பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, July 31, 2011

No More 'Fox' Ride for Ilayathalapathy Vijay

Ilayathalapathy Vijay is going through a high-time, where one can predict hat-trick success with his lined up movies that is directed by Shankar, Gautham Menon and A.R. Murugadoss each. The actor is now close on the heels of completing his magnum opus ‘Nanban’ while ‘Velayudham’ is almost done.

Earlier news was that Vijay-A.R. Murugadoss project will be produced by S.A. Chandrasekhar in collaboration with Fox Star Studios. Now we hear from the closer sources that Fox Star Studios is no more involved in the project and it will be individually produced by Vijay’s father S.A. Chandrasekhar.

The actor hasn’t decided about scheduling the projects of Gautham Menon and A.R. Murugadoss. Keep logging to this column more updates.

யோகன் அத்தியாயம் ஒன்று மிஷன் முப்பத்தாறு றியோ-பிறேசில்


விஜய் கெளதம் மேனன் இணையும் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் மூன்றாவது ஸ்டில் இன்று வெளியாகியது. இதில் விஜய் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். விஜயின் படத்தை பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இப்படம் 2012 ம் ஆண்டு தொடங்கும் எனும் போதே எதிர்பார்ர்பு அதிகரிக்கின்றது. இப்படத்தின் இசையமைப்பாளர் எ.ஆர்.ரகுமான் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் போட்டோன் கதோஸ் நிறுவனத்துக்காக கெளதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். இப்படத்தின் மேலதிகத்தகவல் தொடர்பாக கெளதம் வாசுதேவ மேனன் பத்திரிகையாளரை சந்திக்க உள்ளார். விஜயின் வேலாயுதம் பட பாடல் வெளியீட்டுக்கு சங்கர் கெளதம் வாசுதேவ மேனன் மற்றும் முருகதாஸ் ஆகியோர் வர உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் நிகழ்ச்சியின் போது இது பற்றி கெளதம் தெரிவிக்க கூடும் எனக்கூறப்படுகிறது . இப்படம் 2012 இல் தொடங்க இருப்பதன் காரணம் விஜயின் ஏனைய பட கமிட்மெண்ட் இருப்பதனாலாகும்.

Saturday, July 30, 2011

விஜய் என் தம்பி அஜீத்


அஜீத், மரியாதை நிமித்தமாக கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை, அஜீத் தன்னுடைய படத்தின் ப்ரொமோவுக்கு வருவதில்லை போன்ற செய்திகள் தற்போது அதிக அளவில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு பதிலளித்துள்ள அஜீத் "எனக்கு அரசியலில் எல்லோரும் நண்பர்கள்தான், ஆனால் சினிமாவில்தான் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள், அவர்கள் அரசியலிலும் இருக்கிறார்கள். என்படத்திற்கு எப்போதும் பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று பத்திரிக்கைகள் சொல்லி வருகின்றன அந்த ஓப்பனிங்கை கெடுக்கவேண்டும் என்ற நோக்கில் என்படம் ரிலீசாகும் சமயத்திலெல்லாம் என்னைப்பற்றிய வேண்டாத செய்திகளை கிளப்பி விடுகின்றனர்" என்று கூறியிருக்கிறார்.

நீங்கள் பாய்ட் அவுட் செய்வது விஜய் தரப்பையா? என்ற கேள்விக்கு "விஜய் என் தம்பி. அவர் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டார். அவருக்கும் எனக்கும் ஏதோ தகராறு போல் சித்தரிப்பதே தேவையில்லாத விசயம்" என்றும் விளக்கமளித்துள்ளார்.

நண்பன் சூட்டிங் ஸ்பொட் பற்றி பரபரப்பான தகவல்கள்



இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக்கை விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்க 'நண்பன்' என்னும் பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார்.

'3 இடியட்ஸ்'  தமிழில் எடுக்கும்போது, அந்த காட்சிகள் குறித்து ஒரு பார்வை :

முதல் காட்சியில் இருந்து தன்னிடம் விஜய் தோற்று விட்டதாக கூறி அவரிடம் ஒப்பந்த கையழுத்து வாங்க தேடிக் கொண்டு இருப்பவர் எஸ்.ஜே. சூர்யா.

ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜட்டியோடு நடிக்க வேண்டும். இக்காட்சியை தான் ஷங்கர் சென்னையில் படமாக்கி வருகிறார். 200 ஆட்கள் முன்னிலையில் ஷங்கர் இருவரையும் ஜட்டியோடு நடிக்க சொன்னார். முதலில் கூச்சப்பட்டவர்கள் பின்பு அதிலிருந்து விடுபட்டு நடிக்க, அக்காட்சி நன்றாக அமைந்தது என்கிறது படக்குழு.

படத்தின் இறுதிக்காட்சியில் விஜய்யை இலியானா கண்டிபிடித்தவுடன் இருவரும் முத்தம் கொடுக்க வேண்டும். இந்தியில் அக்காட்சியில் அமீர்கான், கரீனா கபூர் இருவருக்குமான முத்தக்காட்சி ஒரு நிமிடம் இருக்கும். தமிழில் ?

யோகன் அத்தியாயம் ஒன்று மிஷன் இரண்டு பாரிஸ்

விஜய் கெளதம் இணையும் படம் யோகன் அத்தியாயம் ஒன்று.இப்ப்டம் பற்றிய தகவல்களை நேற்று வெளியிட்டிருந்தோம்.இன்று இப்படத்தின் மேலும் ஒரு ஸ்டில்லை உங்களுக்கு தருகிறோம்.நேற்று வந்த விளம்பரங்களில் யோகன் அத்தியாயம் ஒன்று மிஷன் ஒன்று நியுயோர்க் எனக்கூறப்பட்டிருந்தது.இன்று வந்த விளம்பரங்களில் யோகன் அத்தியாயம் ஒன்று மிஷன் இரண்டு பாரிஸ் எனக்கூறப்பட்டுள்ளது.இது ஒரு திரில்லர் படமாக அமையவுள்ளது.கெளதம் தனது துப்பறியும் ஆனந்த்தை மாற்றி யோகன் அத்தியாயம் ஒன்று என தலைப்புச்சூட்டியுள்ளார் என கெளதம் மேனனின் உத்தியோக பூர்வ வட்டாரங்களின் செய்திகள் வருகின்றன. இப்படத்தின் ஸ்டில்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தினை 2012 ம் ஆண்டு ஆரம்பிக்க உள்ளனர்.விஜய் வித்தியாசமான தோற்றத்தில் கலக்குகின்றார். நாம் நேற்றுக்கூறியது போல் இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையைமைக்கின்றார் இதுவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கெளதம் மேனனின் போட்டன் கதாஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. கெளதம் வாசுதேவமேனன் இயக்க விஜய் நடிக்கும் முதல் படம் இதுவாகும். விஜய் ரகுமான் கூட்டணி உதயா அழகிய தமிழ் மகன் படங்களிற்கு பிறகு மூன்றாவதாக இணையும் படம் இதுவாகும். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம ஹம்சா எனவும் எடிட்டிங் ஆன்டனி எனவும் கூறப்படுகிறது. கதாநாயகி யாரென்பதை இரகசியமாக வைத்துள்ளனர். நாளை இப்படம் தொடர்பான படங்கள் வெளி வந்தால் அது தொடர்பான விடயமும் உறுதியாகி விடும். கெளதமின் தெரிவு எமியோ சமந்தாவோ பொறுத்திருந்து பாருங்கள். என்றும் எம்முடன் இணைந்திருங்கள் உடனுக்குடன் செய்திகளை அறியத்தருவோம். 


Friday, July 29, 2011

விஜயின் அடுத்த படம் என்ன பரபரப்புத்தகவல்



விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சீமான் ஆகியோரின் படங்களில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானாலும் விஜய் தரப்பில் இருந்து எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் விஜய் - கெளதம் மேனன் படத்தினை உறுதி செய்து இருக்கிறார்கள். யோஹன் - அத்தியாயம் ஒன்று (ஒன்றாம் குறிக்கோள் : நியூயார்க்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று காலை வந்த விளம்பரங்களில் 'அதிரடி துவக்கம் 2012' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யபடலாம் என்று தெரிகிறது.

இப்படத்தினை தனது ஃபோடோன் கதாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறார் கெளதம் மேனன். அடுத்த ஆண்டு தான் இப்படம் துவங்கும் என்பதால், 'வேலாயுதம்' படத்தின் பணிகளை முடித்த பின் யார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்பதே கோடம்பாக்கத்தில் உலவும் கேள்வி.



நண்பன் படத்தை ஆகஸ்ட் முடித்த பின்பு பகலவன் படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்துக்கு அறுபது நாள் கால்சீட் கொடுத்துள்ளார்.இச்செய்தியை வேலாயுதம் இசை வெளியீட்டன்று கூறவுள்ளார் விஜய்.இப்படத்திற்கு இசை யுவன்சங்ராஜாவோ அல்லது ஹரிஸோ என்ற கேள்வி நிலவுகிறது. 


கெளதம் மேனனின் படத்துக்கு முன் முருகதாஸின் இயக்கத்திலும் நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது. 

கௌதம் இயக்கத்தில் விஜய்

'வேலாயுதம்’, ‘நண்பன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஜய் தற்போது அடுத்த  படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்திற்கு ‘யோஹன்-அத்தியாயம் ஒன்று’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார் கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழே டேக்லைனாக 'மிஷன் -1 நியூயார்க் சிட்டி' என குறிப்பிட்டுள்ளனர்.
வரும் 2012 ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்கும் என்றும், 2013 பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கௌதம் மேனன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.





Thursday, July 28, 2011

வேலாயுதம் சுதந்திர தினத்தன்று இசை வெளியீடு !

விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரிய பொருட் செலவில் தயாரித்து வருகிறார்.

ஆகஸ்ட் 15ம் தேதி இப்படத்தின் இசையை மிக பிரம்மாண்டமாக வெளியிட இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

கேரளா விநியோகஸ்தர்கள் ஆகஸ்ட் 31ம் தேதி இப்படம் வெளிவரும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ் நாட்டில் இப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொந்தமாக வெளியிட இருக்கிறாராம். 



கமல் நடித்த 'தசாவதாரம்', விக்ரம் நடித்த 'அந்நியன்' போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் சொந்தமாக வெளியிட்டு அதில் வெற்றியும் பெற்றார். அதைப் போலவே இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறாராம்.

விஜய் நடித்து வெளிவந்த படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும்  'வேலாயுதம் ' படத்தில் வரும் முதல் பாடல் மற்றும் இறுதி சண்டைக் காட்சி ஆகியவற்றுக்கு ஆன செலவே பல கோடிகள் என்கிறது படக்குழு.

Wednesday, July 27, 2011

Velayutham Dubbing Work Progressing Now

Velayutham’s dubbing is currently on at the Four Frames Recording Studio in Chennai. Vijay and others are actively involved in the dubbing process, say sources close to the film unit.

The movie is directed by Jayam Raja and produced by Aascar Ravichandran. Vijay’s fans are expecting this movie release because it is the first Vijay film to hit the theatres after the change in the state government. It may be mentioned here that the star faced several hardships during the previous regime to release his film Kavalan.

The post production work is progressing and the movie’s audio and release date will be out in a couple of days, sources say.

விஜய் பட ஷூட்டிங்கில் கலவரம்



சங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்து வருகிறது. விஜய்யின் நண்பன் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்பதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதில் பெருமளவில் குவிந்தனர்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் விஜய் மற்றும் ஜீவா ஆக்யோர் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து கைசைத்து விட்டு படப்பிடிப்பு சென்று விட்டனர் ஆனால் இவற்றிலெல்லாம் திருப்தியடையாத ரசிகர்கள், படப்பிடிப்புக்குள் புகுந்து நடிகர்களை பார்க்க முயற்சி செய்தனர். காவலர்களால் அவர்கள் தடுக்கப்படவே, கோபமடைந்த ரசிகர்கள் கேரவன் கண்ணாடிகள் மற்றும் படப்பிடிப்பு பொருட்களை அடித்து உடைத்தனர். அதனால் போலீசை வரவழைத்து தடியடி நடத்தியே அவர்களை கலைக்க வேண்டியதாயிற்று.

Tuesday, July 26, 2011

Velayutham will release on August 31



Ajith and Vijay have two of the biggest films of the year gearing up for release - Mankatha and Velayudham respectively. While fans in Tamil Nadu await the release of these films with bated breath, they have already been snapped up by distributors in Kerala and release dates are being finalized.
In Kozhikode, Mankatha is likely to have an August 19th release according to distributors, Divya Productions. Velayudham will release on August 31st, according to Shibu, who is distributing the film there. Mankatha will have a clear run till Ramzan when Velayudham releases. And both films are expected to do good business all the way through the festival season of Onam, which falls on September 8th.
The films have been procured for big sums and the distributors are confident about their investment and are backing the two brightest stars on the Tamil cinema firmament to bring in the crowds in Kerala.

Monday, July 25, 2011

விஜய் அரசியல்வாதியாக இல்லாமல் பணியாற்றுவார்

இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கோவை டாடாபாத்தில் உள்ள நாடார் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரவிராஜா, மாநில துணை தலைவர்கள் புஷ்சி ஆனந்த், பாஸ்கரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஏ. சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்க தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விஜய் மக்கள் இயக்கத்தில் 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் உள்ளனர். அடையாள அட்டை வழங்கியதில் இருந்து கூடுதலாக 1 1/2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். விஜய் மக்கள் இயக்கம் மாவட்டந்தோறும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விஜய் நேரடியாக அரசியலுக்கு வராமல் உங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ரசிகர்கள் செய்யும் ஒவ்வொரு நலத்திட்ட பணிகளுக்கும் விஜய் முழு பக்க பலமாக இருப்பார். உங்கள் முயற்சிக்கு நான் துணை நிற்பேன். விஜய் அரசியல்வாதியாக இல்லாமல் உங்களோடு சேர்ந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்வார்  என கூறினார்.
அதைத்தொடர்ந்து இயக்க நிர்வாகிகளுடன் டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆலோசனை நடத்தினார்.

Sunday, July 24, 2011

ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டனர் விஜய் மற்றும் ஷங்கர்



ரெளத்திரம் படத்தின் ஆடியோ ரிலசுக்கு வருவதாக கூறியிருந்தனர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் குழுவினர்.
கடைசிநேரத்தில் வராமல் போனதால் நடிகர் விஜய் மற்றும் டைரக்டர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டனர்.
டைரக்டரின் ஷங்கரின் இயக்கத்தில் விஜய், ஸ்ரீகாந்த் ஆகியோருடன் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் ஜீவா, தன்னுடைய ரெளத்திரம் படத்தின் ஆடியோவை ஷங்கர், விஜய், இலியா‌னா வைத்து வெளியிட முதலில் திட்டமிட இருந்தார்.
ஆனால் அன்று மாலை நடைபெற இருந்த நண்பன் பட சூட்டிங் ரத்தானதால், ஷங்கர், விஜய், இலியானா உள்ளிட்டோர் ரெளத்திரம் ஆடியோ ரிலீஸ்க்கு வரவில்லை.
இதனால் கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர்வர்கள் தலைமையில் ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் பங்குபெற ரெளத்திரம் படத்தின் ஆடியோ சி.டி.யை வெளியிட்டனர்.

விழாவில் கலந்து கொள்ள முடியாமல் ‌போனதற்காக தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, அவரது மகனும், நடிகருமான ஜிவாவிற்கு போனில் பெர்ஸனலாக சாரி ‌சொன்னார்களாம் ஷங்கர், விஜய் உள்ளிட்டோர்.

விழாவுக்கு ஏன் வரவில்லை? ஷங்கர், விஜய் விஷயத்தில் நறுக்!


ரௌத்திரம் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வருவதாக ஒப்புக் கொண்ட டைரக்டர் ஷங்கர், நடிகர் விஜய் இருவரும் சொன்னபடி விழாவுக்கு வரவில்லை. அதனால் ஆர்.பி.சவுத்ரி அவர்கள் மீது வருத்தத்தில் இருப்பதாக முணுமுணுப்பு எழுந்தது கோடம்பாக்கத்தில். ஏன் வரவில்லை என்று விசாரித்தால், "எப்படி வருவாங்களாம்...?" என்ற கேள்வியே மிஞ்சுகிறது. அப்படியென்ன நடந்தது பின்னணியில்?
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு முதல் நாள் கூட சென்னையில்தான் நடந்தது நண்பன் படப்பிடிப்பு. மறுநாளும் படப்பிடிப்பு தொடரும் நிலையில், அப்படியே ஷ§ட்டிங்கை முடிச்சுட்டு வந்திருங்களேன் என்று அழைத்தார்களாம் ரௌத்திரத்தை வாங்கி வெளியிட முன் வந்திருக்கும் ஜெமினி லேப் நிறுவனத்தினர்.
இதே நிறுவனம் தயாரிக்கும் படம்தான் நண்பன். அதன் காரணமாகவும், ஆர்.பி.சவுத்ரி மீதிருக்கும் அன்பின் காரணமாகவும் வருவதாக ஒப்புக் கொண்டார்களாம் இலியானா, ஷங்கர், விஜய் மூவரும்.
அப்புறம் ஏங்க வரல?
வேறொன்றுமில்லை, நாள் முழுக்க இவர்களுடனேயே படப்பிடிப்பில் இருந்த ஜீவா, ஒரு வார்த்தை கூட வாங்க என்று அழைக்கவில்லையாம் இவர்களை. யார் யாரோ அழைக்கும் போது படத்தின் ஹீரோ, அதுவும் கூடவே இருந்தவர் அழைக்காமல் போனால் எந்த முகத்தோடு அங்கு செல்ல முடியும்? விடுங்க... போக வேண்டாம் என்றாராம் ஷங்கர்.

Saturday, July 23, 2011

விஐய் ஒரு பிரம்மாண்டம் - இயக்குனர் ஜெயம் ராஜா

‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யின் பிரம்மாண்டம், பேசப்படுவதாக இருக்கும் என்று இயக்குனர் ஜெயம் ராஜா கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: ‘வேலாயுதம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது கிராமம், நகரம் என மாறி மாறி வரும் கதையை கொண்டது. ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானி, சரண்யா மோகன் மற்றும் 15 வில்லன்கள் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். வழக்கமான விஜய்யின் படங்களில் என்ன இருக்குமோ, அதைவிட பத்து மடங்கு கமர்சியல் அம்சங்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாகவே விஜய்யை பிரம்மாண்டம் என்பார்கள்.

இதில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்தப் படத்துக்காக விஜய் கொடுத்த ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்து மிரண்டு போனேன். அவரால் 5 நிமிடம் கூட ஷூட்டிங் தாமதமானதில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். படப்பிடிப்பின்போது பல்வேறு பிறந்தநாள்கள் கொண்டாடப்பட்டன. சம்பந்தபட்டவர்களுக்கு தெரியாமலேயே சொந்த செலவில் ‘கேக்’ வாங்கி வந்து ஷாக் கொடுப்பார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை மறக்கவே முடியாது. விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே காமெடி காட்சிகள் அதிகம் உள்ள படமாகவும் இது இருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு ஜெயம் ராஜா கூறினார்.

Friday, July 22, 2011

பட்ஜெட்டை தாண்டிய வேலாயுதம்

விஜய்யின் வேலாயுதம் படத்திற்கு போட்ட பட்ஜெட்டை விட ரூ.10 கோடி அதிகமாகி விட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து கொண்டு இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.
அதேசமயம் விஜய் படம் என்பதால் போட்ட காசை எடுத்து விடலாம் என்று நம்பிக்கையிலும் இருக்கிறார்.
இப்படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜா இயக்குகிறார்.
ஓஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்காக ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட் ரூ.35 கோடியாம். ஆனால் இப்போது படத்தில் கொம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பாடல்கள் பிரம்மாண்டம் அது, இது என்று ரூ.10 கோடி அதிகரித்து விட்டதாம்.
இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஓஸ்கார் ரவிச்சந்திரன் சற்று கலக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் அதே சமயம் இது விஜய் படம், கவலைப்படாதீர்கள் போட்ட காசுக்கு மேலாக எடுத்துவிடலாம் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருவதால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறாராம்.
விஜய் படம் என்றாலே அதிரடி சண்டைக் காட்சிகள், கலக்கல் பாடல்கள், கொமெடி, காதல், செண்டிமெண்ட் என்று எல்லாமே இருக்க வேண்டும் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அதேபோல் இந்தபடத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

Thursday, July 21, 2011

Velayudham aren't there any distributors

Vijay's Velayudham has exceeded the budget beyond the producer's expectations. The film is still left with a song which yet to be shot, the budget is expected to go further up. So, far all is well with the film but surprisingly no distributor in Tamilnadu is willing to take the film due its high costs involved.
There are big distributors turning up for the film and so the producer of the film Aascar Ravichandran has decided to take up the responsibility of distributing the film himself. Ravichandran is holding talks with the theater owners and will be marketing the film himself.
If everything goes well, fans can look forward for Velayudham in the last week of August.
The producer has done this before and it is not new for him. So, Velayudham will not go away from Aascar's hands.

Tuesday, July 19, 2011

விஜய்க்கு புதிய தோற்றம்

”த்ரீ இடியட்ஸ்” இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான ”நண்பன்” படத்தில் விஜய் வித்தியாசமான தோற்றத்தை காட்டி நடித்துள்ளார்.
இயக்குனர் ராஜா இயக்கும் ”வேலாயுதம்” படத்திலும் பிசியாக நடித்து வருகிறார்.
இயக்குனர் ஷங்கர், ”நண்பன்” படத்துக்காக புது மாதிரி சிகை அலங்காரத்தில் விஜய்யை நடிக்க வைக்க முடிவெடுத்தார். ஆனால், ”வேலாயுதம்” படத்திலும் விஜய் நடிக்கிறார் என்பதால் பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துக்கு சிவாஜி, எந்திரன் படங்களில் பல வித தோற்றத்தை போட்டு அழகு பார்த்தவர் தான் இயக்குனர் ஷங்கர். ”நண்பன்” படத்தில், இந்தியில் அமீர்கான் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் தமிழில் நடிக்கிறார் என்பதால் விஜய்யை வித்தியாசமாக காட்ட முயற்சித்துள்ளார் அவர்.
விஜய்யுடன் இணைந்து நடிக்கும் ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரையும் கல்லூரி இளசுகளின் தோற்றத்தில் நடிக்க வைத்துள்ளார் என்கிறது பட வட்டாரம்.

இளையதளபதியின் இளம் நாயகி

vijay-velayutham-18-07-11

'வேலாயுதம்' படத்தின் பணிகள் ஏறக்குறைய முடிந்தவிட்ட நிலையில், தற்போது விஜய்யின் கவனம் முழுதும் சங்கரின் 'நண்பன்' படத்தில்தான்.
'நண்பன்' படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் இளையதளபதி விஜய். இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்வுடன் இணைந்து எஸ்.ஏ.சந்திரசேகர்  தயாரிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக உதயன் பட நாயகி ப்ரணிதா ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

Monday, July 18, 2011

என்னுடைய விருப்பம் நிறைவேறியது : விஜய்!

vijay-jaya-18-07-11தமிழகத்தில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை ஏற்று கடுமையாக உழைத்தீர்கள். அதன் பலனாக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்றார், என்று நடிகர் விஜய் கூறினார். சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று ரூ 8 லட்சம் மதிப்பிலான உதவிகளை வழங்கிய பின் நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அந்த என்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற நீங்கள் தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைத்தீர்கள். அதற்கு பலன் கிடைத்தது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அதேபோல் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றார்கள். அவரின் அந்த கருத்துக்கு ஆதரவாக சேலத்தில் என்னுடைய ரசிகர்கள் பெருமளவில் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள். இந்த விழா மேடையில் நான் நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான். உங்களால் நான் உயர்ந்தேன். என்னைப் போன்று நல்ல நிலைக்கு, உயர்ந்த நிலைக்கு நீங்களும் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நான் பார்க்காத தோல்விகளா...

இந்த சினிமா உலகில் நான் எத்தனையோ தோல்விகள், அவமானங்கள், கேலி கிண்டல்களை, தடைகளை சந்தித்தேன். அதையெல்லாம் கண்டு நான் துவண்டு விடவில்லை. கடின முயற்சிகள் செய்து தொடர்ந்து உழைத்து இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டு ஓடும்போது, தவறி விழுவது சகஜம்தான். ஆனால் விழுந்த இடத்திலேயே கிடைக்காமல், மீண்டும் துள்ளி எழுந்து, முன்பைவிட வேகமாக ஓடினால் மட்டுமே நீங்கள் ஜெயிக்க முடியும். நீங்களும் அதேபோல் தொடர்ந்து முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வேண்டும்," என்றார்.

'Veluyudham' overshoots budget

Vijay's upcoming film directed by Jayam Raja is in the post-production stages and is gearing up for a music release and finally the grand release of the film that is scheduled to take place in August. The film has a host of stars with Vijay donning a superhero's cap for the first time in his film career. While Hansika Motwani will play Vijay's love interest in this film, Genelia plays a television reporter and Saranya Mohan plays Vijay's sister.
A lot has been revealed and discussed about this upcoming Vijay film much ahead of its release which has steeped the interests of fans and music lovers across the state alike. The film has all the ingredients of a Vijay film all inclusive of the "kuthu" songs, romance, stunts, as well as a lavish dose of comedy (mind you with Santhanam on board) which is sure to have the audience in splits.
Sources close to the film's team revealed that the film has hair-raising stunts, what with technicians from overseas being roped in for stunt choreography.
'Velayudham' is being made under the Aascar Ravi Chandran banner. The film which was initially decided to be made with a budget of around 35 crores has now overshot the budget and has hit a high 45 crores, what with a lot of money spent on CG and songs. We hope audience too get their penny's worth seeing the film.
The film's producer is now in talks with theatre owners directly instead of finding distributors to distribute the film in the state. 'Velayudham,' apart from seeing a wide release in Tamil Nadu will also release in Kerala in nearly 90 theatres with "Ilaya Thalapathi" having quite a lot of fans in god's own country too!

Sunday, July 17, 2011

Ilaya Thalapathy admits to political aspirations


Films and politics have always been compatible bedfellows, with many stars smoothly making the transition from films to politics, using their vast fan base to leverage support for the political party they embrace.

Now there is every indication that Ilaya Thalapathy Vijay is methodically and systematiccally preparing to enter the political scenario in Tamil Nadu.

At present the star may be busy wrapping up his under-production flicks like Nanban with director Shankar, Velayudham with Raja and signing films with biggies like AR Murugadoss, but sources close to the actor say that he is also simultaneously inching towards his ultimate aim — politics. “Vijay is waiting patiently and will strike at the right time,” opines a close aide of the Kaavalan star.

Reportedly, Vijay’s every move is being carefully watched in political circles. This is a consequence of the common perception that most of his decisions are politically significant.

Today, the actor has convened a huge gathering of his Makkal Iyakkam at Salem and the star’s fans from all over the state are expected to attend this conference. Vijay and his dad S.A.

Chandrashekaran reiterate that the aim of this maanadu is to distribute relief and welfare measures to the needy and to enroll new members for the Iyakkam, which already has a base of more than `25 lakhs, it is learnt.

SAC categorically claimed that the Iyakkam is not a political outfit and that they supported AIADMK in the recent elections only to bring about a political change in the state. Despite these assertions, political analysts predict that all these maanadus and
Vijay's regular meetings with his fan club office-bearers, is a clear indication of the Iyakkam turning into a political movement sooner or later.
“The total fan base will be converted into a vote bank and the actor will declare his intention at an appropriate time,“ the source adds.

When Vijay, who was shooting for Nanban at a posh city nightclub, was contacted by this newspaper, all he had to say was, “Primarily, I am strengthening my Makkal Iyakkam and its base. I meet them regularly to get to their feedback on various issues, including politics.“

He had no qualms about admitting unhesitatingly, “Yes, there is every possibility that my Iyakkam will become a political movement over the years.“

The actor did add that he had a long way to go in politics and that films were his priority now. Busy with back-to-back films, Vijay is hard-pressed for time and it's tough for him to take a break and go on holiday.

“Holiday?“ he echoed. “That sounds nice. But now it's my work that has become a holiday for me! Also, I have to plan my holidays so that they coincide with my children's school breaks rather than my breaks!“ he quipped.

The actor is leaving for Salem on Saturday night to address the huge gathering.

Vijay Will Joint Big And Legend Director

After Shankar, Mani and Murugadoss, it’s Gautham’s turn to sign on the Ilayathalapathy
The Ilayathalapathy seems to be the hottest actor in Kollywood at the moment, with every director worth his salt wanting to work with him. The latest filmmaker to join the list is Gautham Menon, who is reportedly touted to work on a project with him once he’s done with his current assignments.
“Yes, the Gautham-Vijay project is likely to happen after they finish their ongoing projects,” says a source, “If it does, then it’s a casting coup of sorts in Kollywood and is an indication that Vijay has indeed broken away from his routine mass masala type of flicks that failed at the BO last year.” Sample this: the actor, whose Raja-directed Velayudham is yet to hit the screens, is currently working with Shankar on the Tamil remake of 3 idiots and is then said to be starting work on a project with A R Murugadoss.
And then there’s Mani Ratnam hovering as well! It’s a well-known fact that Vijay was supposed to work with the ace filmmaker in his Ponniyin Selvan, which got shelved. We understand that the actor had verbally agreed to do a film with Mani in the near future.
Apart from this, there’s the Seeman-directed tentatively-titled Pagalavan about which there has been no news for a while.

The Ilayathapathy seems to have understood the importance of working with established directors in the industry. While his previous flicks that didn’t do well at the box office (Vettaikaran, Sura for instance) were with relatively new directors, all the films that are on the horizon currently are with some of the biggest filmmakers in the industry.

Saturday, July 16, 2011

வேலாயுதம் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக பாடல்

விஜய் நடித்த ”வேட்டைக்காரன்” படத்தில் 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது..' பாடல் மூலம் பிரபலமானார் ஹொலிவுட் கவிஞர் அண்ணாமலை.
இதற்கு முன் இவர் எழுதிய 'பன்னாரஸ் பட்டு கட்டி..', 'என் பேரு முல்லா..' போன்ற பாடல்கள் ஹிட்டாயின. அடுத்தடுத்து 'நீ சிரிச்சா கொண்டாட்டம்..', "வர்றாளே ஜில் ஜில் சிங்காரி..' , "இடிச்ச பச்சரிசி..', உதயன் படத்தில் வரும் 'இத்தனை யுகமாய்..' மெலோடி கீதம் என பண்பலை நேயர்களின் மனதில் தங்கிவிட்ட பாடல்களும் அதில் அடங்கும்.

இளையதளபதி விஜய் நடிக்கும் 'வேலாயுதம்' படத்தில் மூன்று பாடல்களை கவிஞர் அண்ணாமலை எழுதியுள்ளார். விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் ஓடியோவில் குறிப்பாக 'ரத்தத்தின் ரத்தமே..' பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறுகிறார்கள்.
”வேட்டைக்காரன்” படத்துக்காக 'என் உச்சி மண்டையில..' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. அதன் பிறகு, ”வேலாயுதம்” படத்துக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் முக்கியமானது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் ராஜா இருவரும் எனக்கு இந்த வாய்ப்பை தந்தார்கள். இதில் நான் எழுதிய மூன்று பாடல்களும் வெற்றி பெறும், குறிப்பாக ”ரத்தத்தின் ரத்தமே..” பாடல் விஜய் சாருக்கு மிகவும் பிடித்த பாடலாக உள்ளது.
நாகப்பட்டினம் பொதுகூட்டத்தில் அவரே நான் நடித்த 51 படங்களில் எனக்கு இப்படி ஒரு பாடல் அமையவில்லை என்று இந்த பாடலை சொல்லி ரசிகர்களுக்காக மேடையில் அந்த பாடலை பாடிக்காட்டினார்.
படத்தில் இந்த பாடல் விஜய் தன் தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்கிற பாடலாக வருகிறது. ஆனால்,அதையும் தாண்டி எல்லா விஜய் ரசிகர்களுக்கான பாடலாக அமைந்து விட்டது.
காதல், குத்து என்கிற வழக்கமான வட்டத்துக்குள் அடைப்பட்டு விடாமல் ஒரு மனிதன் பிறர் மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்பை பேசும் பாடலாக இது வருகிறது.
விஜய் ஆண்டனி சார் எந்த பாடல் என்றாலும் அதை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற துடிப்போடு உழைப்பவர். இந்த பாடலுக்காக மெட்டு போட என்னிடம் கொடுக்கும் போது ஏதாவது புதுமையான ஆரம்ப வரிகள் வேண்டும் என்று கேட்டார்.
”ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன்பிறப்பே..' என்று வித்தியாசமாக நான் ஆரம்பிக்க அது அவருக்கு மிகவும் பிடித்தது. அடுத்து 'அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்க்கை உனக்காகத்தானே, செத்தாலும் பிழைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா..” என்று அழுத்தமான வரிகள் வந்து விழுந்தன.
இரண்டு மணி நேரத்தில் மொத்த பாடலும் முடிந்து விட்டது. பிறகு இயக்குனர் ராஜா சொன்ன சில விடயங்களை பாடலில் சேர்த்தேன். எத்தனை வருடங்கள் கடந்தாலும் எனக்கு கேட்க சலிக்காத ஒரு பாடல் இது.
விஜய் ரசிகர்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் கவிஞர் அண்ணாமலை.
”யுவன் யுவதி”, ”புலிவேசம்”, "நாங்க", "பீமன்", "அஸ்தினாபுரம்", "ஊதாரி", "இறைமகன்" உட்பட பதினைந்து படங்களுக்கு பாடல்களை எழுதிவருகிறார்.

விஜய் கெளதம் இணையும் துப்பறியும் ஆனந்

ஒரு வருடத்துக்கு முதல் தொடங்க வேண்டிய படம் துப்பறியும் ஆனந். இப்படத்தை கெளதம் அஜித்தை வைத்து சிவாஜி பிலிம்ஸ் சார்பில் ஆரம்பிக்க இருந்தார். ஆனால் திரைக்கதையில் ஏற்பட்ட தாமதங்கள் அப்படம் பிந்திப்போனது அதன் பின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்தித்த இப்படத்திற்கு சூர்யாவை வைத்து கெளதம் ஆரம்பிக்ககூடும் என்ற செய்தி வெளியானது ஆனால் அவ் செய்தியும் நிறைவேறாமல் போக கெளதம் ஹிந்தியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஆரம்பித்தார். இப்பொழுது விஜயை வைத்து ஒரு படம் ஆரம்பிக்க முடிவுசெய்தார். கெளதம் படத்தில் விஜய் நடிக்க இணக்கம் தெரிவித்துவிட்ட நிலையில் அவர் விஜயுடன் இணையும் படம் துப்பறியும் ஆனந் என செய்தி வெளிவரத்தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதைப்படி விஜய் துப்பறியும் அதிகாரியாக வருகிறார் லண்டனில் நடைபெறும் கொலையை அடிப்படையாக கொண்டது. அங்கு இடம்பெறும் கொலையை விஜய்  யார் கொண்டார் என எவ்வாறு அறிகிறார் எனவும் அவருக்கு வில்லன் கொடுக்கும் தொந்தரவுகளையும் மற்றும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் கொண்டு நகர்கிறது கதை. விஜய்க்கு கதைபிடித்து விட்டது என விஜய் தரப்புக்கூறுகிறது.இப்படத்திற்கு எ.ஆர்.ரகுமான இசையமைக்கிறார். மனோஜ்பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் தாமரை பாடலாசிரியராகவும் அன்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். ஏற்கன்வே இப்படத்திற்குரிய படப்பிடிப்பு இடங்களை கெளதம் வாசுதேவ மேனன் தெரிவு செய்து விட்டார். சென்னை மற்றும் லண்டனில் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.

Friday, July 15, 2011

கணக்கு தீர்க்க தயாராகும் காவலன் -விஜய் தரப்போகும் புகார்?

காலில் கொத்தினால் மண்டைக்கு விஷம் ஏற லேட்டாகும் என்பதால் நேரடியாக மண்டையிலேயே கொத்தும் வேலை ஆரம்பாகிவிட்டது. ஒரு ராஜ நாகமாக படமெடுத்து நிற்கிறார் நடிகர் விஜய். கொத்தப் போவது ஏன்? கொத்தப்படப் போவதுKavalanயார், யார்? இந்த இரண்டு முக்கியமான கேள்விகளுக்கும் விடைதான் இந்த கட்டுரை.
கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் கொடுத்த பேட்டி ஒன்று அதிமுக்கியமான விளைவை ஏற்படுத்தியது நாட்டில். இதை படித்த அவரது ரசிகர்கள் கொதித்தனர். நன்றாக கவனிக்கவும். இது தேர்தலுக்கு முன்பாக விஜய் கொடுத்த ஆக்ரோஷ பேட்டி. அதில் அவர் கூறியிருந்த மிக முக்கியமான விஷயம் இதுதான்.
'இதுவரைக்கும் என்னோட படங்கள் ரிலீஸ் விஷயத்தில் பெரிய பிரச்னைகள் வந்தது இல்லை. அப்படியே வந்தாலும், நாங்களே சுலபமா சமாளிச்சுத்தான் இருக்கோம். ஆனா, 'காவலன்' படத்துக்குப் பூதாகாரமா பிரச்னைகளை உருவாக்கினாங்க. புதுசு புதுசா, தினுசு தினுசா... பெரிய பிரஷரை ஏற்படுத்தினாங்க. பிரச்னையைத் தீர்க்க என்ன செய்றது, யாரிடம் போறதுன்னு புரியாமல் எனக்குப் பயங்கர ஷாக். தனிப்பட்ட மனிதரிடம் போய் என்னுடைய சூழ்நிலையைச் சொல்ல முடியாது.
'காவலன்' படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுத் தெளிவாகத் திட்டம் போடுறதைப் புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து 'காவலன்' படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது!
வேறு சிலர், தியேட்டர் அதிபர்களையும் ஓப்பனா மிரட்டி இருக்காங்க. 'காவலன்' படத்தைச் சுற்றி அவ்வளவு பிரச்னைகள். அது எல்லாத்தையும் தீர்க்க, கஷ்டப்பட்டுப் போராடி பொங்கல் ரிலீஸ் ஏற்பாடு செய்தோம். எல்லாத் தடைகளையும் மீறி மக்கள் கூட்டம் கூட்டமா வந்தாங்க!'' குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. 'நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்'னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?
முக்கியமான நேரத்தில் என் படம் வெளிவரக் கூடாதுன்னு பயப்படுறாங்க. ஒருKavalanபடத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் 'காவலன்' வந்தான்.
யாருக்கு எப்போ, எப்படி வெற்றி தோல்வியைக் கொடுக்கிறதுன்னு தீர்மானிக்கிறவன் கடவுள். சாதாரண மாமிச உடம்பு உள்ள எந்த மனித ஜென்மத்தாலும் இதைத் தடுக்க முடியாது. நான் உங்களிடம் சொன்னது என்னுடைய தனிப்பட்ட ஆதங்கம் இல்லை. இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.
இந்த பேட்டியின் கடைசிவரிகள்தான் ரொம்ப முக்கியமானது. நான் சொல்லிட்டேன், பல பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க என்றாரல்லவா? அந்த பல பேர்தான் இன்று சன் டிவிக்கு எதிராக புகார்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
காவலன் ரிலீஸ் நேரத்தில் நடந்ததை மிக சுருக்கமாக நம்மிடம் விவரித்தார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு திரைப்பட விநியோகஸ்தர். பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்திருந்தார்கள். அதே நேரத்தில்தான் ஆடுகளம் படத்தையும் வெளியிட முடிவு செய்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த நேரத்தில் விஜய் படம் வெளிவந்தால், ஆடுகளத்தின் ஓப்பனிங் பாதிக்கப்படும் என்பதால் சில மறைமுக காரியங்களை செய்ய ஆரம்பித்தாராம் சக்சேனா.
காவலன் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன்பே இவரது டீம் தயாரானதாம். இந்த படத்தின் எப்எம்எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு உரிமையை வாங்கியிருந்த தந்திரன் பிலிம்ஸ் அதிபர் கடத்தப்பட்டார். அவரை மிரட்டி தனது பெயருக்கு இந்த உரிமையை மாற்றிக் கொண்டாராம் சாக்சின் பினாமியான அய்யப்பன். தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரான இவர், ஒரு படம் வெளிவர உதவுவதற்கு பதிலாக அதை வெளியிட விடாமல் செய்யும் வேலையை ஆரம்பித்த கொடுமையும் நடந்தது.
நீதிமன்றத்தை அணுகிய அய்யப்பன், ஏதேதோ காரணங்களை குறிப்பிட்டதுடன், காவலன் படத்தை இரண்டு வாரங்கள் கழித்து வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாராம் மனுவில். இங்கேதான் ஆரம்பித்தது பிரச்சனை.
ஒரே ஒரு ஏரியாவில் படம் வெளியாவதில் பிரச்சனை என்றாலும் ஒட்டுமொத்த விநியோகஸ்தர்களும் படத்தை வாங்கவே அஞ்சுவார்கள். பணத்தை கட்டிய பின்பு படம் வெளிவராமல் போனால் என்னாவது என்ற அச்சம் வருமல்லவா? இந்த அச்சத்தை திட்டமிட்டு அவர்கள் மனதில் வரவழைத்தார் அய்யப்பன். இதை தொடர்ந்துதான் எல்லா குழப்பங்களும் ஆரம்பமாகினவாம். பிரசாத் என்ற பைனான்சியர் தனக்கு தர வேண்டிய பணத்தை தந்தாலே ஆச்சு என்று ஒற்றைகாலில் நின்றார். அல்லது அப்படி நிற்க வலியுறுத்தப்பட்டார். எப்.எம்.எஸ் பணத்தை அப்படியே இவருக்கு திருப்பிவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளருக்கு திடீரென்று நான்கு கோடியை புரட்டுவதில் சிக்கல் ஆரம்பித்தது.
இதுபோக படத்தை வாங்குவதாக ஒப்பந்தம் செய்த பல விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டார்களாம். திடீர் திடீரென்று அவர்களுக்கு யாரிடமிருந்தோ போன் வர, பிரசாத் லேபிலிருந்து மின்னலாக தெறித்தார்களாம் அவர்கள்.
இதற்கிடையில் சென்னை நரக விநியோக உரிமையை தனது நண்பர்களுடன் சேர்ந்து வாங்கி படம் வெளியாவதற்கு கடைசி நேரத்தில் உதவி செய்ய முன்வந்தாராம் விஜய்யின் மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார். தனது பங்காக அவர் கொடுத்தது ஐம்பது லட்சம். தற்போது அதுவும் கைக்கு வராமல் வட்டி கட்டிக் கொண்டிருக்கிறாராம் இவர்.
இப்படியெல்லாம் பெரும் குழப்பம் நீடித்துக் கொண்டேயிருக்க, கடைசியில் விஜய் தரப்பிலிருந்து சில கோடிகளை கொடுத்தால் காவலன் வெளியாகும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது நள்ளிரவை தாண்டியிருந்ததாம் நேரம். சரி, நானே பணம் கொடுக்க முன்வருகிறேன் என்று கூறிய விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி சுமார் மூன்று கோடிக்கு செக் தர முன்வந்தார். முதலில் அதை ஏற்றுக் கொள்வதாக கூறியதாம் பிரசாத் லேப் நிர்வாகம். அப்புறம் யாரிமிருந்தோ ஒரு போன் கால் வர, அந்த மூணு கோடியை பணமா கொடுத்திருங்க என்றார்களாம். நள்ளிரவில் அவ்வளவு கரன்சிக்கு எங்கே போவது? எங்கெங்கோ அலைந்து பணத்தை புரட்டிக் கொண்டிருந்தார்களாம் விடிய விடிய.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே பா.விஜய் நடித்து கலைஞர் கதை வசனத்தில் உருவான இளைஞன் படத்தை எவ்வித டெபாசிட்டும் இல்லாமல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்கிற ஆடித்தள்ளுபடியை ஆரம்பித்தது இதே குரூப்பின் மூளை. தமிழ்நாட்டிலிருக்கும் நல்ல நல்ல தியேட்டர்களை எல்லாம் ஆடுகளமும், 'இலவச' இளைஞனும் பிடித்துக் கொள்ள, கையை பிசைந்து கொண்டிருந்தது காவலன்.
இந்த குடைச்சல் போதாதென்று இன்னொரு அதிர்ச்சிகரமான வேலையை செய்து கொண்டிருந்தது சன் டி.வியின் ஊடகங்கள். காவலன் ரிலீசில் தொடர்ந்து சிக்கல் என்று தினந்தோறும் செய்திகள் வாசிக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் போஸ்டர் ஒட்டுவதா, வேண்டாமா என்ற குழப்பம் நிலவியது தியேட்டர்காரர்களிடம். ரசிகர்களும் கட் அவுட், பேனர் என்று எந்த முயற்சியிலும் இறங்க முடியாமல் குழம்பி போனார்கள்.
சன் குழுமம் தந்த மிகப்பெரிய அதிர்ச்சியே இதுதான் என்றார் காவலன் பட சிக்கலை நம்மிடம் சொல்லிக் கொண்டே வந்த அந்த விநியோகஸ்தர். எப்படியோ போராடி படத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார்கள். வெளியூர்களுக்கெல்லாம் பிளைட்டிலும் கார்களிலும் வைத்து மின்னலை போல டெலிவரி செய்யும் வேலைகள் ஆரம்பித்து விட்டன. இந்த விஷயம் நன்றாக தெரிந்த பிறகும், சன் டி.வி செய்திகளில் காவலன் இன்றும் ரிலீஸ் இல்லை என்று செய்தி பிளாஷ் நியூசாக ஓடியதுதான் விஜய்யை அதிர வைத்தது.
தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியவர்கள் மீதும், தொழில் செய்ய விடாமல் தடுத்தவர்கள் மீதும் புகார் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் வந்திருக்கிறதாம் விஜய்யிடம். கடந்த சில தினங்களாக சட்ட நிபுணர்களை வீட்டுக்கே அழைத்து விவாதிக் கொண்டிருக்கிறாராம் அவர்.
முதல் மூன்று நாள் கலெக்ஷனே பல கோடிகள் வந்திருக்கும். அவற்றையெல்லாம் வரவிடாமல் தடுத்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதே சன் பிக்சர்ஸ்தான் என்று கோபம் கொண்டிருக்கிற விஜய் என்ன செய்யப் போகிறார்?
சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மீதும், சக்சேனா மீதும் புகார் கொடுக்கவிருக்கிறாராம். விஜய்யே நேரடியாக கமிஷனர் அலுவலகத்திற்கு வருகிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றார் அந்த விநியோகஸ்தர்.

'Nanban' shoot at Koyambedu water tank


'Nanban' that has Shankar wielding the megaphone is a multi-starrer and is Shankar's first ever remake venture. The movie is a remake of Bollywood super hit '3 Idiots' that is an adaptation from Chetan Bhagats novel, Five Point Someone.

Jiiva and Srikanth were recently spotted at the Koyambedu water tank in Chennai for the film's shooting that took place for about three days in here. An akila crane was used to cane these shots at the water tank which is about 200 feet tall. Birdies from the unit express that if one goes to this water tank, you get a clear cut view of the whole city!

So what was the 'Nanban' crew shooting for in this locale?

There are few important scenes in this film at this water tank, where Jiiva and Srikanth are tricked into coming here by a college mate and other scenes where the three friends, Vijay, Jiiva and Srikanth spend some quality time in here during their college days. It is also said that some of these scenes come towards the introductory part of the film.

What's Anuya's role in 'Nanban'?


We got to know Anuya Bhagvath through 'Siva Manasula Sakthi' which marked the directorial debut of Rajesh and the movie saw success as a laugh-riot. Anuya's character as Sakthi was given apt importance and she awed one and all for she pulled off the character of a loving yet an egoistic lover well.
However, post 'SMS' she was left with not many offers, or probably didn't choose the right ones to keep her career going.
Following which, she shut herself in Mumbai saying she will come down if there are good scripts alone. It is also said that she even used to listen to stories over Skype! However, she was in good touch with her 'SMS' pal Jiiva, and used to ask him regularly if there are any good roles in Tamil cinema.
That has not gone in vain for the actress for Jiiva did not give upon her. Jiiva had suggested Anuya for a role in his forthcoming multi-starrer, 'Nanban' that has ace director Shankar wielding the megaphone. Shankar also seems to have accepted to this.
So what's Anuya doing in 'Nanban'?
Anuya plays Ileana's sister in this film, a chirpy married woman. Anuya plays a pregnant lady, and the elder daughter of Sathyaraj. It is said that she has pulled off a great performance.
We hope the movie gives Anuya the much-needed big break in Tamil cinema...

Thursday, July 14, 2011

விஜய் எனது இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிப்பார் : சீமான்





வேலாயுதம்', 'நண்பன்' ஆகிய படங்களை அடுத்து விஜய்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'மழை நேர மழைத்துளி'  என்ற படத்தில் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படத்தில் நடித்தார் என்றால் சீமான் இயக்கத்தில் 'பகலவன்'  எப்போது துவங்கும்  என்ற கேள்வி கோலிவுட்டில்  நிலவியது. இது குறித்து இயக்குனர் சீமானிடம் பேசினோம்

" தம்பி விஜய் இப்போது 'நண்பன்' படப்பிடிப்பில் இருக்கிறார். அப்படம் முடித்தவுடன் எனது இயக்கத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார்.

எனது இயக்கத்தில் தம்பி விஜய் நடிக்க மாட்டார் என்ற தகவல்கள் முற்றிலும் தவறானது. படப்பிடிப்பு தொடங்கும் தேதி தெரிந்தவுடன் தான் நாயகி யார், வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது ஒப்பந்தம் செய்யப்படும்.

தம்பி விஜய்யிக்கு இப்படம் ஒரு மைல்கல்லாக அமைய இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று கூறினார்.

இலியானாவின் நம்பிக்கை பலம்




'கேடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கே அவர் திறமை காட்டியதால் முன்னணி நடிகையானார். தற்போது அவரை 'நண்பன்' படம் மூலம் தமிழுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். இப் படத்தில் நாயகியாக நடித்து வரும் இலியானா, 'தமிழில் என்னை நிலை நிறுத்தப்போகும் படமாக இது இருக்கும்' என்று தனது நட்பு வட்டத்தில் சொல்லி வருகிறார். இந்தப் படம் தவிர ஹிந்தியில் ரன்பீன்கபூருடன் நடித்துவரும் 'பர்பி' படமும் அவரது பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த இரண்டு படமும் வெற்றி பெற்று விட்டால், இரண்டு மொழிகளிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று புதிய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். 

விஜய்.. சூர்யா.. விக்ரம் - பற்றி அனுஸ்கா பேட்டி

'வேட்டைக்காரன்'ல விஜய்யோடு நடிச்சேன். விஜய் ரொம்ப  திறமைசாலி. ஆனா அவரது திறமை இன்னமும் சரியாக பயன்படுத்தப்படவில்லை. சூர்யா மிகச் சிறந்த நடிகர். ஷூட்டிங்ல 100 சதவீத ஈடுபாட்டோடு நடிப்பார். சூர்யா நல்ல நடிகராக இருப்பதோடு,  மனைவிக்கு சிறந்த கணவனாகவும், மகளுக்கு சிறந்த அப்பாவாவும் இருக்கார்.  விக்ரமை பொறுத்தவரை அவரது நடிப்பு அசாத்தியமானது. ஆனா அதையும் மீறி அவர் பணிவோட இருக்கார்..

Wednesday, July 13, 2011

vijay gautham menon ar-rahman Movie Latest Update

http://tamil.way2movies.com/wp-content/uploads/2011/06/vijay_gautam.jpg
It’s going to be a big bonanza for cine goers as news of Ilayathalapathy Vijay joining hands with the charismatic combo of AR Rahman and Gautham Menon is making waves. It is learnt that Vijay and Gautham had brief discussions some time back regarding this new project and now things are ready to be taken to the next level.

The star crew also has cinematographer Manoj Paramahamsa, presently sharing his Nanban duties with Vijay .Other names include lyricist Thamarai and editor Anthony as part of the illustrious crew. The news of this latest big budget offering, comes after Vijay’s 65 crore collaboration with director A.R. Murugadoss earlier making top headlines just after Ilayathalapathy’s birthday. The Murugadoss – Vijay movie also has cinematographer Nirav Shah and music composer Harris Jayaraj chipping in their valuable contributions. There was also news that Bollywood diva Sonam Kapoor was being considered for the lead heroine.

Vijay who has Shankar’s Nanban followed by Velayutham starring Genelia and Hansika, surely has loads in store for his ardent fans.

லடாக்கில் இடம்பெறும் விஜயின் இருபட படப்பிடிப்பு

லடாக் என்னும் இடம் அழகுபொருந்திய இடமாகும். அமீர்கான் 3 இடியட்ஸ் முடிந்தபின் ஓய்வு எடுப்பதற்காக சென்ற இடம் இவ்விடமாகும். அழகு பொருந்திய இவ்விடத்தில் மலைகள் நதிகள் ஆறுகள் பனித்துளிகள் என அனைத்து அம்சமும் உள்ளது. செல்வராகவன் விக்ரம் சுவாதியை வைத்து எடுத்த படத்திலிருந்து பல படங்களுக்கு இவ்விடத்தை பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறப்பு பொருந்திய இடத்தில் விஜயின் வேலாயுதம் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த இடத்திலே நண்பன் படத்தின் கிளைமைக்ஸ் காட்சியும் படமாக்கப்படுள்ளது. நண்பன் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுவதுடன் விஜயின் வேலாயுதம் படத்தின் அனைத்துப்பகுதிகளும் முடிந்து பாடல் காட்சி படமாக்கப்படுகிறது. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்கப்படவேண்டி உள்ளது. விஜயின் நண்பனை ஜெமினி பிலிம்ஸ் இந்த வருட தீபாவளிக்கு வெளியிட உள்ளது.

Tuesday, July 12, 2011

மேம்பாலத்துக்காக இடிக்கப்படும் விஜய்யின் திருமண மண்டபம்?

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விரைவில் கட்டப்படவிருக்கும் மேம்பாலப் பணிகளுக்கு இடம் தேவைப்படுவதால், நடிகர் விஜய்யின் திருமண மண்டபம் இடிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போரூர் சிக்னல் அருகே போக்குவரத்து நெரிசல் மிக அதிகம். இப் பிரச்சனையை போக்க அந்த பகுதியில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, ரூ.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்டுவதற்கு இடம் தேவைப்படுவதால் அங்குள்ள கடைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நஷ்டஈடு வழங்கியது. கடைகளை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டும் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் கடைகளை காலி செய்யவில்லை.

இந்நிலையில் மேம்பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஆரம்பித்துவிட்டன. இன்று காலை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலைமையில் 100க்கு அதிகமான ஊழியர்கள் வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் கடைகளை இடித்து அப்புறப்படுத்தினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதே பகுதியில் நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமண மண்டபம் உள்ளது. மேம்பால பணிகளுக்காக திருமண மண்டபத்தின் முன்பக்கம் இடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடைகள் இடிக்கப்படுவதால் வியாபாரிகள் திரண்டு வந்தனர். பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கடைகள் இடிக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு மேம்பாலப் பணிகளுக்காகத்தான் முன்பு விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் மண்டபம் இடிக்கப்பட்டது. அதுவே அவரை அன்றைய ஆளுங்கட்சியான திமுக வுக்கு எதிராக பொங்கவைத்தது.

இப்போது விஜய்யின் மண்டபத்துக்கு அப்படி ஒரு ஆபத்து வந்துள்ளது.

விஜய்க்கு சொந்தமாக பல திருமண மண்டபங்கள் உள்ளன. மாவட்டந்தோறும் ஒன்று மண்டபத்தை உருவாக்கும் திட்டமும் அவருக்குள்ளது. சென்னையில் மட்டும் ஷோபா, ஜேஎஸ்ஆர் உள்பட சில திருமண மண்டபங்கள் உள்ளன.

மாணவ மாணவிகளுக்கு விஜயின் உதவி

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கி வருகிறார். மாணவ- மாணவிகளுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களும் துவங்கியுள்ளார்.

இதுபோல் சேலத்தில் வருகிற 17-ந்தேதி ஏழை மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு தட்டுகள், மேஜை நாற்காலி ஆகிய பொருட்களும் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் விஜய் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது., விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மூன்று ரோடு பகுதியில் இதற்கான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.

விஜய் ரசிகர்களின் சமூகப்பணி

ஒவ்வொரு நடிகரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அத்தகைய ரசிகர்கள் தமது நடிகரின் படம் வரும் பொழுது கட் அவுட் வைப்பது பாலாபிடேகம் செய்வதுடன் நின்று விடுகிறார்கள்.ஆனால் சிலரின் ரசிகர்கள் மாத்திரம் சமூகத்தொண்டைச் செய்கிறார்கள்.அந்த வகையில் விஜயின் ரசிகர்களும் பல சமூகத்தொண்டை செய்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளனர். இப்பொழுது நாகர்கோவிலுக்கு மிக அணமையில் உள்ள கிரமமாகிய ஆசாரிபாலம் எனும் இடத்தில் ஒரு சந்திப்பை நிகழ்த்தி  ஐம்பது விஜய் ரசிகர்கள் கண்ணை தானமாக வழங்கினர். விஜய் ரசிகர்மன்றம் சார்பில் ரசிகர்களே முன்னின்று இதனை செய்தனர். விஜயின் தந்தை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கினார். இவ்வாறு கண்ணை தானம் வழங்கியோரை விஜயின் தந்தை ஊக்கப்படுத்தியதோடு ஆசாரிபாலம் அரசு வைத்தியசாலைக்குச் சென்று இதனை பார்த்தார்.

Monday, July 11, 2011

ரூ 65 கோடி படம்: விஜய் – முருகதாஸ் இணைகிறார்கள்

ஏஆர் முருகதாஸும் விஜய்யும் இணைகிறார்கள் என்பதுதான் கோடம்பாக்கத்தன் இன்றைய ஸ்பெஷல் செய்தி
முழுக்க முழுக்க ஆக்ஷன் அட்வென்சராக உருவாகும் இந்தப் படத்தை மும்பை நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள்.
முருகதாஸுக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.
இப்போது சூர்யாவை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் ஏழாம் அறிவு படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிகிறது. அதன்பிறகு இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
கதை, நடிகர்கள் தேர்வு குறித்தெல்லாம் ஏற்கெனவே முருகதாஸும் விஜய்யும் பேச்சு நடத்தி முடிவு செய்துவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 21 முதல் வேலாயுதம் இசை

விஜய் ரசிகர்களை பொறுத்தவரை விஜய்யின் பட ரிலீசை போல்வே விஜய் படத்தின் பாடல் ரிலீசும் முக்கியம். ஏனென்றால் விஜய் பட பாடல்கள் எப்போதும் அதிரடியாக இருப்பதும், எப்போதும் விஜய் பட பாடல்களுக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதும் தான் இதற்கு காரணம்.

இதோ அதோ என்று சொல்லப்பட்ட வேலாயுதம் படத்தின் ஆடியோ ரிலீஸ் ஜூலை 21தேதி நடக்கப்போகிறது. படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், தசாவதாரம் படத்திற்கு ஜாக்கி ஜானை அழைத்து வந்தது போல் இப்படத்தின் ஆடியோ ரிலீசையும் யாரவது முக்கிய பிரமுகரை வைத்து நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இப்படத்தின் இசையை விஜய் ஆன்டனி அமைத்துள்ளார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து  வேட்டைக்காரன் என்ற படத்தில் கிட் பாடல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விஜயின் சிபாரிசின் பெயரிலே இப்படத்துக்கு இசையமைப்பாளராக தெரிவு செய்தனர்.

விஜய் ஜெனிலியா ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் இப்படம் ஆகஸ்டில் திரைக்கு வர உள்ளது.

Sunday, July 10, 2011

விஜயின் புதிய பட தகவல்கள்

இப்பொழுது தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்படும் செய்திகளில் ஒன்று விஜய் முருகதாஸ் கூட்டணி பற்றியாகும். இவர்கள் இருவரும் இணையப்போவது பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எதுவும் வரவில்லை.எனினும் இவர்கள் இருவரும் இணையும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது. விஜய் மற்றும் முருகதாஸ் இருவரும் தம்முடைய தற்போதைய படங்களை முடித்துவிட்டு புதியபடத்தில் இணைய உள்ளனர்.இப்படம் ஆக்சன் கலந்த காதல் படமாக உள்ளது. மாலை நேரம் மலைத்துளி என்ற தலைப்பு பரிசீலனையில் உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் விஜயின் நண்பன் பட படப்பிடிப்பும் முருகதாஸின் ஏழாம் அறிவின் இறுதி வேலைகளும் முடிவடைந்து விடும்.இதனை அடுத்து விஜய் முருகதாஸ் இணையும் புதிய படம் பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளிவர உள்ளது.

 நிரவ்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக வேலை செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜயுடன் இணைந்து போக்கிரி என்ற கிட் படத்தை கொடுத்தவர் நிரவ்ஸா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இப்படத்தின் தயாரிப்பாளராக விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் மற்றும் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஆகியோர் இணைய உள்ளனர்.ஏற்கனவே ரவி விஜயின் காதலுக்கு மரியாதை திரைப்படத்தை வெளியிட்டதுடன் விஜய் தற்பொழுது நடிக்கும் வேலாயுதம் படத்தின் தயாரிப்பாளர் ஆவார். இப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடிப்பதற்கு தீபிகா படுகோனை அணுகியுள்ளனர். ரஜனியுடன் இணைந்து ரணா படத்தில் நடிக்க உள்ள தீபிகா படுகோனை விஸ்வரூபம் படத்தில் நடிப்பதற்கும் அணுகியமை குறிப்பிடத்தக்கதாகும்.