பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Sunday, October 31, 2010

Superstar Prince Mahesh Babu entering into 25films club

Superstar Prince Mahesh Babu entering into 25films club with "DHOOKUDU"(Childhood - 9 + Hero - 16)

Filmography Of Pince.

Films as a child artist

*Needa (1979) produced by Dr.K.Rama Koteswara Rao
*Poratam (1983)
*Sankharavam (1987)
*Bazaar Rowdy (1988)
*Mugguru Kodukulu (1988)
*Gudhachari 117 (1989)
*Koduku Diddina Kapuram (1989)
*Anna-Tammudu (1990)
*Bala Chandrudu


As actor

*Raja Kumarudu(1999)
*Yuvaraju(2000)
*Vamsi(2000)
*Murari(2001)
*Takkari Donga(2002)
*Bobby(2002)
*Okkadu(2003)
*Nijam(2003)
*Naani(2004)
*Arjun(2004)
*Athadu(2005)
*Pokiri(2006)
*Sainikudu(2006)
*Athidhi(2007)
*Khaleja(2010)

Undergoing Projects

*Dookudu(2011)
*3 Idiots(Telugu) - (2011)
*VETA(2011)

நடிகர் விஜய் ஆவேசம்

கோவையில் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் மிக கொடூரமானது. குழந்தைகளை கடத்தி கொலை செய்பவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
உடுமலை அருகே திருமூர்த்திமலை பகுதியில் நடிகர் விஜய் நடித்த வேலாயுதம் படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக அவர் உடுமலையில் முகாமிட்டுள்ளார். கோவையில் குழந்தைகளை கடத்தி கால்வாயில் வீசி கொலை செய்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை விவரம்:
கோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது. துள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது. பணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக்கூடாது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும். இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை. மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

THE CURRENT TOP 10 DANCERS OF TAMIL CINEMA



Vijay
Vijay
From Naalaya Theerpu to Sura, this gentleman has never felt tired when it comes to dancing. Considered by many as one of the best dancers ever in Tamil cinema, Vijay has had his fans spellbound with his moves. Though the professor teaches the subject, it is the student who writes the exam. So Vijay is an extraordinary student who is bent upon improvising on his dance skills in each song he features in. To name a particular song would be demeaning to this very gifted and hard-working actor. His initial movies including Vishnu, Love Today, Once more and Nerukku Ner were just starters to the grand fiesta that awaited us. If Thulladha Manamum Thullum was a break through movie in his career, ‘Macarena Macarena’ and ‘Kattipudi Kattipudida’ are virtual classics. His 'All thotta Bhupathi' song in Youth and 'Appadi Podu' in Ghilli took his reputation as a dancer to the next level. His improvised dances in Azhagiya Tamil Magan, Villu and Sura have only created curiosity and have made us expect more from this 'Dancing Star'.P.S: Vijay used to sing regularly in his movies to complement his dancing. He stopped this habit after Sachein, which was released in 2005.

Saturday, October 30, 2010

நிச்சயம் சினிமாவில் என் கருத்துக்களை வைப்பேன்! - விஜய்

மெல்லிய கடல் அலை சலங்கை ஒலிக்கும் நீலாங்கரை வீட்டின் கதவு தட்டினால், பளிச்சென்று விஜய். "ரொம்ப நாளாச்சுல்ல இளைய தளபதிய சந்திச்சு.. தீபாவளி ஸ்பெஷல் வேற, பேசாம இருக்க முடியுமா?" உற்சாகத்தோடு நம்மை வரவேற்றவர்.. நம் கேள்விகளுக்கு நிதானமாக பதிலளித்தார்...
"திடீர்னு அமைதியாகிட்டீங்க. நாலைஞ்சு மாசமாச்சு உங்க குரலைக் கேட்டு. இப்போ 'காவலன்' எப்படி வந்திருக்கு?"
 Tamil Celebrity ACTOR VIJAY'S SPECIAL INTERVIEW ABOUT HIS ANGLE ON POLITICS IN HIS FILMS "நான் ரொம்ப அப்பாவியா, வெகுளியா நடிச்ச படங்கள்லாம் நல்ல ஹிட். கொஞ்ச நாள் ரூட் மாறி ஆக்ஷன் பக்கம் போனேன். இந்த 'பாடிகார்ட்' நான் முன்னாடியே செய்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் முடியலை. இப்போ அதில் நானே இஷ்டப்பட்டு நடிக்கிறேன். படத்தின் கலகல திரைக்கதை, பாடல்கள், 20 நிமிட க்ளைமாக்ஸ் எல்லாமே மனசை அள்ளிடும். 'காதலுக்கு மரியாதை', 'துள்ளாத மனமும் துள்ளும்' மாதிரி காதல் அதிகமா, ஆக்ஷன் குறைவா அமைஞ்ச படம். 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நானும் வடிவேலுவும் அடிச்ச கூத்தை இப்போ பார்த்தாலும் சிரிப்பு வருதே. நிச்சயம் அந்த மேஜிக் இந்தப் படத்திலும் இருக்கும். அடுத்து 'வேலாயுதம்'. 'ஜெயம்' ராஜாவுக்கும் எனக்கும் அலைவரிசை சரியா இருந்தது. படத்தை நல்லபடியா கொண்டுவரணும்னு கவலைப்படுற அவரோட அக்கறையும் எனது விருப்பமும் ஒண்ணுதான். எல்லாம் இப்போ சரியாப் போய்ட்டு இருக்கு. பார்க்கலாம்!"
"என்ன, ஒரு படத்தோட உங்க பையனை சினிமாவில் இருந்து நிறுத்திட்டீங்க... அவரும் 'ஜூனியர்' விஜய் ஆக சினிமாவுக்கு வருவாரா?"
"சும்மா ஒரு டான்ஸ் ஆடிப் பார்ப்போம்னு ஆசைப்பட்டார். ஆடினார். திரும்ப அவர் படிப்பில் கவனம் ஆகிட்டார். இன்னிக்கு அவர் பிரியம் எல்லாம் கிரிக்கெட் மேலேதான். எல்லாம் சென்னை கிங்ஸ் போட்டிகள் பார்த்த எஃபெக்ட். அவுட்டோர் போயிடுறப்போ, சஞ்சய், திவ்யாவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். அவங்க என்னைவிடக் கஷ்டப்படுவாங்க. அதனால், என்னோட பாட்டு டி.வி-யில் வந்தா, சஞ்சய் ஆட ஆரம்பிச்சுடுவான். திவ்யா சிரிச்சுட்டே பார்ப்பாங்க. அப்படி 'பாசமலர்' பிரதர் சிஸ்டர். கொஞ்சமே கொஞ்ச நேரம் கிடைச்சாலும், அவங்களை செல்லம் கொஞ்சுவதிலேயே சரியாப் போயிருது. கண்டிப்பு டிபார்ட்மென்ட்லாம் அவங்க அம்மா சங்கீதாதான். பையன் நிச்சயம் ஒரு டிகிரியாவது படிச்சு பாஸ் ஆகணும்னு ரெண்டு பேருக்குமே ஆசை. பொண்ணுக்கு அஞ்சு வயசு. யு.கே.ஜி. போறாங்க. வீடியோ கேம்ஸ்ல அவங்களை ஒரு தடவைகூட என்னால் ஜெயிக்க முடியலை. நம் பிள்ளைங்க, நம்மளைவிட செம ஸ்பீடா இருக்காங்க. சரிக்குச் சரியா அவங்களோடு நம்மை அப்டேட் பண்ணாம இருந்தா, அவங்க நம்மைத் தாண்டிப் போயிட்டே இருப்பாங்க. நம்ம பிள்ளைங்கதானே... தாண்டட்டும்!"
"எம்.ஜி.ஆர். சினிமாவை ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினார். ஒவ்வொரு படத்திலும் அரசியல் பொடி தூவினார். உங்க படங்களில் அது இல்லையே. ஏன்?"
"எம்.ஜி.ஆரோட காலம் வேற. மொழிப்பற்றும், திராவிடப் பாரம்பரியமும் ஊறிக்கிடந்த காலம். அப்ப அவர் சொன்ன கருத்து சரியாக இருந்தது. மக்களிடம் எடுபட்டது. இப்போ இருக்கிற இளைய தலைமுறை அரசியலை சினிமாவோடு கலக்கிறதை ஆதரிப்பாங்களானு சந்தேகமா இருக்கு. இந்த விஷயத்தில் இளைஞர்களின் எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கும் ஆசையா இருக்கு. அதே சமயம் காலமும், நேரமும், இடமும், சூழலும் அனுமதிக்கும்போது, என்னை அந்த இடத்தில் கொண்டுபோய் வைக்கும்போது, நிச்சயம் சினிமாவில் என் கருத்துக்களை வைப்பேன். அப்படி செய்யத் தயங்கவும் மாட்டேன்... அஞ்சவும் மாட்டேன்!"
"நீங்க அரசியலுக்கு வருவது பற்றிய முடிவுக்கு வந்துவிட்டீர்களா?"
"அது இருக்கட்டும். இப்ப ஷூட்டிங்குக்காக தமிழகத்தோட தென்கோடிக்குப் போயிருந்தேன். ஊரில் இளைஞர்களே இல்லை. எல்லோரும் சென்னைக்கோ, வெளிநாட்டுக்கோ பிழைக்கப் போயிடுறாங்க. நாம எல்லோரும் விவசாயத்தை மறந்துட்டோம். இனிமே எதிர்கால விஞ்ஞான மாற்றத்தில் எல்லாமே கிடைக்கும். பேசுற செல்போன்கூட ரூபாய் 100-க்குக் கிடைக்கலாம். ஆனால், சாப்பிட அரிசி? விளை நிலங்களைத் தவிக்கவிட்டால், திரும்ப நாம தவிச்சு நிக்கும்போது, நமக்குச் சோறு போட அதுக்கு இஷ்டம் இருக்குமா? அடுத்த தலைமுறை 'விவசாயம்னா கிலோ என்ன விலை'ன்னு கேட்குமே? பெருந்தலைவர் காமராஜர் எப்பவும் கல்வியும் விவசாயமும்தான் நமக்கு வேணும்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதை நாம செய்யாம விட்டுட்டோம். எனக்கு முதலில் இளைஞர்களை விவசாயம் பக்கம் திசை திருப்ப ஏதாவது செய்யணும்னு தோணுது!"
"சைதை துரைசாமி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நீங்களும் ஜெயலலிதாவும் சந்தித்ததா சொல்றாங்களே?"
"ஆமாம். திருமண வரவேற்பில் ஜெயலலிதா மேடத்தை எதிர்பாராத விதமாகச் சந்தித்தேன். அவங்க மணமக்களை பார்த்துத் திரும்பும்போது, நான் தம்பதியை வாழ்த்த படி ஏறிட்டு இருந்தேன். அவ்வளவு அவசரத்திலும் கூட்ட நெரிசலிலும் எனக்காக சில நிமிடங்களை ஒதுக்கினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. 'எப்படி இருக்கீங்க?'ன்னு பாசமா விசாரிச்சாங்க. 'அம்மா, வெவ்வேறு ஊர்கள்ல உங்கள் மேடைப் பேச்சு, கூடின கூட்டம் எல்லாத்தையும் டி.வி-யில் பார்த்தேன். ரொம்ப நல்லா இருக்கு'ன்னு சொன்னேன். ஆர்வமாக் கேட்டுச் சிரிச்சாங்க. 'வணக்கம்' சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க. அவரை நேருக்கு நேர் நான் சந்தித்துப் பேசியது இதுதான் முதல் தடவை. அவ்வளவு கூட்ட நெருக்கடியில் இரண்டு பேருமே அதற்கு மேல் நின்று பேச முடியவில்லை!"
"சினிமா உலகத்தை உற்றுக் கவனிக்கிறவர் நீங்க. இப்போ எப்படி இருக்கு தமிழ் சினிமா?"
"எனக்கு ஷங்கர் சாரை நினைச்சா, பெருமையா இருக்கு. யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும், யோசிக்கலாம். ஆனால், திரையில் கொண்டுவருவது... அது வேற மாதிரி பொறுப்பு. அதை எப்பவும் அருமையா செய்துட்டே இருக்கார். ஒரு தமிழனா எனக்கு சந்தோஷமா இருக்கு. அமீர் டைரக்ட் செய்த 'பருத்திவீரன்' வந்து மூணு வருஷமாகிவிட்டது. ஆனால், அந்த சினிமா இன்னும் என் மனசைவிட்டுப்போகலை. ஒவ்வொரு ஃப்ரேமும் மனசுக்குள் இருந்துக்கிட்டே இருக்கு. அமீர் இந்த மாதிரி நல்ல சினிமா செய்தால், நாம் கொண்டாடலாம். நான் கொண்டாடுறேன். அடுத்து சசிகுமார். அவர் பண்ணின படம் 'சுப்பிரமணியபுரம்'. முதல் படமே இப்படி பரபரப்பில்... சமீபத்தில் யாராவது இப்படிச் செய்து இருக்காங்களான்னு பார்த்தா, ஞாபகம் வரலை. எனக்கு எல்லோரையும் பிடிக்கும். என்ன... இவங்களைக் கொஞ்சம் அதிகமாப் பிடிக்கும்!

Vijay Maintains Low-Profile for Kaavalan

Vijay Maintains Low-Profile for KaavalanThe actor seems to have changed a lot when it comes to choosing his scripts and indeed promoting them. It looks like his bitter past experiences over continuous flops has landed him upon such transformations. The actor has stepped out of his usual action-packed roles and will reestablish himself as a soft romantic boy in his upcoming release Kaavalan.

Filmmaker-producer Sakthi Chidambaram has acquired the rights of Kaavalan and will release it with more prints under his home banner of Cinema Paradise. Despites the actor’s previous films turning out to be flop show, Kaavalan has done a remarkable business in overseas market. Witnessing such immense popularity for the actor, Sakthi Chidambaram decided to release the film’s music in Malaysia. However, according to the sources, it has been revealed that Vijay intervened and requested the producer to have a simple audio launch in Chennai itself.

This time, Vijay has certain plans of avoiding grand publicities and prove his best over the screens. 

Mahesh & Vikram in ManiRatnam’s Flick (SUN Pic’s)

After ROBO, SUN pictures getting ready to produce Mani Ratnam’s next flick,an adoption of “Panniyin Selvan” Novel (written by Kalki). Which is a Historical-Romantic-Thriller & Fiction story, happend in 11th A.D. (Chola’s). Well-known writer Jayamohan has been lured by Sun Pictures for a fancy amount of ` 2 crores for dialogues, which according to sources in the industry, is the highest payment for a dialogue writer.Earlier, Mani decided Kamal as lead.But, later working for RAVAAN with Vikram,he changd.

According to sources, Mahi will play “Vallavarayan” role (An adventurous, naughty, lucky and attractive young man) & Vikram will do “Arulmozhivarman”(Ponniyin Selvan later became Rajaraja Chola I).SUN Picture’s gave a signal to Mani Ratnam abt the budget (Apprmtly 150Crores).It’s gonna be trillingual film a big treat to Mani-Mahi-Vikram fans & Film lovers. Music by A.R.Rahman. Stay Tunned For More….

VIJAY IN AMEER's KANNABIRAN

Director Ameer, has announced he would be joining hands with Actor Vijay for Kannabiran( for which Jayam Ravi was committed earlier). Ameer who had given big breaks for some of the current top heroes Surya(Mounam Pesiadhey), Karthi(Paruthiveeran) ,Jeeva(Raam). For all the three actors those films were the turning point in theire dream run , and they continued the legacy from their and each of them has got their own recognition by their spectacular performance.

The actors who come out from Ameer’s workshop are cultivating their talents and making a mark in the Tamil Film industry.

When it comes to Actor Vijay, the man well-known for his Star Value and has given some Block-Busters in the Tamil industry, is currently not doing well, So now the actor is keen in choosing scripts for his upcoming movies. His movie “Kaavalan” is expected to hit the theatres this December. At this meantime, Ameer has revealed that the actor would be joining hands with him for Kannabiran and talks are in the process.

Revealing about it, Ameer Says, “It’s better to postpone some things. My Film Kannabiran too falls in the same category. We both (Ameer and Vijay) discussed about it. Most of the Tamil Movie audiences are having a Commercial Hero perspective about Actor Vijay. He is an excellent actor too. The Movie Kannabiran will reveal it and let him reach the Pinnacle.Vijay would be a all together new fresh actor in this movie and I’m sure the movie would turn into success”

Gone are the days fan following for only actors were present, and these are the days even directors do have huge fan following and the leading among them might surprise many, is Ameer . And now movie Kannabiran will certainly be a grand feast for both the fans of the Actor as well as the Director.

This is star power - Article In Hindu

This is star power. Why else would hordes of fans brave the blazing sun for hours on end, just to get a glimpse of the star? Needless to say, the crowd goes delirious as he greets them; their mobiles click non-stop as he comes over to pose for photographs. Such is the star power of Tamil actor Vijay, who was shooting for director Siddique's ‘Kaavalan' at Varikkassery Mana in Ottappalam, Palakkad.

Overwhelmed by the adulation, Vijay says: “I should thank God for this. I am really touched by the affection of my Malayali fans.” His ‘Kaavalan' is the remake of Siddique's Malayalam film ‘Bodyguard.'

Action comedy

“The storyline hasn't been changed and I believe the inherent innocence of the hero is one of the key aspects in the film as well. Some changes have been done, though, keeping in mind the Tamil audience. The story moves ahead as an action comedy rather than a dialogue-oriented comedy. I have watched the original and Dileep has done a wonderful job in it. Here, I am just following what the director tells me to do,” he says.

Siddique and Vijay had worked together in ‘Friends.' In ‘Kaavalan' Asin plays his heroine. “I have worked with her in films such as ‘Sivakasi' and ‘Pokkiri'; she is a dedicated actor,” says Vijay. Mithra Kurian, Krishna Kumar and ‘Guinness' Pakru from the Malayalam film industry are also part of ‘Kaavalan,' along with Tamil actors Raj Kiran, Vadivelu and Roja.

The actor, who seems to reserve all the livewire actions and dialogues for the screen, admits that that he is an introvert. “In my mind, though, I am an extrovert – the kind that you see in my films. I do observe people and that helps me a lot as an actor,” says the actor.

He says he believes that the purpose of films is to entertain and as such he prefers formula films. “I look for roles that suit me. My concept of a film is that it should be able to connect with the audience perfectly,” says the self-confessed movie buff.

What kind of films does he prefer to watch, then? “I am in awe of films such as ‘Moondram Pirai' and ‘Mahanadi.' However, I would opt to see a masala movie like ‘Annamalai,' if it happened to release with the other films. That perhaps explains my choice of films,” he says with a laugh.

Vijay adds that he also has great regard for Malayalam films and if there was one where he would have liked to play the lead, it would be ‘Kireedam.'

Vijay's son Sanjay was seen in a song sequence in ‘Vettaikkaran' and was set to be part of ‘Kaavalan' as well. Explains Vijay: “He is concentrating on his studies now. Other than that, his focus is on cricket. If he wants to pursue a career in films, he is free to do it after he grows up.”

The interview concludes and as he begins to walk back to the set, he doesn't forget to wave to his fans. That's a star.

Friday, October 29, 2010

விஜய் பிஸி - மகேஷ் பாபுவுக்கு அதிஷ்ட்டம் - டிசம்பரில் ஷங்கரின் அடுத்த பிரமாண்டம் தொடக்கம்?

ஷங்கரின் புதிய படத்திற்கான ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது. 3 இடியட்ஸின் தெலுங்கு பதிப்பை முதலில் தொடக்குகிறார். இதற்காக மகேஷ் பாபுவுக்கு  கால்ஷீட் கொடுக்கப்பட்டுள்ளது. என கோடம்பாக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யின் பிஸி ஷெடியுலால், தமிழ் பதிப்பு தள்ளிச்செல்லும் என தெரிகிறது. இதேவேளை படத்தின் முக்கிய இரு கதாபாத்திரத்திற்கு ஆர்யா, மற்றும் சித்தார்த்த்திடம் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. இருவரும் கொலிவூட், டொலிவூட் இரண்டிலும் பிரபலமான ஹீரோக்கள் என்பதால் இம்முடிவாம்.

ஏற்கனவே, ஒரு கதாபாத்திரத்தில் ஜீவா நடிப்பதற்கு சம்மதித்துள்ளார். இழுபடும் மற்றைய கதாபாத்திரங்களுக்கும் விரைவில் முடிவு கிடைக்கும் என ஷங்கர் தரப்பு கூறியிருக்கிறது.

கலக்குவாரா காவலன்?

தமிழ் சினிமாவில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான நாயகர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கிறார்கள்...? 


 இதைக் கணக்கெடுத்துப் பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும். கனவுத்தொழிற்சாலையில் "ஸ்டார்' அந்தஸ்து பெற்று, வெற்றி நாயகனாக கோடம்பாக்கத்தில் கொடி நாட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. அதுவும் 1992-ல் "நாளைய தீர்ப்பு' படத்தின் மூலமாக அறிமுகமான விஜய்யின் ஆரம்ப காலப் படங்கள் நம்பிக்கையளிக்கும் வகையில் இல்லையென்றாலும் அந்தப் படங்களில் எல்லாம் முக்கியமான ஒரு விஷயம் மட்டும் தொடர்ந்து தலைக்காட்டிக் கொண்டிருந்தது. அது ஆக்ஷனோடு கூடிய திரைக்கதை. இந்த ஆக்ஷன் ஃபார்முலாதான் பின் நாட்களில் விஜய், "மாஸ் ஹீரோ'வாக தமிழ் சினிமாவில் தனித்து நிற்க வழி செய்தது. 



"பூவே உனக்காக' திரைப்படத்திற்கு முன்பு வரை விஜய் என்கிற நடிகனுக்கு ரசிகர்கள் பட்டாளம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருந்ததில்லை. தெளிவான திரைக்கதையுடன், குடும்ப ஒற்றுமையோடு காதலையும் நகைச்சுவையையும் சேர்த்து தனது வழக்கமான ஸ்டைலோடு அந்தப் படத்தைக் கொடுத்திருந்த இயக்குநர் விக்ரமனின் ஃபார்முலாதான், விஜய் என்கிற நடிகரை முதன் முதலாக பரவலான ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் நிறுத்தியது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விஜய்யின் பின்னால் ரசிகர்கள் பட்டாளம் திரள ஆரம்பித்ததும் இந்தப் படத்திலிருந்துதான். ஏற்கனவே விஜய் ஆக்ஷனுக்குத் தயாராகியிருந்தார். இந்நிலையில் "பூவே உனக்காக' படம், ஆக்ஷன் மட்டுமின்றி ரொமான்ஸýம் நகைச்சுவையும்கூட விஜய்க்கு கை வந்த கலை என்பதை நச்சென்று நிரூபித்தது. 
"பூவே உனக்காக' படத்தைத் தொடர்ந்து "மாண்புமிகு மாணவன்' "காலமெல்லாம் காத்திருப்பேன்' "ஒன்ஸ்மோர்' "வசந்த வாசல்' "செல்வா' "லவ் டுடே' "நேருக்கு நேர்' என்று வரிசையாகப் பட வாய்ப்புகள் கிடைத்தாலும் இந்தப் படங்கள் யாவும் காதலை மையமாக வைத்தே எடுக்கப்பட்டன. எனவே விஜய்யின் அடுத்த கட்ட பரிமாணம் என்பது வெளியுலகுக்குத் தெரியாமலேயே இருந்து வந்தது. அந்தச் சமயத்தில்தான், கேரளத்தில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் இயக்கத்தில், தமிழில் "காதலுக்கு மரியாதை' படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்கு கிடைத்தது. விஜய்யின் சினிமா பாதையில் திருப்புமுனையாக அமைந்த படமும் இதுதான்!
"நாயகனுக்குரிய கட்டுமஸ்தான உடலோ, கவர்ந்திழுக்கும் முகத் தோற்றமோ, கேட்கத் தூண்டும் குரல் வளமோ விஜய்க்கு இல்லை' என்று சில விமர்சகர்கள் அப்போது வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால் "காதலுக்கு மரியாதை' வெளிவந்த பிறகுதான் விஜய்யை குறைத்து மதிப்பிட்டவர்கள் மூக்கின் மீது விரல் வைத்து, எழுதுகோலை மாற்றி கொண்டார்கள். உன்னத இயக்குநரான பாசில், தெளிவான திரைக்கதையோடு குடும்பத்தின் ஒற்றுமையையும் காதலையும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்ததும், பாத்திரங்களை மிகச் சரியாக தேர்வு செய்து, தேவையான நடிப்பை மட்டும் வாங்கியிருந்ததும் "காதலுக்கு மாரியாதை' தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்தன. ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்ட "பூவே உனக்காக' படத்தின் வெற்றியையே இப்படம் விஞ்சி நின்றது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் பல படங்களில் நடித்தாலும் அவருக்குத் "துள்ளாத மனமும் துள்ளும்' "குஷி' "ஃப்ரெண்ட்ஸ்' "கில்லி' ஆகிய படங்களே வசூலில் சாதனைப் படங்களாக அமைந்தன.
இந்தப் படங்களிலிருந்து விஜய்யின் வெற்றிப் ஃபார்முலாவை நாம் கணிக்க முடியும். ஆக்ஷன் கலந்த காதல், நகைச்சுவை பாணி அவருக்குப் பெரிய அளவில் கைகொடுத்ததோடு ஏராளமான ரசிகர் மன்றங்களையும் உருவாக்கித் தந்தது. தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இப்படித்தான் விஜய் இடம் பிடித்தார். அவருக்கு இணையாக பல வெற்றிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜித்திற்கும் இவருக்குமான ஆரோக்கியமுள்ள தொழில் போட்டி,கோலிவுட்டிற்கு வலிமை தந்தது என்று பெருமிதத்தோடு சொல்லலாம். 
சரி! அடுத்த கட்டத்துக்கு வருவோம்! சமீப காலங்களில் விஜய்யின் வெற்றி ஃபார்முலா, ஏனோ அவருக்குத் தொடர்ந்து கை கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி அவருடைய சமீபகாலப் படங்கள், எதிர்பார்த்த வெற்றியை ஈன்றெடுக்கவில்லை. "கில்லி' படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு "போக்கிரி' சுமாரான வெற்றியுடனே நின்று கொண்டது. விஜய்யின் படங்கள் பெரும்பாலும் அஜித்தின் படங்களுக்குப் போட்டியாகக் களமிறக்கப்படும். 
இந்தப் போட்டியில் இருவரும் சரிக்குச் சமமான வெற்றிகளைக் குவித்து, ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜீத் என்று பேசப்படுமளவிற்கு உயர்ந்தார்கள். ஆனாலும் அவர்கள் இருவருடைய சமீபத்திய படங்கள் யாவும் பெரிதாகப் பேசப்படாதது, ரசிகர்களைப் பொருத்தவரை துரதிருஷ்டமே! இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில் "பில்லா' வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமானது. இது விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் போட்டி மனப்பான்மையைத் தூண்டுமளவிற்குப் போனது எனலாம்.
இப்படிப்பட்ட வித்தியாச சூழ்நிலையில்தான் விஜய் திடீரென அரசியல் பயணத்தில் பிரவேசிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதனை முன்னிட்டு அவர் டெல்லியில் உள்ள பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணின. எது எப்படியோ... விஜய்யின் அரசியல் மீதான ஆர்வம், இந்த நிகழ்வுகளின் வழியாக எந்த அரசியல் சார்பும் இல்லாத ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கின்றனர். "விஜய் அரசியலுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தால் என்ன செய்வது?' என்று சில தயாரிப்பாளர்களே கவலைப்பட்டதாகவும் தகவல் உண்டு. 
இந்தச் சமயத்தில்தான் சினிமா துறையினர் நடத்திய பாராட்டு விழா ஒன்றில் அஜித் துணிச்சலாக தன் கருத்தை வெளிப்படுத்த, அதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஜினி எழுந்து நின்று கைத்தட்டினார். இது ரஜினியின் வலுவான ஆதரவு அஜித்திற்கு இருக்கிறது என்பதைக் காட்டியது. "ரஜினி ஸ்டைலில்' விஜய் பயணிக்க, ரஜினியின் ஆதரவோ அஜித்துக்கு மட்டுமே என்ற மாயத் தோற்றம் உருவானது.
இந்தத் தருணத்தில், சூர்யா நடித்த "சிங்கம்' வெளியாகி சிம்ம கர்ஜனையாக வெற்றி சங்கு ஊத, கோலிவுட்டில் "மும்முனைப் போட்டி'க்கு அஸ்திவாரம் போடப்பட்டது. ஏற்கனவே களத்தில் அஜித் இருப்பதும், மேலும் சூர்யாவும் அந்தக் களத்தில் போட்டிக்கு நிற்பதும் தற்போது விஜய்க்கான நெருக்கடியை மேலும் அதிகமாக்கியுள்ளன. இப்போது கட்டாயமாக ஒரு மெகா வெற்றியைக் கொடுத்து தன்னை மீண்டும் நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் விஜய். திறமையானவர்கள், நேசத்தோடு போட்டி போடுவது என்பது கலா ரசிகர்களுக்குத் தித்திப்பான விஷயம்தானே!
ஏற்கனவே "ஃப்ரெண்ட்ஸ்' படத்தின் மூலம் விஜய்க்கு வெற்றியை வழங்கிய இயக்குநர் சித்திக், "காவலன்' என்கிற பெயரில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கிக் கொண்டிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் பரபரப்பு! இந்த "காவலன்', மலையாளத்தில் சித்திக் இயக்கிய "பாடிகாட்' திரைப்படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வெற்றி படங்களில் நடித்து ராசியான நடிகை என்று பெயரெடுத்த அசின், பாலிவுட்டில் சென்று கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவரின் கால்ஷீட்டிற்காகக் காத்திருந்து, தன் படத்திற்கு அழைத்து வந்திருக்கிறார் சித்திக். அதோடு காமெடிக்கு அதே "ஃப்ரெண்ட்ஸ்' கூட்டணியில் இருந்த வடிவேலுவையும் துணை சேர்த்திருக்கிறார். பொதுவாக விஜய்க்கு ஆக்ஷன், ரொமான்ஸ் மட்டுமின்றி காமெடியும் நன்றாக வரும் என்பது உலகறிந்த உண்மை. இருந்தபோதிலும் வடிவேலுவையும், அசினையும் இயக்குநர் சித்திக் அழைத்து வந்திருப்பதால் விஜய்க்கு மீண்டும் ஒரு மெகா ஹிட் அமையப் போகிறது என்று ரசிகர்கள், ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்; ஏன் நாமும்தான்! 
ஆரம்பத்தில் "காவல்காரன்' என்றிருந்த படத்தின் தலைப்பு பிரச்சினைக்குள்ளாகி, பிறகு "காவல் காதல்' ஆகி, அதை ரசிகர்கள் விரும்பாததால் தற்போது "காவலனி'ல் வந்து முடிந்திருக்கிறது. அசினும் பாலிவுட்டில் இப்போது "பயங்கர பிஸி' என்ற நிலையில் இல்லை. எனவே தமிழில் அழுத்தமான ஒரு "மறு பிரவேசம்' கொடுக்க, நிச்சயம் காவலனில் கடுமையாக உழைத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும், செலவைப் பற்றி கவலைப்படாமல், இப்படத்தின் டூயட் காட்சிகளை ஐரோப்பாவில் எடுத்திருக்கிறார் சித்திக். மொத்தத்தில் அசின் - சித்திக் - ஐரோப்பா என்ற பலத்த பின்னணியோடு, முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிக் களத்தில், விரைவில் இறங்கப் போகிறார்.
மலையாளத்தில் தொடர் வெற்றிப் பட இயக்குநராக உள்ள சித்திக்கின் இயக்கத்தில் வெளியான "ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்' "காட்ஃபாதர்', "வியட்நாம் காலனி', "ஃப்ரெண்ட்ஸ்',"குரோனிக் பாச்சிலர்' "ஹிட்லர்', "இன் ஹரிஹர் நகர்' உள்ளிட்ட அனைத்துப் படங்களும் மெகா ஹிட்டானவை. மலையாளத்தின் "பெரிய சேட்டன்கள்' அனைவரும் இவருடைய இயக்கத்தில் நடித்துள்ளார்கள் என்பதாலும், மலையாளத்தின் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான பாசிலின் சீடர்தான் சித்திக் என்பதாலும் விஜய்க்கு அவரால் நிச்சயம் ஒரு மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுக்க முடியும். இந்த நம்பிக்கை ரசிகர்கள் மத்தியிலும், விஜய் தரப்பிலும் ஆணித்தரமாகப் பதிந்திருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் பற்றிய அறிமுகத்தைத் தந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஜய், 


"நான் நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்தின் தலைப்பிற்காக இந்த அளவிற்குப் பிரச்சினைகளைச் சந்தித்தில்லை. முதலில் "காவல்காரன்' என்று வைத்த தலைப்பு பிரச்சினையை எழுப்பியது. பிறகு, "காவல் காதல்' என்று மாற்றி வைத்திருப்பதாக யாரோ புரளியை ரசிகர்கள் மத்தியில் பரப்பி விட்டனர். 

இந்தத் தலைப்புப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துதான் நாங்கள் தற்போது "காவலன்' என்று பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறோம். பொதுவாக என்னுடைய படங்களில் ஆக்ஷன் மேலோங்கியிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ஆக்ஷனோடு ஒரு இனிமையான, சுகமான காதலும் இருக்கும். இதில் அப்பாவித்தனமான ரொமான்டிக் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 
அசின் ஒரு சிறந்த நடிகை. திடீரென்று அவர் பாலிவுட் பக்கம் போய் பிஸியாயிட்டார். அவரை மறுபடியும் தமிழுக்கு வாங்க என்று கூறி அழைத்து வந்தோம். அவர் மறுபடியும் பாலிவுட் பக்கம் போய்விட்டதால் படம் முடிப்பதில் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றார். அவரது பேச்சில், அவருக்கே உரிய தன்னம்பிக்கை ஜொலித்தது.
நகைச்சுவையிலேயே நவரசம் காட்டத் தெரிந்த வித்தகரான வடிவேலு, ""நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இயக்குநர் சித்திக் ஸôரிடம்தான் நிறைய கற்றுக் கொள்கிறேன். அவர் நினைத்தது கிடைக்கும் வரை விடவே மாட்டார். அவரது டைமிங் காமெடி சூப்பராக இருக்கும். சில இயக்குநர்களின் படங்களில் என்னதான் காமெடி பண்ணினாலும் கடைசியில் கத்திரி ஒன்றை வைத்திருப்பார்கள். ஆனால், சித்திக் ஸôர் கத்திரியே இல்லாத இயக்குநர். 
இந்தப் படத்தில் என்னுடைய திறமைகளை வெளிப்படுத்த ஏகப்பட்ட வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். விஜய்யுடன் இணைந்து நான் பண்ணிய காமெடிகள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்பட்டன. இந்தப் படத்திலும் எங்களது கூட்டணி பண்ணிய ரகளையான காமெடி கண்டிப்பாகப் பேசப்படும். பல்லு முளைத்த குழந்தைகள் முதல் பல்லு போன தாத்தாக்கள் வரை அனைவரும் ரசிக்கும் காமெடியுடன் கூடிய படம் இது'' என்று அன்றைய தினம் பேசியது, நமது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 
""விஜய்யுடன் இது எனக்கு மூன்றாவது படம். இதற்கு முன் எங்கள் கூட்டணியில் வெளிவந்த "சிவகாசி', "போக்கிரி' ஆகிய இரண்டு படங்களும் பெரிய ஹிட். அதனால் இந்தக் "காவலன்' படமும் நிச்சயம் ஹாட்ரிக் வெற்றியைப் பெறும். விஜய்யின் காதல் படங்களைப் பார்த்து நான் மிகவும் ரசித்திருக்கிறேன். எனக்கும் அந்த மாதிரியான படங்களில் விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா? என்று யோசித்திருக்கிறேன்.
அது இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்தை நான் லவ் ஸ்டோரி படமாகத்தான் பார்க்கிறேன்'' என்று அசினும் அசத்தலாகப் பேசியது, செய்தித் தாள்களில் விவரமாகவே வெளியாகியுள்ளது. 
சிறந்த டைரக்டரான சித்திக், ""காவலன்' படத்தின் கதை மிக வலுவானது. ஊரில் பெரிய தாதாவான ராஜ்கிரண் மனம் திருந்தி அமைதியாக வாழ விரும்புகிறார். 
அப்போது தன் மகள் அசினுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக விஜய்யை காவலனாக நியமிக்கிறார். இந்தக் காவலன், தாதாவின் சம்மதத்துடன் பின்னால் எப்படி அசினுக்கு கணவனாகிறார்? என்பதை என்னுடைய வழக்கமான திரைக்கதைப் பாணியில் உருவாக்கியிருக்கிறேன்'' என்றார்.
தமிழில் விஜய் எப்படித் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் வசூலை வாரிக் கொடுக்கும் நாயகனாக இருக்கின்றாரோ (சில தோல்விப் படங்களை மறப்போம்), அதேபோல பாலிவுட்டில் பல தயாரிப்பாளர்களுக்கு பொன் முட்டையிடம் வாத்தாக இருந்தவர் சல்மான்கான். பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு இருந்த அவரின் சமீபத்திய பெரும்பாலான படங்கள் தொடர் தோல்வியைத் தழுவி, அவரின் மார்க்கெட்டை படு பாதாளத்திற்குத் தள்ளின. 
சுதாரித்துக்கொண்ட சல்மான்கான், முதலில் செய்தது அழுத்தமான கதையுடன் கூடிய விறுவிறுப்பான கமர்ஷியல் திரைக்கதையைத் தேர்ந்தெடுத்து "டபாங்' என்ற படத்தில் நடித்ததுதான்! இப்படம் அவர் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுத்தந்துள்ளது. முதல் வாரத்தில் மட்டும் "டபாங்' திரைப்படம் சுமார் 48 கோடி ரூபாய் வசூலை ஈட்டித் தந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. ஒரு பிரபல இந்திய நாளிதழ், ""இதுவரை சல்மான்கான் நடித்த படங்களிலேயே "டபாங்' படத்தில்தான் அவருடைய உடலமைப்பிற்கு ஏற்ற கச்சிதமான பாத்திரம் கிடைத்துள்ளது. அவருக்கென்று ஒரு புது பாணி அமையுமளவிற்கு படம் சிறப்பாக வெளிவந்துள்ளது'' என்று கருத்து வெளியிட்டுள்ளது.
சல்மான்கான் மாறுபட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டிருப்பதும், சிறந்த கதையைத் தேர்ந்தெடுத்திருப்பதும்தான் அவரின் சமீபத்திய வெற்றிக்கான காரணம். அதே ஃபார்முலாவில் இப்போது "காவலன்' விஜய்யும் பிரவேசித்திருக்கிறார். அதற்காக "அட்வான்ஸ்' வாழ்த்துகளை இப்போதே சொல்லுவோம்!

இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கு-விஜய் ஓப்பன்டாக்!

“காவலன்” படத்தில் நடித்து முடித்துவிட்ட இளைய தளபதி விஜய் தற்போது “வேலாயுதம்” படத்தில் பி்ஸியாகவுள்ளார். பிரபல வார நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் இளைய தளபதி விஜய் ஸ்பெஷல் பேட்டியளித்துள்ளார். “தமிழ் சினிமாவை தொடர்ந்து கவனித்துவருபவர் நீங்கள், இன்றைய தமிழ்சினிமா எப்படி இருக்கிறது” என்ற நிறுபரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் விஜய்.
அவர் கூறியிருப்பதாவது :
ஷங்கர் சார்… சான்ஸே இல்லீங்க, ஒரு கிரியேட்டரா ரொம்ப நல்லா செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். யார் வேணும்னாலும், எது வேணும்னாலும் நினைக்கலாம். ஆனால் அதை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவருவது என்பது ரொம்பகஷ்டம். அது வேறமாதிரி பொறுப்பு. ஷங்கர் சாரோட எல்லா படங்களிலும் அவர் நினைத்ததை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டுவந்துவிடுகிறார். அவரை நினைக்கும்போது ஒரு தமிழனா  எனக்கு ரொம்ப பெருமையாயிருக்கு.
அமீர்… அவர் டைரக்ட் பண்ண பருத்திவீரன் படம் வந்து கிட்டதட்ட 3 வருஷமாச்சு. ஆனா இன்னும் அவரோட பருத்திவீரன மறக்க முடியல. இந்தமாதிரி நல்ல படம் எடுத்தா அமீரை கொண்டாடலாம். நான் கொண்டாடுரேன். அடுத்து சசிக்குமார்… சுப்ரமணிபுரம்தான் அவருக்கு முதல் படம். ஆனா மிரட்டியிருப்பாரு சசி… சமீபத்துல இந்த மாதிரி முதல் படமே மிரட்டலா யாராவது பண்ணியிருக்காங்களான்னா… எனக்கு தெரியல.
தமிழ் சினிமாவில் திறமையானவங்க நிறையபேர் இருக்காங்க… எனக்கு எல்லோரையும் பிடிக்கும், என்ன… இவங்கள கொஞ்சம் அதிகமா பிடிக்கும்” என்று கூறியிருக்கிறார் தளபதி.
 விஜய்யின் “காவலன்” டிசம்பர் 24-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Shakthi Chidambaram acquires 'Kavalan'

t's official now. The distribution rights of Vijay's forthcoming film 'Kavalan' have been acquired by Cinema Paradise, a production house run by popular filmmaker Shakthi Chidambaram.
"The rights have been bagged by Shakthi Chidambaram for a whopping price since he found the film a safe bet considering various factors like Vijay, Vadivelu, Asin and Siddique", sources in the know say.
A remake of Malayalam hit 'Bodyguard', 'Kavalan', produced by Romesh Babu is the 51st film of Vijay and it brings together the actor with ace Malayalam director Siddique, along with whom he delivered the memorable 'Friends' a decade ago.
On the film, Vijay says, "It will have action, romance and humour at right mix. I admire director Siddique, who has a firm grip on the story. It is not a raw action film as the title would suggest. Like my past movies, there would be romance in it. Asin has done her best. Vadivelu will bring the roof down with laughter".

VIJAY'S FAMILY AND NAANUM EN KAADHALUM

Naanum En Kaadhalum is a forthcoming Tamil film directed by popular art director SAC Ramji and produced by Jebi for UniPay 2U Productions. Jebi was the manager to Vijay and his father director SA Chandrasekar.
In Naanum En Kaadhalum, Shobha Chandrasekar has rendered a racy song along with folk singer Jayamurugan. The director, wanting to try out something totally new in this film, has roped in 200 elderly people to dance along with the lead pair.
Anand and Shwetha will make their debut in Kollywood with this film.

Latest news

*Superstar Prince Mahesh Babu entering into 25films club with "DHOOKUDU"(Childhood - 9 + Hero - 16)
*Mani Ratnam sir is very serious abt his his Next flick with Mahesh Babu 

*Tamil Version of "VETTAI" Startd yesterday
*Arya - Tammnah & Madhavan - Sameera eddy are lead roles, Direct'ng by Lingusaami.
*Mahi wil join them soon.

*The movie "VETTAI" is Renamed in Telugu as "VETA".

Thursday, October 28, 2010

விஜய் காவலன் still




மெலடியால் மயக்கவரும் காவலன்

தற்போதய விஜய் படங்களில் குத்து பாடல்களுக்கு முக்கியதுவம் கொடுக்கபடுகின்றன அப்படங்களில் ஒரு மெலடி பாடல் இடம்பெறும் ஆனால் காவலன் படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளன அதில் 4 மெலடி பாடல்களும் ஒரு குத்து பாடலும் இடம்பெறுகின்றன

விஜய்க்கு 51 வித்தியாசாகருக்கு 245

விஜய் நடிக்கும் 51 வது படம் காவலன்.காவலன் படம் இசை அமைப்பாளர் வித்தியாசாகருக்கு அவர் இசை அமைக்கும் 245 வது படமாக அமைந்துள்ளது.பல சூப்பர் கிட்ஸ் பாடல்களை கொடுத்த வித்தியாசாகருக்கு மெலடி கிங் என்ற பட்டமும் உண்டு.வித்தியாசாகரும் விஜயும் சேர்ந்த படபாடல்கள் கிட்டாக அமைந்தன அத்துடன் படங்களும் கிட்டாக அமைந்தன.கில்லி,குருவி,திருப்பாச்சி (ஒரு பாடல்),ஆதி,திருமலை என விஜயும் வித்தியாசாகரும் இனைந்து பணியாற்றிய படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.அக்கூட்டணியில் வெளிவர இருக்கும் காவலனும் இசையில் மட்டும் மல்ல படத்திலும் கிட்டாக அமையும் என நம்பலாம். 

தீபாவளியன்று காவலன் இசையா ?

விஜயின் காவலன் பட இசை வெளியீட்டு விழா எங்கே நடைபெறும் என தெரியாத நிலையில் இப்பொழுது இசை வெளியீடு பற்றி புதிய செய்தி கசிய தொடங்கிவிட்டது.காவலன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் எனவும் அவ் இசை வெளியீட்டு விழா வித்தியாசாகருக்குரிய பாராட்டு விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.அத்துடன் இவ்விழா தீபாவளி தினத்தன்று நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

விஜயும் ரீமேக்கும்

இதுவரை விஜய் நடித்த பிற மொழி ரீமேக் படங்கள் விஜய்யை ஏமாற்றியதில்லை.அப்படங்கள் பல விஜய்க்கு திருப்புமுனை படங்களாகவே அமைந்தன.தற்போது விஜய் மீண்டும் ரீமேக் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.விஜய் நடித்து கொண்டிருக்கும் காவலன் மலையாள படமான Bodyguard படத்தின் ரீமேக் ஆகும்.அதனை தொடர்ந்து நடிக்கும் வேலாயுதம் அஸாத் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும்.அதன் பின் நடிக்கவிருக்கும் 3இடியட்ஸ் கிந்தி 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்காகும்.அதன் பின் நடிப்பதத்திற்கு பிருந்தாவனம் தெலுங்கு படத்தை விஜய் விரும்புவதாக கோடம்பக்கத்து குருவி கிசுகிசுக்கிறது.எப்படியோ தலைவா பட்டையை கிளப்புங்கோ.

Wednesday, October 27, 2010

காவலன் இசை வெளியீட்டு விழாவில் நிலவும் குழப்பம்

இப்பொழுது தமிழ் சினிமா படங்களின் இசை வெளியீட்டு என்றால் வெளிநாடுகளில் நடத்துவது என புதிய பரிமாணம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் கீரோக்களின் படங்களுக்கு இது முக்கியமாக பொருந்துகிறது.விண்ணைதாண்டி வருவாயா இசை வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது.அதை தொடர்ந்து எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகராக ஒச்சாயி என்ற சிறிய பட்ஜெட் பட இசை வெளியீட்டு விழா அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது.இவ்வாறு இசை வெளியீட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்துவது தொடர்கிறது.வானம் இசை வெளியீட்டு விழா லண்டனிலும் மன்மதன் அம்பு சிங்கபூரிலும் வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இதை போலவே காவலன் பட இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைப்போம் என பட தயாரிப்பாளர் விஜய்யிடம் கேட்க்கா விஜய் மறுத்துவிட்டாராம்.சிங்கபூரில் வைப்போம் என கேட்கவும் மறுத்துவிட்டாராம் நம்ம இளையதளபதி.எங்கே இசை வெளியீட்டு விழா என அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tuesday, October 26, 2010

அதிவிரைவில் காவலன் இசை




த்ரி இடியட்ஸ் பற்றி கேட்காதீங்க ஹீரோக்கள் கப்சிப்!

த்ரி இடியட்ஸ் படத்தில் இலியானவை புக் பண்ணியாச்... முதல் பாட்டு கூட ஹாரிஸ் போட்டுட்டாராம்... இப்படி திரும்புகிற திசையெல்லாம் தில்லாலங்கடி பாடிக் கொண்டிருக்கிறது த்ரி இடியட்ஸ் பற்றிய செய்திகள். ஆனால் நாம் கேள்விப்படுகிற சில தகவல்கள் இவ்விஷயத்தில் கொசு மருந்து அடிப்பதுதான் ஆச்சர்யம்!
சமீபத்தில் முன்னணி வார இதழ் ஒன்றுக்காக ஜீவாவை சந்திக்க போனார் நிருபர் ஒருவர். அவரிடம் 'அண்ணே... என்ன வேணும்னாலும் கேளுங்க. த்ரி இடியட்ஸ் பற்றி மட்டும் வேணாம்' என்றாராம் ஜீவா. அடுத்தடுத்த சில நாட்களில் விஜய்யை சந்திக்க போனார் இன்னொரு நிருபர். அவரது பி.ஆர்.ஓ, 'சாரிடம் த்ரி இடியட்ஸ் பற்றி எதுவும் கேட்டுற வேண்டாம்' என்றாராம். இந்த வாரம் முன்னணி வார இதழ் ஒன்றில் டைரக்டர் ஷங்கரின் பேட்டி கூட வந்திருக்கிறது. இதிலும் ஒரு ஃபார்மாலிடிக்கு கூட த்ரி இடியட்ஸ் பற்றி கேள்வியில்லை. அப்படின்னா என்னதான் நடக்குது.
சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படையாக வாயை திறக்காத வரை முட்டைக்குள் இருப்பது ஆம்லட்டா, பொடிமாஸ்சா என்கிற குழப்பம் தொடரும்!