற மாட்டார். 'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார் விஜய். 

'துப்பாக்கி'யில் மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட தன்னாலான எல்லாவற்றையும் செய்து வருகிறாராம்.  'நண்பன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்தவர், விழா முடிந்தவுடன் விமானத்தில் மும்பைக்கு பறந்துவிட்டார். 

மும்பையில் சுடச்சுட தயாராகி வருகிறதாம் ' துப்பாக்கி . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

Wednesday, December 28, 2011

அமீர்கானோடு என்னை ஒப்பிட வேண்டாம் விஜய்


பொங்கல் வெளியீடாக வெளிவர உள்ள படம் நண்பன்.  வித்தியாசமான 6 பாடல்களை கொண்டு வெளிவந்த நண்பன் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.
இப்படம் ஹிந்தி மெகா ஹிட் படமான 3 இடியட்ஸ் பட ரீமேக் ஆகும். சல்மான் மாதவன் சர்மான் ஜோசி ஆகியோர் நடித்தனர்.
நண்பன் படத்தின் ஒரிஜினல் நடிகர்களுடன் நண்பன் பட நடிகர்களை ஒப்பிட வேண்டாம் என படக்குழுவினர் ஏற்கனவே கூறியுள்ளனர். விஜய் இதை மீண்டும் கூறியுள்ளார். நண்பன் பட சல்மான் கானுடன் என்னை ஒப்பிட வேண்டாம் நண்பன் எனது படங்களில் வித்தியாசமான படம் . இப்படம் சங்கரின் முதலாவது ரீமேக் படம் இப்படம் ஹிந்தி படத்தை விட புதுசாக இருக்கும் என்றார். தமிழிற்கு இது ஒரு புதுப்படம் என்றார்.

விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி

இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.

'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'.

''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...

''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''

மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.

''ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி. 

நண்பன் இசை வெளியீட்டுக்கு இலியானா வராதது ஏன்?

சங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிரமாண்ட படமான நண்பன் பட பாடல் வெளியீடு கோவையில் டிசம்பர் 23 ம் திகதி இடம்பெற்றது.  இவ் பிரமாண்ட விழாவுக்கு பலர் கலந்து கொண்டனர் ஆனால் படத்தின் கதாநாயகி இலியான வரவில்லை.
விஜய் ஜீவா சிறிகாந்த் எஸ்.ஜே.சூர்யா சத்தியன் அனுயா மற்றும் பலர் இவ்விழா நடப்பதற்கு முதல் வந்தனர். ஆனால் விழா தொடங்கிய பின்னும் இலியான வரவில்லை. ஆனால் இலியான கட்டயாம் வருவார் என கூறப்பட்டது. அதன் பின் இலியானாவோடு தொடர்பு கொண்டபோது ஹிந்தி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கு கொண்டதால் அவர் உடல் நலம் சரி இல்லாததால் வரவில்லை என கூறப்பட்டது.
விஜய் ஜீவா சத்தியராஜ் சிறிகாந்த் அனுஜா இலியான சத்தியன் ராகவா லோரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் தயாரிப்பில் இப்படம் பொங்கல் வெளியீடாக 2012 ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.

Tuesday, December 27, 2011

நண்பன் திரைப்படத்தின் புதிய தகவல்கள்


தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.
நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:
* ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார்.
* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விடயமாகும்.
* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும்.
* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.
* HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.
* ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது.

Monday, December 26, 2011

விஜய் படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம் சாங் ரெடி

முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என பெயரிட்டுள்ளனர். இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம் மேனன், தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம் ரகுமான். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு, தான் இசை அமைப்பதாக கூறியதோடு, படத்திற்கு தீம் சாங் ஒன்றை காம்போஸிங் செய்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரகுமான். 

ஜேம்ஸ் பாண்டு ஆகிறார் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்தக் கதை சீனா உட்பட பல வெளிநாடுகளில் உருவாகிறது. இந்த படம், ஜேம்ஸ் பாண்டு கதை போல, நிறைய அத்தியாயங்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்டு போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். 

விஜயை பிடிக்காதவர்களுக்கு, நண்பன் படத்தை பார்த்தால், பிடிக்கும்

"நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்." என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார். 

பொங்கல் போட்டி

வரும் பொங்கலுக்கு 'நண்பன்', 'வேட்டை', மற்றும் '3' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இதில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன், லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படங்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, தற்போது அவர் இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பதால் 'நண்பன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்தியில் வெளியான '' படத்தின் ரீமேக் படம் தான். ஆனாலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதால் புதுமைக்கு பஞ்சம் இருக்காது.  அதே போல் லிங்குசாமியின் 'வேட்டை' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. லிங்குசாமி படத்திற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை என்பதால் இவரது படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்த படத்தில் மாதவன், ஆர்யா கூட்டணி வெற்றி கூட்டணியாக மாற துடித்துக்கொண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி 'why this kolaveri di' பாடல் உலக முழுவதும் சூப்பர் ஹிட், இந்த பாடல் '3' படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. தனுஷின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு மிக பலம் சேர்க்கும். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் முதல் படமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொங்கல் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான  போட்டியை தரும் என்தில எந்தவித சந்தேகமும் இல்லை. 

Sunday, December 25, 2011

நண்பன் இசை விமர்சனம்


விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் நண்பன். இயக்கம் சங்கர். இசை ஹரிஸ்ஜெயராஜ். தயாரிப்பு ஜெமினி பிலிம்ஸ் .
இப்பதில் மொத்தம் ஆறு பாடல்கள்.
முதலாவது பாடல் அஸ்கு லஸ்கா
பாடியவர்கள் :- விஜய் பிரகாஷ் சின்மயி சுவி ஆகியோர் பாடியுள்ளனர். வித்தியாசமான சொற்களை கையாண்டுள்ளார் மதன் கார்கி. பல மொழி வசனங்களை உள்ளடிக்கி தொடங்கும் இப்பாடல் விஜய் இலியானா காதலை மையப்படுத்தி அமைக்கப்படுள்ளது. வித்தியாசமான சொற்களுடன் இனிமையான மெலடி இசைக்கு ஏற்ற வரிகளை கொண்டுள்ளது. இப்பாடலில் ஹரிசின் இசையும் மிக அருமையாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இப்பாடல் காதலர்களுக்கு பெரிய பிளஸ் . ஏனையவர்களின் காதுக்கும் மனதுக்கும் இனிமைதரும் பாடலாக அமைந்துள்ளது இப்பாடலை லண்டனில் படமாக்கியுள்ளார் சங்கர்.

 இரண்டாவது பாடல் :- என் பிரண்டை போல யாரு மச்சான்
இப்பாடல ஏற்கனவே பட முன்னோட்டதுடன் வெளியாகி ஹிட் அடைந்தது. இப்பாடலை கேட்க அனைவரும் காத்திருந்தனர் . அவர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. இப்பாடலின் இடையிடையே வித்தியாசமான இசை கருவிகளை பயன்படுத்தியுள்ளார் ஹரிஸ். கிரிஸ் மற்றும் சுசித் சுரேசன் இப்பாடலை பாடியுள்ளனர். நண்பனை பற்றிய பாடலாகவும் நண்பனை தேடும் பாடலாகவும் அமைந்துள்ளது.இப்பாடலை  ஜீவா மற்றும் சிறிகாந்த் விஜயை தேடும் விதமாக படமாக்கியுள்ளார் சங்கர். பாடலை எழுதியவர் விவேகா.
முன்றாவது பாடல் :- எந்தன் கண் முன்னே
ஆலப் ராஜு இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடலுக்குரிய வரிகளை எழுதியவர் மதன் கார்கி. கோ படத்தில் என்னமோ எதோ படலை பாடியவர் ராஜு அதன் பின் ஹரிசின் இசையில் இப்பாடலை பாடியுள்ளார். ஹரிசின் ஹிட்டர் இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. நல்ல இசை மிகவும் அருமையான உணர்வை ஏற்படுத்துகிறது.
நான்காவது பாடல் :- ஆல் இஸ் வெல்
ஹேமசந்திரன் மற்றும் முகேஷ் பாடியுள்ளனர். ந.முத்துக்குமார் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். த்ரி இடியட்ஸ் ஹிந்தி படத்தில் வெற்றி பெற்ற ஆல் இஸ் வெல் வரிகளை பயன்படுத்தியுள்ளார் முத்துக்குமார். இப்பாடலில் இளம் சந்ததியின் துடிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைத்துள்ளார் ஹரிஸ்.
ஐந்தாவது பாடல் :- இருக்கான
பா.விஜய் இப்பாடலின் வரிகளை எழுதியுள்ளார். விஜய் பிரகாஸ் ஜாவேத் அலி சுனிதி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். இப்படத்தின் குத்துப்பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலுக்கு அழகான செட் போட்டு படமாக்கியுள்ளார் சங்கர். இப்பாடல் ஹரிசின் மைகள் என்று சொல்லும் அளவுக்கு அருமையாக வந்துள்ளது.
ஆறாவது பாடல் :- நல்ல நண்பன்
நா.முத்துக்குமாரின் வரிகளுக்கு ராமகிரிச்ணன் மூர்த்தி இப்பாடலை பாடியுள்ளார். நண்பர்களுக்கு பிடிக்கும் வகையில் நட்பின் பெருமையை கூறும் பாடல்களாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ஆறு பாடல்களையும் வித்தியாசமாக அமைத்து மிகவும் இனிமையான இசையை வழங்கியுள்ளார் ஹரிஸ். நண்பன் பாடல்கள் அனைவரது இதயத்தையும் கவரும் பாடல்களாக வந்துள்ளது.
நண்பன் இசைக்கு எனது புள்ளி 4.5/5

அன்புடன்
கிஷோர்

உங்கள் கருத்துக்களையும்  எதிர்பார்க்கிறோம் .


Saturday, December 24, 2011

பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் : விஜய்!

அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படம் தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது. இளைய தளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். விஜய்-க்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து படத்தின் பாடல் வெளியீடு விழா இந்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய பெஸ்ட் இயக்குனர் ஷங்கர் தான் என்று இளைய தளபதி விஜய் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி கூறும்போது 'இதுவரை என்னை இயக்கிய இயக்குனர்களில் ஷங்கர் தான் சிறந்தவர், அவருடைய படத்தில் நடிக்க பல நாட்கள் காத்துக் கிடந்தேன், தற்போது இந்த வாய்ப்பை சந்தோஷமாக முடித்துள்ளேன், என்னுடைய கேரியரில் முக்கியமான படமாக இது இருக்கும். ஷங்கர் சிறந்த இயக்குனர் மட்டுமல்ல சிறந்த நடிகரும் கூட, ஒவ்வொரு காட்சிக்கு முன்னாடி அவர் நடித்துகாட்டுவார், அவரின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.' எனக் கூறினார். 

ஷூட்டிங் பிசியால் அன்னாவை பார்க்க முடியல : விஜய்

ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில் இருந்ததாகவும், அதனால் தன் அப்பா சந்திரசேகரை அனுப்பி வைத்து தன் ஆதரவை தெரிவித்ததாக விஜய் கூறினார். 

எந்திரனை மறந்தால் நண்பன் பிடிக்கும் - ஷங்கர்


நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
 
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
 
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
 
இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
 
நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.
 
ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.
 
இவ்வாறு விஜய் கூறினார்.
 
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
 
எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, “த்ரி இடியட்ஸ்” திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
 
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.
 
நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
 
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
 
சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.
 
இவ்வாறு ஷங்கர் கூறினார்.
 
இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-
 
எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.
 
நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.