பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, February 27, 2011

27.02.2011 Paper Add

Saturday, February 26, 2011

விரைவில் பகலவன்

நடிகர் விஜய் சீமான் இயக்கத்தில் பகலவன் என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் விஜய்யின் மாமனார் மாமியார் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இலங்கை பிரச்சனையில் விஜய் குரல் கொடுக்காதது வெளிநாடு வாழ் தமிழ் மக்களை பெரிதும் கோபப்படுத்தியது. அவர்களது கோபத்தை தணிக்க நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டத்தை நடத்தினார். மேலும் சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் சீமான் ஜெயலில் இருக்கும் போதே இப்படத்திற்கான திரைக்கதை அனைத்தும் முடித்து விட்டார். ஒரு மிகப்பெரிய கூட்டத்தில் இருந்த ஒருவரை விஜய் அடிக்கிறார். விஜய்யுடன் இருந்தவர் எதற்காக அடித்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு விஜய் "அவன் என்னை அடிக்க நினைச்சான். அதான் அடிச்சேன் " என்று சொல்கிறார். இது போன்று பல்வேறு தீப்பறக்கும் காட்சிகளை வைத்துள்ளாராம் சீமான். இப்படத்தின் மொத்த காட்சிகளையும் கேட்டவுடன் சீமானை பாராட்டியதோடு மட்டும் அல்லாமல் இப்படத்தை உடனே ஆரம்பிக்க ஆசைப்பட்டு இருக்கிறார் விஜய்.


ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமாவதற்கு காரணம் இப்படத்தின் தயாரிப்பாளர் யார் என்று முடிவாகாமல் இருப்பது தான். நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்று இருப்பது சூப்பர் குட் பிலிம்ஸ். ஆனால் சீமானோ தாணுவிடம் இப்படத்தின் கதையை சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார், ஆகவே இப்படத்தை தயாரிக்கும் பொறுப்பை யார் ஏற்க போகிறார்கள் என்பது மட்டும்தான் கேள்விக்குறி.

தமிழக தேர்தல் முடிந்தவுடன் இப்படத்தை ஆரம்பிக்கும் முனைப்புடன் இருக்கிறார்கள் சீமானும் விஜய்யும். அதற்குள் பகலவன் தயாரிப்பாளர் பிரச்சனை தீர்ந்து விடும் என்கின்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

எனது உடன்பிறப்பே - ரசிகர்களை உருக்கிய விஜய் பாடல்!

நகையில் இலங்கை அரசைக் கண்டித்துப் பேசிய விஜய் சில பாடல்களையும் பாடினார். கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கூச்சலும் அலறலுமாகவே இருந்தது. விஜய்யே மேடைக்கு வந்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்று வேண்டிக் கேட்டுக் கொண்டும் அவர் ரசிகர்கள் கேட்பதாக இல்லை. 

நான் மீனவ நண்பன் படத்தை பார்த்திருக்கிறேன். அந்தப் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன விஜய் கடல் மேல் பிறக்க வைத்தான்... எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான்... என்று எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினார்

அரசியல் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த விஜய் என் படத்தைப் பற்றியும் சில விஷயங்கள் பேச நினைக்கிறேன். காவலன் பல தடைகளை தாண்டி வெளிவந்தது. அதற்கு நீங்கள் ஆதரவு கொடுத்து வெற்றிப் படமாக கொண்டாடினீர்கள். இப்போது வேலாயுதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது உங்களுக்கு பிடித்த வகை மாஸ் படமாகவே இருக்கும்.

நான் 51 படங்கள் நடித்து விட்டேன். இத்தனைப் படங்களில் எனக்கு கிடைக்காத பாடல் எனக்கு வேலாயுதம் படத்தில் அமைந்தது. அது உங்களைப் பற்றிய பாடல். நான் எப்போதும் உங்களுக்கா இருக்கிறேன் என்று சொல்லி, கொஞ்சம் அமைதி காத்தீர்கள் என்றால் அந்தப் பாடலை பாடுகிறேன் என்றார். ஆனால் விஜய் எவ்வளவோ கையசைதாலும் ரசிகர் அமைதியாவது போல் தெரியவில்லை.

வேறு வழியில்லை என் நினைத்த விஜய் அந்த பாடலை உரக்கக் கத்திப் பாடினார். அவர் கத்த... பதிலுக்கு அவர் ரசிகர்கள் கத்த... ஒரேக் கதறல் தான்! விஜய் ரசிகர்களை உருக வைத்த வேலாயுதம் படத்தின் அந்தப் பாடல் இதோ...

ரத்தத்தின் ரத்தமே...
எனது உடன்பிறப்பே...
சொந்தத்தின் சொந்தமே...
நான் இயங்கும் உயிர் துடிப்பே!

அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே...
என் வாழ்க்கை உனக்கல்லவா!
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்...
என் வாசம் உனக்கலாவா..

26.02.2011 Paper Add

Friday, February 25, 2011

இந்தியா இலங்கையில் காவலன் பட தற்போதைய நிலவரம்

பொங்கலுக்கு வெளியாகிய படங்களில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படமாக காவலன் காணப்படுகிறது.ஏனைய இரு படங்களான சிறுத்தை ஆடுகளம் ஆகியவை அதிகவான திரையரங்குகளில் வெளியாகின வெளியாகிய திரையரங்குகள் பலவற்றில் (தமிழகம் முழுவதும்)தூக்கப்பட்டுள்ளன.காவலன் இப்படங்களை விட அதிகளவான திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெற்றிநடைபோடுகிறது.

இலங்கையில் காவலன் காய்சல் தொடர்கிறது
இலங்கையில் பொங்கலுக்கு வெளியாகிய காவலன் படமே சென்ற வார இலங்கையின் பட வரிசை 10 இல் முதலிடத்தில் இருந்தது.ஏனைய பொங்கல் படங்கள் பெரும்பாலான திரையர்ங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளன.காவலன் மட்டும் 5 திரையரங்குகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கிறது.பொங்களின் பின் வெளியாகிய படங்கள் தியேட்டருக்கு வந்து சில 
நாட்களுக்குள்ளேயே பெட்டிக்கும் போய் விட்டன.காவலன் மட்டும் சிறப்பாக ஓடுக்கொண்டிருக்கிறது.இன்று சீடன் படம் வெளியாகியுள்ளது.இப்படம் எவ்வாறு என்பது சில தினக்களில் தெரிந்து விடும் .தொடர்ந்தும் காவலன் முதலிடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

25.02.2011 Paper Add

Thursday, February 24, 2011

இது ஒரு 'ரீமேக்' காலம்!

நடப்பு ஆண்டில் தான் தமிழ் சினிமாவில் அதிகமான ரீமேக் படங்கள் வெளிவர இருக்கின்றன.

முக்கிய படைப்பாளிகள் பலரும் ஏற்கெனவே வெற்றி அடைந்த படங்களின் தமிழ் உரிமையை வாங்கி படமெடுத்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு தமிழில் வெளிவந்த மற்றும் வெளிவர இருக்கும் படங்கள் பின்வருமாறு..

சிறுத்தை : ரவிதேஜா நடித்த விக்ரமகுடு படத்தின் ரீமேக். கார்த்தி, தமன்னா நடித்து வெளிவந்தது.

காவலன் : மலையாளத்தின் பாடிகார்ட் படத்தின் ரீமேக். விஜய், அசின் நடித்து வெளிவந்தது.

சீடன் : மலையாளத்தின் நந்தனம் படத்தின் ரீமேக். தனுஷ், அனன்யா நடித்து வெளிவர இருக்கிறது.

நண்பன் : இந்தி படமான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடித்து வெளிவர இருக்கிறது.

வேலாயுதம் : தெலுங்கின் ஆசாத் படத்தின் ரீமேக். விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடித்து வெளிவர இருக்கிறது.


இந்தி படமான டபாங் நடிகர் சிம்பு நடிக்க வெளிவர இருக்கிறது. இப்படத்தின் உரிமையை பெற கடும் போட்டி நிலவிய நிலையில் பாலாஜி ஸ்டுடியோஸ் அப்பா ராவ் இது வரை எந்த படத்தின் ரீமேக் உரிமைக்கும் இல்லாத தொகை இப்படத்துக்கு கொடுத்து வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

அதேபோல், மலையாள படமான டராபிக் உரிமையை பெறுவதற்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இன்னும் ஒரிரு வாரங்களில் தெரியலாம் எந்த தயாரிப்பாளருக்கு வெற்றி என்று.

இந்தி படமான பேஷன் இவ்வருடம் தமிழில் வெளிவர இருக்கிறது. ப்ரியங்கா சோப்ரா மற்றும் கங்கனா ராவாத் வேடங்களில் த்ரிஷா மற்றும் ப்ரியா மணி நடிக்கலாம்.

இந்தி படமான பேண்ட் பாஜா பாராட் தமிழில் வெளிவர இருக்கிறது. பிரபல நடிகரின் வாரிசை இப்படத்தின் தமிழ் பதிப்பின் மூலம் நாயகனாக அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். அனுஷ்கா ஷர்மா வேடத்தில் தமன்னா நடிக்கலாம்.


காவலன் பாடல்கள்

Kavalan - Vidyasagar

Kavalan Tamil Movie, Kavalan Songs Free Download Music By Vidyasagar - Kavalan

Featuring : Vijay, Asin, Vadivelu, Rajkiran, MS Bhaskar

Production : Ekaveera Creations
Starring : Vijay, Asin, Vadivelu, Rajkiran, MS Bhaskar
Director : Siddique
Lyrics : Pa. Vijay, Yugabharathy, Vivega & Kabilan

Pattamboochi - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : K.K.& Rita

Sada Sada - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik

Yaradu - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik & Suchitra

Step Step - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Benny Dayal & Megha

Vinnai Kappan - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Tipu & Swetha

வேட்டைக்காரன் தெலுங்கில் புலிவேட்டை

விஜயின் நடிப்பில் வெளிவந்து 70 கோடியை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்த வேட்டைக்காரன் திரைப்படம் தெலுங்கில் புலிவேட்டை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் மாதம் 1 வது வாரம் வெளியிடப்படுகிறது.இப்படத்தை தெலுங்கு பட உலகின் பிரபா தயாரிப்பாளர் கோபால் ராயு வெளியிடுகிறார்.தெலுங்கு ரசிகர்கள் கொமெர்சியல் படங்களை வெற்றியடைய செய்பவர்கள் என்பதனால் இப்படம் வெளியிடப்படுகிறது.இதில் நடித்துள்ள  அனுஸ்கா சிறீகரி ஆகியோர் தெலுங்கில் பிரபலமானவர்கள் என்ற படியால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் நடிப்பில் வெளிவந்த படங்களான அழகியதமிழ்மகன் குருவி என்பன தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.விஜயின் வேட்டைக்காரனை தொடர்ந்து வில்லு திரைப்படமும் தெலுங்கில் வெளிவர உள்ளது.ஏற்கனவே தெலுங்கு வேட்டைக்காரன் மற்றும் வில்லு பாடல்கள் ரசிகர்களிடத்தே நல்ல மதிப்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

24.02.2011 Paper Add

Wednesday, February 23, 2011

தமிழக மீனவர்களுக்காக தனித்து போராடுவேன்: நடிகர் விஜய்


"தமிழக மீனவர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும், என் மீது விழும் அடியாக நினைத்து தனித்து நின்று போராடுவேன்," எ


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நாகை காடம்பாடி சாலையில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் பேசுகையில், "இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இங்கு நாம் இந்த கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
இது, சென்னை கோட்டையை மட்டுமல்ல, டெல்லி கோட்டை வரை எட்டும். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கிறது.


கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள்.
நாகை மீனவர் ஜெயக்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து கடலில் தூக்கி வீசி உள்ளனர்.
இலங்கை ராணுவத்தினர் என்ன மனிதர்களா இல்லை அரக்கர்களா? இவ்வளவு நடந்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.
இலங்கை ராணுவத்திடம் நாம் அடிபணிந்து கிடக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. நாம் புலிப்பால் குடித்த பரம்பரை. 'நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட'. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் உலக வரைபடத்தில் இலங்கை காணாமல் போய் விடும்.
தந்திகள் அனுப்புவீர்...
ஏதோ வந்தோம், நாம் கூட்டம் நடத்தினோம் என்று இருக்கக்கூடாது. சேவை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீனவர்களின் நிலை குறித்தும் நீங்கள் பிரதமர் மற்றும் முதல்வருக்கு தந்தி அனுப்ப வேண்டும். நாளை காலை முதல் நீங்கள் தந்தி அனுப்ப வேண்டும்.
நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. இனி தமிழக மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன்," என்றார் நடிகர் விஜய்.
போலீஸ் தடியடி...
முன்னதாக, பொதுக் கூட்டத்தில் ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறியதால், போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
இந்தக் கூட்டத்துக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டனர். மாலை 5.45 மணியளவில் நடிகர் விஜய் மேடையில் ஏறினார். அவரைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பலர் மேடையை நோக்கி முன்னேறத் தொடங்கினர்.
அப்போது, ரசிகர்கள் கட்டுப்பாட்டை மீறி இருக்கைகளையும், தடுப்புக் கட்டைகளையும் உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி வந்தனர்.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர். அசம்பாவிதத்தை தடுக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.
மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி..
இறுதியில், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் மறைவுக்கும், மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டி ஆகியோரின் மறைவுக்கும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இறந்த மீனவர்கள் ஜெயக்குமார், பாண்டி குடும்பத்துக்கு தலா ரூ.50 ஆயிரத்தை மேடையில் நடிகர் விஜய் வழங்கினார். மேலும் 10 மீனவர்களுக்கு மீன்பிடி வலை, மரக்கன்றுகள், படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஆகியவற்றையும் நடிகர் விஜய் வழங்கினார்.
இக்கூட்டத்துக்கு நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். புதுவை மாநில விஜய் நற்பணி மன்ற தலைவரும், எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி.ஆனந்த், அகில இந்திய விஜய் தலைமை நற்பணி மன்றத்தை சேர்ந்த ஜெயசீலன், ரவிராஜா, ராஜேந்திரன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விஜயினது உரை

தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும் என்று நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலைக் கண்டித்து நேற்று நாகையில் விஜய் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அதிமுகவும் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விட்டனர். இதனால் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் சேர்ந்து விட்டது. ஆனால் தொடர்ந்து மழையும், கடும் காற்றுமாக இருந்ததால் பெரும் குழப்பமான நிலை ஏற்பட்டது. போராட்டத்தைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இதனால் மழையில் காத்திருந்த ரசிகர்கள் ஆவேசமடைந்தனர். இதையடுத்து அவர்களை கட்டுப்படுத்துவதாக கூறி போலீஸார் திடீரென தடியடியில் இறங்கினர். இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த விஜய் கோபமடைந்தார். அந்த இடத்திலிருந்து திடீரென அவர் வெளியேறிச் சென்றார்.
பின்னர் மீண்டும் வந்த அவர் ரசிகர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறிய தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை.
கடந்த சில ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் சுமார் 540 பேர் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,100-க்கும் அதிகமானோர் ஊனமாக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களில் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். அண்மையில், இலங்கைக் கடற்படையின் தாக்குதலில் தமிழக மீனவர்கள் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
மீனவர் ஜெயக்குமாரின் கழுத்தில் சுருக்கிட்டு இலங்கைக் கடற்படையினர் கொலை செய்தனர் என்பதை அறியும்போது, இலங்கை ராணுவத்தினர் மனிதர்களா அல்லது அரக்கர்களா என்று நினைக்கத் தோன்றுகிறது.
கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு வந்தோம், சென்றோம் என ரசிகர்கள் இருந்து விடக் கூடாது. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சேவையை செய்ய உறுதியேற்க வேண்டும். அனைவரும், தமிழக மீனவர்கள் பிரச்னையை விளக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகளுக்குத் தந்தி அனுப்புங்கள். நாம் அனுப்பும் தந்தி, பிரதமரின் வீட்டுக் கதவையும், தமிழக முதல்வரின் வீட்டுக் கதவையும் தட்டட்டும்.
மீனவர்கள் மீது எனக்கு எப்போதும் பாசம் உண்டு. மீனவர்கள் மீது விழும் அடிகளை என் மீது விழுந்த அடிகளாகக் கருதிப் போராடுவேன் என்றார் விஜய்.
போராட்டத்தின்போது சமீபத்தில் இலங்கைக் கடற்படையில் கொல்லப்பட்ட மீனவர்கள் ஜெயக்குமார் மற்றும் பாண்டியன் ஆகியோரது குடும்பத்திற்கு விஜய் தலா ரூ. 50,000 நிதியுதவியையும் வழங்கினார். 7 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளையும் வழங்கினார்.
போராட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்கக் கெளரவத் தலைவரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தலைமை தாங்கினார். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் போராட்டத்திற்கு திரண்டு வந்திருந்தனர்.
தனது பேச்சின்போது மறைந்த பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிடம் மெளனமாக இருக்கும்படி அனைவரையும் விஜய் கேட்டுக் கொள்ள அதன்படி அனைவரும் எழுந்து நின்று மெளனம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தினர்

இந்தி-தெலுங்கு படங்களை நம்பும் கோலிவுட்

நேரடி தமிழ் படம் எடுத்து ஹிட்டாக்குவதைவிட தெலுங்கு, இந்தியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து எடுக்கும் 'டிரண்ட்' உருவாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், த்ரீ இடியட்சை தமிழில் ரீமேக் பண்ணுகிறார். மூன்று ஹீரோக்களை வைத்து 'நண்பன்' படத்தை எடுத்து வருகிறார்.
டைரக்டர் ராஜா,தெலுங்கில் நாகார்ஜுன் நடிப்பில் ஹிட்டான படத்தை தமிழில் விஜய் கலக்கும் 'வேலாயுதம்' படமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் சில தெலுங்கு, மலையாள படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்க படப்புள்ளிகள் திட்டமிட்டுள்ளது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டிலிருந்து சிங்கம்,விண்ணை தாண்டி வருவாயா, மைனா, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் இந்திக்கு செல்கின்றன. பாலிவுட்டிலிருந்து பேஷன்,தபங்,பாண்ட் பாஜா பாராட் ஆகிய இந்தி படங்கள் கோலிவுட்டுக்கு வர உள்ளன என்கிறது பட வட்டாரம்.
சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ஹிட்டான 'தபங்' படம் மாஸ் எண்டர் டேயினர். ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் அதில் உள்ளன. ஹீரோக்கள் விரும்பும் மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்கிறார் சிம்பு.
இந்தி 'தபங்' பட உரிமையை வாங்கி, தமிழில் படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் படத்துக்கு பொருத்தமான 'மாஸ் ஹீரோவை கோலிவுட்டில் அலசி வருகிறார்கள்.
பாலிவுட் 'பேஷன்' படத்தை தமிழில் எடுக்கிறார்கள். இதில் முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். பான்ட் பாஜா பாராட் படத்தில் ஹீரோ ஒருவரின் வாரிசு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அதில் இந்தியில் அனுஷ்கா சர்மா பண்ணிய ரோலில், நாயகியாக தமன்னாவை நடிக்க வைக்கப்போகிறாராம்.

கண்டன போராட்டம்

விஜய் நடத்திய பேரணியில் கலந்து கொண்டோரின் ஒரு பகுதியினரை படத்தில் காணலாம்.

படக்குழுவை பாராட்டும் சரண்யாமோகன்


விஜயினது வேலாயுத படப்பிடிப்பு பொள்ளாச்சியில் கடந்த சில நாட்கள் இடம்பெற்றது.அத் தருணத்தில் சரண்யா மோகனின் பிறந்த நாள் வந்தது.அப்பிறந்த நாளை படத்தின் நாயகிகளில் ஒருவராகிய கன்சிகா மோத்வாணி கேக் வெட்டிக்கொண்டாடினார்.இதனை பட யுனிட் அனைத்தும் கொண்டாடியது.ஒரு குடும்பம் போல படக்குழுவினர் நடந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி அழிப்பதாக உள்ளது என சரண்யா மோகன் கூறினார்.

23.02.2011 Paper Add

Tuesday, February 22, 2011

20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர்

நாகப்பட்டினம் : தமிழக மீனவர்கள் மீது கண்மூடித்தாக்குதல்களை நடத்திவரும் இலங்கை கடற்படையை கண்டித்து, நடிகர் விஜய் தலைமையில் நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்துள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வந்துள்ள ரசிகர்களின் எண்ணிக்கை, அரசியல் கட்சியினர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் தலைமையில் கண்டன கூட்டம்

நாகை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.இதற்காக ரசிகர்கள் நாகையில் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த விஜய் கூட்டத்தில் ஏதும் பேசாமல் ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு உடனடியாக கோபத்துடன் அங்கிருந்து திரும்பினார். இதன் பின்னர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயை சமாதானம் செய்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். கூட்டத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டும் பேசினார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், மீனவர்கள தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரியவில்லை. மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பிரதமர் மற்றும் முதல்வருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என கூறினார். இலங்கையில் மரணமடைந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள், கடற்படை தாக்குதலில் பலியான மீனவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொண்டார்.

22.02.2011 மாலை மலர் பத்திரிகை விளம்பரம்









22.02.2011 மாலை மலர் பத்திரிகை விளம்பரம்









Box office

கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களை கரை சேர்க்க…! – விஜய் அறிக்கை

தனது முதல் அரசியல் போராட்டம் குறித்த முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். ‘சிங்கள கடற்படையால் கண்ணீரில் தத்தளிக்கும் தமிழக மீனவர்களைக் கரைசேர்க்க வாருங்கள்’, என தனது அறிக்கையில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வேதனையுடன் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
தரையில் பிறந்தாலும் தண்ணீரில் பிழைக்க வேண்டிய நிலையில் மீனவ சமுதாயம் இருக்கிறது.
பிழைப்புக்காக அவர்கள் உயிரைப் பணயம் வைத்து கடலுக்குள் போனால் சிங்கள ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொல்வதும், சிறைப் பிடித்துச் சென்று சித்திரவதை செய்வதும், அவர்களின் உபகரணங்களைப் பறிப்பதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகும் அவர்களுக்காக பரிந்து பேசி அரசாங்கம் ஒரு இறுதி முடிவு மேற்கொள்வது அவசியம்.
கண்ணீரில் தத்தளிக்கும் மீனவர்களைக் கரைசேர்க்க, அவர்கள் வேதனையை நம் வேதனையாக உணர்ந்து அவர்களுக்காக குரல் கொடுக்க எண்ணினேன்.
அதனால் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழர்களை ஒன்று திரட்டி, நம் குரல் உலக அளவில் ஓங்கி ஒலிக்க இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறோம்.
என் ரசிகர்கள், மக்கள் இயக்கத்தினர் மட்டுமின்றி, பொது மக்களும் ஒன்று திரண்டு வந்து தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்த வேண்டும். உலகின் எந்தக் கோடியில் தமிழனுக்கு தலைகுனிவு வந்தாலும், எட்டுகோடி தமிழர்களும் வெகுண்டு எழுவார்கள் என்ற எண்ணத்தை உலகுக்கு ஏற்படுத்த வேண்டும்.
இந்த கண்டனப் பொதுக் கூட்டம், வரும் 22.2.2011 அன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் காடம்பாடி சாலையில் உள்ள விடிபி கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது.
உலகின் கவனத்தை மீனவ சமுதாயத்தின் மீது திருப்ப நீங்கள் ஒவ்வொருவரும் இதில் பங்குபெற வேண்டும். உங்களில் ஒருவனான நான் உங்களை அன்புடன் அழைக்கிறேன்”, என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ் ஏ சந்திசேகரன் இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.

Paper Add